‘ஸ்மார்ட் பஜார்’ முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. மார்ச் 31-க்குள் அதிரடி அறிவிப்பு..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்கனவே பியூச்சர் குரூப்-ன் 200 கடைகளைக் கைப்பற்றிய நிலையில், நேற்று 950 கடைகளுக்கான சப்லெட் ஒப்பந்தத்தை ரத்துச் செய்து உள்ளது. இதனால் பியூச்சர் குரூப் இந்த 950 கடைகளுக்கான குத்தகை பணத்தை உடனடியாகச் செலுத்த வேண்டும் இல்லையெனில் குத்தகை ஒப்பந்தம் புதுப்பிக்க முடியாமல் ரத்தாகும். இதன் வாயிலாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் இந்த 950 கடைகளையும் கைப்பற்ற முடியும். மேலும் இந்த 950 கடைகளையும் புதிய பிராண்டின் கீழ் வர்த்தகம் செய்யத் … Read more

“ரஷ்யா – உக்ரைன் போரில் இந்தியா நடுநிலை வகிப்பது ஏன்?” – விளக்கிய பிரதமர் மோடி

நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதிலும் முக்கியமாக உத்தரப்பிரதேசத்தில் 37 ஆண்டுகளாக எந்த கட்சியினாலும் அரங்கேறாத சாதனையாக பா.ஜ.க இரண்டாவது முறையாக உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியமைக்க உள்ளது. பா.ஜ.கவின் இந்த வெற்றியை இந்தியா முழுவதும் உள்ள பா.ஜ.கவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் பா.ஜ.கவின் வெற்றி கூடத்தில் பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் விவகாரத்தில் இந்தியா … Read more

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  8.12 லட்சம் சோதனை- பாதிப்பு 4,194

டில்லி இந்தியாவில் 8,12,365 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 4,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,194 பேர் அதிகரித்து மொத்தம் 4,29,84,261 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 255 அதிகரித்து மொத்தம் 5,15,714 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 6,208 பேர் குணமடைந்து இதுவரை 4,24,26,328 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 42,249 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று இந்தியாவில் 16,73,515 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு … Read more

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் அடுத்த மாதம் 16-ந் தேதி தொடங்குகிறது

சென்னை: அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்குகிறது. ஏப்ரல் 16-ந்தேதியில் இருந்து மே மாதம் 31-ந்தேதிக்குள் வட்டார தலைவர்கள், பிரதேஸ் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் ஜூலை 20-ந்தேதிக்குள் மாவட்ட தலைவர்கள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். ஜூலை 21-ந் தேதியில் இருந்து ஆகஸ்டு 20-ந் தேதிக்குள் மாநில பொதுக்குழு, செயற்குழு, மற்றும் மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும். மாநில தலைவர்களுக்கான தேர்தல் … Read more

போதிய பயிற்சியில்லாதோர் ரஷ்யாவுடன் போரிட களத்துக்கு அனுப்பப்பட மாட்டார்கள்.: உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர்

உக்ரைன்: ராணுவத்தில் சேர்ந்த போதிய பயிற்சியில்லாதோர் ரஷ்யாவுடன் போரிட களத்துக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். சிறந்த பயிற்சி பெற்ற வீரர்களால்தான் ரஷ்ய ராணுவத்தை இதுவரை தடுத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

அம்பர்கிரிஸ்: பல கோடி ரூபாய் மதிப்பு; ரகசிய தகவலால் சிக்கிய 5 பேர்! – தப்ப முயன்றவர் படுகாயம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மருத்துவமனை சாலையில் உள்ள ஒரு வீட்டில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான திமிங்கல கழிவு (அம்பர்கிரிஸ்) பதுக்கி வைத்திருந்து விற்பனை செய்ய முயல்வதாக ரோசனை காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் (9.03.2022) ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி ரோசனை உதவி ஆய்வாளர் அருள்தாஸ், திண்டிவனம் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராசன் தலைமையிலான காவல்துறை குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் ரத்தக் கடலான … Read more

போரில் தோற்றதாக ரஷ்யாவிடம் சரணடைகிறதா உக்ரைன்? வெளியான முக்கிய தகவல்

நான்காவது முறையாக போர் தொடர்பில் உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் ஆகியோர் துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். கடந்த மாதம் 24-ம் திகதி ரஷ்ய ஜனாதிபதி புடின் உத்தரவின் பேரில் உக்ரைனில் ரஷ்யப் படையினர் தொடங்கிய போர் 15-வது நாளாக தொடர்கிறது. பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தாலும் ரஷ்யா அடங்க மறுக்கிறது. போர் நிறுத்துவது தொடர்பாக பெலாரஸில் மூன்று முறை உக்ரைனும், ரஷ்யாவும் … Read more

ரயில் பயணிகளுக்கும் மீண்டும் போர்வைகள் வழங்கப்படும்

சென்னை ரயில்களில் ஏ சி பெட்டிகளில் பயணிப்போருக்கு மீண்டும் போர்வைகள் வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் கடுமையாக கொரோனா பரவல் அதிகரித்தது.   அதையொட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விரைவு ரயில்களில் ஏசி பெட்டிகளில் போர்வைகள், கம்பளிகள், தலையணைகள் வழங்குவது நிறுத்தப்பட்டது.   மேலும் முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே ரயில் பயணம் செய்யும் வகையில் முன்பதிவில்லா பெட்டிகள் நீக்கப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது.  இதையொட்டி இடையில் நிறுத்தப்பட விரைவு ரயில்கள் … Read more

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக 19 தமிழக மீனவர்கள், 6 வடமாநில மீனவர்கள் உள்ளிட்ட 25 பேரை செஷல்ஸ் நாட்டு கடற்படை கைது செய்தது!!

செஷல்ஸ் : எல்லைதாண்டி மீன் பிடித்ததாக 19 தமிழக மீனவர்கள், 6 வடமாநில மீனவர்கள் உள்ளிட்ட 25 பேரை செஷல்ஸ் நாட்டு கடற்படை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் தூத்துக்குடி மாவட்டம் தூத்தூர், பூத்துறையை சேர்ந்த மீனவர்கள் சூசை நாயகம், அந்தோணி ஆகியோரின் இரண்டு படகுகள் செஷல்ஸ் நாட்டு கடற்படையால் பறிமுதல் செய்ய