கவர்னர் தமிழிசையிடம் மலேஷியா பெண் எம்.எல்.ஏ., புகார்| Dinamalar

புதுச்சேரி: மலேஷிய பெண் எம்.எல்.ஏ.,வின் முகநுால் பக்கத்திற்கு, ஆபாச பதிவு அனுப்பிய புதுச்சேரி நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கவர்னர் தமிழிசையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மலேஷியா நாட்டின் பகாங் மாநிலம், சபாய் சட்டசபை எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் தமிழச்சி காமாட்சி துரைராஜ். மலேசியவாழ் தமிழரான இவருக்கு, ஐந்து நாட்களுக்கு முன், புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிவேல் பிரகாஷ் என்ற பெயரில் ஒருவர் முகநுால் மூலம் அறிமுகமாகி உள்ளார்.அவரது அறிமுகத்தை ஏற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., அவருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார். பதிலுக்கு … Read more

பிரதமர் மோடி பஞ்சாப் வருகையால் விவசாய சங்க தலைவர்களுக்கு வீட்டுக்காவல்

ஜலந்தர்,  பிரதமர் மோடி, கடந்த மாதம் பஞ்சாப்புக்கு சென்றபோது, விவசாய சங்கத்தினரின் மறியல் போராட்டத்தால் டெல்லிக்கு திரும்ப செல்ல வேண்டியதாகி விட்டது. அச்சம்பவத்துக்கு பிறகு முதல்முறையாக நேற்று அவர் பஞ்சாப் மாநிலத்துக்கு சென்றார். அவர் வருகையின்போது மீண்டும் எந்த அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். விவசாய சங்க தலைவர்களின் வீடுகளுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலைவரை படையெடுத்தனர். அவர்களை வீட்டுக்காவலில் வைத்தனர். அவர்கள் வீடு அமைந்துள்ள கிராமங்களை … Read more

உச்சம் தொடும் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை..7 வருட உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை..!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனையானது எந்த நேரத்தில் போர் வரலாம் என்ற பதற்றமான நிலையில் உள்ளது. இதற்கிடையில் உக்ரைன் எல்லையில் 1 லட்சம் படைகளுக்கு மேல் குவித்துள்ள ரஷ்யாவை, 48 மணி நேரத்திற்குள் பேச்சு வார்த்தைக்கு வர வேண்டும் என உக்ரைன் கெடு விதித்துள்ளது. உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளை குவித்து வருவதாகவும், குண்டு வீச்சும் இருக்கலாம் என அமெரிக்க எச்சரித்துள்ளது. இந்த பதற்றமான நிலைக்கு மத்தியில் பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு மக்களை, … Read more

“ரஷ்யா எங்கள் மீது நாளை போர் தொடுக்கலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது!" – உக்ரைன் அதிபர்

உக்ரைன் எல்லையில் கடந்த சில நாள்களாகவே போர் பதற்றம் நிலவி வருகிறது. அதனால், இந்த விவகாரம் உலக அளவில் அனைவராலும் உற்றுநோக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது முகநூல் பக்கத்தில் உக்ரைன் மீது ரஷ்யா மீது நாளை (பிப்.16) தாக்குதல் நடத்த இருப்பதாகத் தகவல் வெளியாகியிருப்பதாக தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு எல்லைக்கு அருகில் ரஷ்ய ராணுவம் சுமார் ஒரு லட்சம் தரைப்படைகளையும், போர் தளவாடங்களையும் … Read more

கொலை நடந்த இடம் வழியாக வருபவர்களை கெட்ட வார்த்தையால் திட்டித் துரத்தும் பெண்ணின் ஆவி… பிரித்தானியாவில் ஒரு திகில் அனுபவம்

பிரித்தானியாவில் உள்ள ஒரு இடத்தின் வழியாக நடந்து செல்பவர்களை ஒரு பெண்ணின் ஆவி கெட்ட வார்த்தையால் திட்டித் துரத்துவதாக பலர் தெரிவித்துள்ளார்கள்.  இங்கிலாந்திலுள்ள Somerset என்ற இடத்தில், Dead Woman’s Ditch என்று அழைக்கப்படும் இடம் ஒன்று உள்ளது. 1789ஆம் ஆண்டு, Jane Walford என்ற பெண், அந்த இடத்தில் வைத்து தன் கணவனான John என்பவரால் கொலை செய்யப்பட்டார். அத்துடன், 1988ஆம் ஆண்டு, Shirley Banks என்ற பெண்ணின் உடல் அதே இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. அந்த … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி சென்னையில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்! மாவட்ட கலெக்டர்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி சென்னையில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயாராணி அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த  12,838 வார்டு களுக்கு  பிப்ரவரி மாதம்  19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி, டாஸ்மாக் கடைகள்  பிப்ரவரி 17 … Read more

வினாத்தாள் கசிந்த விவகாரம்- குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை

சென்னை: கொரோனா பரவலுக்கு இடையே பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடைபெற இருப்பதால் அதற்காக மாணவர்களை தயார்படுத்தும் நிலையில் ஆசிரியர்கள் கற்றல் பணியை தீவிரப்படுத்தி வருகிறார்கள். 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு கடந்த 9-ந் தேதி தொடங்கியது. காலையில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும், மதியம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. பொதுத்தேர்வை எப்படி … Read more

கடலூரில் பரபரப்பு: வள்ளி விலாஸ் நகைக் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

கடலூர்: கடலூர் மாவட்டம் வள்ளி விலாஸ் நகைக் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லாரன்ஸ் சாலையில் உள்ள கடையில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். விருதாச்சலத்தில் உள்ள ஜெயின் நகை கடையிலும் உரிமையாளர் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவில் 27 ஆயிரமாக குறைந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று 34 ஆயிரமாக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணிநேரத்தில் 27 ஆயிரமாக குறைந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,409 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,26,92,943 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 82,817 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,17,60,458 ஆனது. தற்போது 4,23,127 பேர் … Read more

கர்நாடகத்தில் பி.யூ.சி. உள்பட கல்லூரிகள் நாளை திறப்பு மாநில அரசு அறிவிப்பு

பெங்களூரு,  உடுப்பி மாவட்டத்தில் அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. இதுதொடர்பாக மாணவர்கள் கடந்த 8-ந் தேதி போராட்டம் நடத்தினர். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து பதற்றம் ஏற்பட்டதால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கர்நாடக ஐகோர்ட்டு மாணவர்கள் மத அடையாள ஆடைகளை அணிந்து வகுப்புக்கு வர … Read more