மாணவி லாவண்யா தற்கொலைக்கு காரணமான வார்டனை சிறைவாசலில் வரவேற்ற திருச்சி எம்எல்ஏ…! மீண்டும் சர்ச்சை…

தஞ்சாவூர்: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமின் நேற்று வெளியே வந்த வார்டன் சகாயமேரிiய சிறை வாசலுக்கு சென்று திருச்சியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ சால்வை அணிவித்து வரவேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வார்டன் சகாய மேரியை சிறை வாசலில் வரவேற்ற காங். எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஏற்கனவே மாணவியின் தற்கொலை வழக்கில், திமுகவினரும், திமுக கூட்டணி கட்சியினரும், காவல்துறையினரும் ஒருதலைப்பட்சமாக பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வந்ததால், வழக்கை … Read more

உயர்வுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் நேற்று குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 56,405.84 புள்ளிகளுடன் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு பங்குச்சந்தை தொடங்கியதும் 265 புள்ளிகள் உயர்ந்து 56,731 புள்ளிகளுடன் வர்த்தகமானது. பங்குச்சந்தையின் இடையில் அதிகபட்சமாக 550 புள்ளிகள் உயர்ந்து 56,955.09 வர்த்தகமானது. குறைந்சபட்சமாக 56,539.32 புள்ளிகளுடன் வர்த்தகமானது. தற்போது 10 மணி நிலவரப்படி வர்த்தகம் சென்செக்ஸ் புள்ளிகள் 210 புள்ளிகள் உயர்ந்து 56,615.95 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. அதபோல் தேசிய பங்குசந்த்தையில் நிஃப்டி இன்று காலை … Read more

தேனி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி!!!

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா குறைந்த நிலையில் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது.     

பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து முதல்-மந்திரி மீண்டும் வலியுறுத்தல்

பாட்னா,  பாட்னாவில் உள்ள தலைமைச்செயலகத்தில், கொரோனா காரணமாக ஒரு மாத இடைவெளிக்குப் பின் ‘மக்கள் தர்பார்’ நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்-மந்திரி நிதிஷ்குமார், ‘பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த கடந்த 2005-ம் ஆண்டு முதல், எங்களிடம் உள்ள குறைந்த அளவிலான வளங்களைக் கொண்டு மாநிலத்தை முன்னேற்ற முழு முயற்சி செய்கிறோம்.  பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளபோதிலும், பல மேம்பாட்டு குறியீடுகளில் இன்னும் தேசிய சராசரியைவிட பீகார் பின்தங்கியே இருக்கிறது. … Read more

சென்செக்ஸ்: 1700 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. நிஃப்டி 16,850 கீழ் முடிவு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் பலத்த சரிவில் தொடங்கி, பலமான வீழ்ச்சியிலேயே முடிவடைந்துள்ளன. இது ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே எந்த நேரத்தில் வேண்டுமானாலும் போர் வரலாம் என்ற பதற்றமான நிலை இருந்து வருகின்றது. இதற்கிடையில் உக்ரைன் எல்லையில் பதற்றமான நிலை நிலவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் தான் அமெரிக்க சந்தையானது சரிவில் முடிவடைந்ததையடுத்து, ஆசிய சந்தைகள் அனைத்தும் பலத்த வீழ்ச்சி … Read more

ஊர்ப்புறப் பாட்டால் உயரம் தொட்ட படம்! #My Vikatan

தன் காதலியின் கணவனைக் காப்பாற்றத் தன் இன்னுயிரையே ஈன்ற நாயகனைக் கண்டது நம் தமிழ்த் திரையுலகம். அது ‘நெஞ்சில் ஓர் ஆலய’மாக இன்று வரை நின்று நிலைக்கிறது. அதைப்போலவே தான் காதலித்த ஆணுக்காக ஒரு பெண் தன் பிராணனை விட்ட கதையும் உண்டு.  அதுதான் 44 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘அன்னக்கிளி’. 1976-ல் வெளிவந்த இந்தத் திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதில் முதல்முறையாக இசையமைத்த ‘ராசய்யா’ இன்று இசைஞானியாக வளர்ந்து, இமயமென உயர்ந்து நிற்கிறார். … Read more

நான்கு நாட்களில் இடமாறவுள்ள குரு! நற்பயன்களை பெறப்போகும் ராசிக்காரர் யார்? இன்றைய ராசிப்பலன்

குரு பகவான் 2022 பிப்ரவரி 19 ஆம் தேதி அஸ்தமனமாகி, 2022 மார்ச் 20 ஆம் திகதி இயல்பு நிலைக்கு திரும்புகிறார். இப்படி குரு அஸ்தமனமாவதால் ஒரு மாத காலம் ஒருசில ராசிக்காரர்களுக்கு மிகவும் நற்பலன்கள் கிடைக்கப் போகின்றன. இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் குருவால் நற்பலன்களை பெறவுள்ள ராசிக்காரர் யார் என பார்ப்போம். உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW         … Read more

யாருக்கும் சட்டசபையை முடக்கும் அதிகாரம் கிடையாது : ப சிதம்பரம்

சென்னை முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் சட்டசபையை முடக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.   மேற்கு வங்க ஆளுநர் சமீபத்தில் அம்மாநிலச் சட்டசபையை திடீரென முடக்கி வைத்து உத்தரவிட்டார்.    ஏற்கனவே அவருக்கும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையில் நடக்கும் பனிப்போரே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.   இதற்கு எதிர்க்கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி ஒரு கூட்டத்தில் விரைவில் தமிழக சட்டசபையை … Read more

10-ம் வகுப்பு திருப்புதல் தேர்வு: மேலும் ஒரு வினாத்தாள் கசிந்தது

சென்னை: தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகள் இப்போது நடந்து வருகிறது.   திருவண்ணாமலையில் 14-ம் தேதி நடக்கவிருந்த 10-ம் வகுப்பு அறிவியல் தேர்வும், பிளஸ்2-க்கு கணிதத் தேர்வும் வினாத்தாள்கள் வெளியானதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. வினாத்தாள் வெளியானது தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் வந்தவாசி அருகே செயல்பட்டு வரும் ஒரு தனியார் பள்ளி மூலம் வினாத்தாள் வெளியாகி உள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். … Read more