உக்ரைன் போர்… 8 தளபதிகள் மீது புடின் கடுங்கோபம்: பாய்ந்த நடவடிக்கை

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய துருப்புகள் பின்னடைவை எதிர்கொண்டுவரும் நிலையில் முதன்மை தளபதிகள் 8 பேர்கள் மீது புடின் கடுங்கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தோல்வியில் முடிந்த உளவுப்பிரிவு நடவடிக்கை, மோசமான திட்டமிடல் என உக்ரேனில் போரின் தொடக்க நாட்களில் ரஷ்ய துருப்புக்கள் தொடர்ச்சியான தோல்விகளை எதிர்கொண்டுள்ளன. குறிப்பிட்ட நாட்களுக்குள் போரை முடிவுக்கு கொண்டுவாரததும், சூழலுக்கு ஏற்றவாறு திட்டத்தை வகுக்காததும் பின்னடைவுக்கு காரணம் என கண்டறிந்த விளாடிமிர் புடின் தற்போது 8 தளபதிகளை பொறுப்பில் இருந்து நீக்கியதாக தகவல் … Read more

மார்ச்-11: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

உக்ரைன் தலைநகரை மிருகத்தனமாக நெருங்கும் ரஷ்ய துருப்புகள்

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் முனைப்புடன் ரஷ்ய துருப்புகள் மிகவும் நெருங்கி வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நகர எல்லையில் இருந்து வெறும் 3 மைல்கள் தொலைவில் தற்போது ரஷ்ய துருப்புகள் நிலை கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. உக்ரைன் தலைநகரை இலக்காக கொண்டு ரஷ்யாவின் 40 மைல்கள் நீண்ட டாங்கிகளின் அணிவகுப்பு தற்போது நகரத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மட்டுமின்றி, உக்ரைன் தரப்பில் எதிர் தாக்குதலும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மேற்கு நகரமான … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,049,964 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60.49 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,049,964 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 452,933,361 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 387,378,127 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 67,395 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சபரிமலையில் எவ்வளவு பக்தர்கள் வேண்டுமானாலும் தரிசனத்துக்கு வரலாம்| Dinamalar

சபரிமலை : சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு தரிசனத்துக்கு இருந்த எண்ணிக்கை கட்டுப்பாடு நேற்று முதல் நீக்கப்பட்டது. எவ்வளவு பக்தர்கள் வேண்டுமானாலும் தரிசனத்துக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் தற்போது பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. தினமும் தரிசனத்துக்கு 15 ஆயிரம் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க தேவசம்போர்டு கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஆன்லைன் முன்பதிவு கட்டுப்பாட்டை நீக்கும் படி கேரள … Read more

1500 மைல்கள் பயணம்… பிரித்தானிய அரசால் உக்ரேனிய தாயாருக்கும் மகளுக்கும் எற்பட்ட ஏமாற்றம்

உக்ரைனில் போர் நெருக்கடியில் இருந்து தப்பி வந்த தாயார் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரையும் பிரித்தானியா நிர்வாகம் நாட்டுக்குள் அனுமதிக்க மறுத்துள்ளது. உக்ரேனிய தாயாரான Tetyana Tsybanyuk மற்றும் அவரது மகள் Alena Semenova ஆகிய இருவரும் சுமார் 1,500 மைல்கள் பயணம் செய்து பிரித்தானிய எல்லையான கலேஸ் பகுதியில் வந்து சேர்ந்துள்ளனர். வேல்ஸ் பகுதியில் குடியிருந்துவரும் தங்கள் நண்பர்களை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர். ஆனால் விசா இல்லாமல் இருவரையும் நாட்டுக்குள் … Read more

ரயில் பயணியருக்கு மீண்டும் கம்பளி| Dinamalar

புதுடில்லி : ரயில் பயணியருக்கு மீண்டும் போர்வை, கம்பளி, தலையணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில்களில் குளிர்சாதன பெட்டியில் பயணிப்போருக்கு போர்வை, கம்பளி மற்றும் தலையணை வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2020ல் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மீண்டும் ரயில் சேவைகள் துவங்கிய பின், போர்வை, கம்பளி, தலையணை வழங்கப்படவில்லை. ஜன்னல்களில் திரைச்சீலைகள் கூட பொருத்தப்படவில்லை. உணவு வழங்கும் சேவையும் நிறுத்தப்பட்டு இருந்தது. சமீபத்தில், ரயில்களில் உணவு வழங்கும் சேவை மீண்டும் துவங்கப்பட்டது. இந்நிலையில், … Read more

மனித உள்ளுறுப்புகளை சிதைக்கும் ஆபத்தான வெடிகுண்டை வீசினோம்: ஒப்புக்கொண்ட ரஷ்யா

உக்ரைனில் மனித உள்ளுறுப்புகளை சிதைக்கும் தெர்மோபரிக் வெடிகுண்டை வீசியதாக ரஷ்ய முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. குறித்த ஆபத்தான வெடிகுண்டை உக்ரைனில் ரஷ்யா பயன்படுத்தியுள்ளதை செவ்வாய்க்கிழமை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகமும் கூறியிருந்தது. மட்டுமின்றி உக்ரேனிய உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில், ரஷ்ய தளபதி ஒருவர், குறித்த ஆயுதத்தை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டதாக சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த தகவலை ரஷ்ய செய்தி ஊடகம் ஒன்றும் வெளியிட்டுளது. அதில் மார்ச் 4ம் திகதி உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில் தெர்மோபரிக் வெடிகுண்டை வீசியதாக ரஷ்ய தளபதி … Read more

சிரியாவில் நடந்தது போல்… ரஷ்யா தொடர்பில் கடும் அச்சத்தை வெளிப்படுத்திய போரிஸ் ஜோன்சன்

ரஷ்ய துருப்புகள் உக்ரைனில் கடும் மோதலை முன்னெடுத்துவர, முதன்முறையாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கண்மூடித்தனமான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஆசத் படைகளுடன் இணைந்து ரஷ்ய துருப்புகள் மேற்கொண்ட அதே நடவடிக்கையை உக்ரைனிலும் முன்னெடுப்பதாக அச்சம் எழுந்துள்ளது. இதுவரை ரஷ்ய துருப்புகள் 60கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. சமீபத்தில் மகப்பேறு மருத்துவமனை ஒன்றில் ரஷ்ய துருப்புகளால் நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. … Read more

பேலுாரை அபிவிருத்தி செய்ய ஹாசன் கலெக்டர் திட்டம்| Dinamalar

ஹாசன்:ஹொய்சாளர் காலத்தின் அற்புதமான சிற்பங்கள் கொண்ட பேலுாரை மேலும் அபிவிருத்தி செய்ய மாவட்ட நிர்வாகம் திட்டம் வகுத்துள்ளது. இது தொடர்பாக ஹாசன் மாவட்ட கலெக்டர் கிரிஷ், நேற்று கூறியதாவது:வரலாற்று பிரசித்தி பெற்ற, ஹாசன் பேலுார் கர்நாடகாவின் மிகச்சிறந்த சுற்றுலா தலம். 2022 — 23 உலக பாரம்பரிய தலங்களின் பட்டியலில் சேர்க்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. விக்ரகங்கள், சிற்பங்கள் நிறைந்துள்ளன.பேலுாரை மேலும் அபிவிருத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. கோவிலின் சுற்றுப்பகுதிகளில், உள்நாட்டு, … Read more