நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்க 4 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு

புதுடெல்லி: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியம் வழங்குவதற்காக ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு ரூ.1154.90 கோடியை மத்திய அரசு வழங்கியது. அதிகபட்சமாக பீகாருக்கு ரூ.769 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு ரூ.225.60 கோடியும், குஜராத்தில் ரூ.165.30 கோடியும், சிக்கிம் மாநிலத்துக்கு ரூ.5 கோடியும் கிடைத்துள்ளது. “வெளியிடப்பட்ட மானியங்கள் கன்டோன்மென்ட் வாரியங்கள் உட்பட மில்லியன் அல்லாத நகரங்களுக்கு (NMPCs) வழங்கப்படுகின்றன” என்று நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 15வது நிதிக் கமிஷன் … Read more

பாஜகவிற்கு டப்பிங் பேசுகிறார் பழனிசாமி – முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து

மதுரை: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மாநகராட்சிகள் நிர்வாகத்தை எல்லாம் ஊழல் மயமாக்கிய அதிமுகவிற்கு, நகர்ப்புறத் தேர்தலில் நிற்கவே யோக்கியதை இல்லை என்பதுதான் உண்மை. மதுரைக்கு மோனோ இரயில் என்று சொன்னார்கள். எங்கே அது ஓடுகிறது?  முத்துராமலிங்கத் தேவர் சிலையருகே பறக்கும் பாலம் என்று கூட சொன்னார்கள். பறக்கும் பாலம் ஏதாவது … Read more

முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் பிப். 21ம் தேதி மாலை வரை கல்லூரிகளில் சேரலாம்: ராதாகிருஷ்ணன்

சென்னை: முதலாமாண்டு மருத்துவ மாணவர்கள் பிப். 21ம் தேதி மாலை வரை கல்லூரிகளில் சேர அவகாசம் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். ஏற்கனவே பிப்.18 வரை கல்லூரியில் சேர அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டள்ளது. 

இந்தாண்டின் முதல் செயற்கைக்கோள் வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ| Dinamalar

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, ‘இஸ்ரோ’வின் சார்பில் இந்தாண்டின் முதல் செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இஸ்ரோ சார்பில், இ.ஒ.எஸ்., ௦4 எனப்படும் புவி கண்காணிப்பு செயற்கைக் கோள் மற்றும் இரண்டு சிறிய செயற்கைக்கோள்கள் நேற்று செலுத்தப்பட்டன. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, பி.எஸ்.எல்.வி., – சி 52 ராக்கெட் வாயிலாக இவை அனுப்பப்பட்டன. ‘கவுன்ட் டவுன்’ முடிந்து, நேற்று காலை 5:59 மணிக்கு ராக்கெட் … Read more

அனில் அகர்வால் அடுத்த திட்டம்.. பாக்ஸ்கான் உடன் கூட்டணி.. மோடி அரசின் கனவு நிறைவேறுகிறது!!

அனில் அகர்வால் நிறுவனத்திலும், வர்த்தகத்திலும் பல சர்ச்சைகள் இருந்தாலும் தொடர்ந்து வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கிறார். மத்திய அரசு அரசு சொத்துக்களை விற்பனை செய்யத் தயாராகும் போது, அரசின் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்காகவே பல ஆயிரம் கோடி முதலீட்டை திரட்ட தயாரானார். 3 மாத உச்சத்தில் தங்கம் விலை.. சாமானியர்களுக்கு பெரும் ஏமாற்றம்..ஆனா ஒரு ஹேப்பி நியூஸ்! இந்நிலையில் இந்தியாவின் வளர்ச்சிக்குக் குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்புக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் ஒரு துறையில் தைவான் நிறுவன … Read more

“ஓட்டு கேட்கும் நாங்களும் பிச்சைக்காரர்கள் தான்" – அமைச்சர் நாசர் கலகல!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் அனைத்தையும் தேர்தல் ஆணையம் ஒருபுறம் கட்டுக்கோப்பாக நடத்தி வர, இன்னொருபுறம் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அரசியல் கட்சித் தலைவர்கள். நாள்தோறும் விதவிதமான முறையில் ஓட்டு கேட்டு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்துவருகின்றனர். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட, தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் “பிச்சைக்காரன் ரெண்டு வகை, காசு கேட்டு ஒருத்தன் … Read more

தேனுடன் எள் சேர்த்து சாப்பிடுவதால் இந்த நோயை தடுக்க முடியுமா? தெரிந்து கொள்வோம் வாங்க!

தேன் மற்றும் எள்ளை ஒன்றாக கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். மேலும் இந்த கலவையை தினமும் உட்கொள்ளும் போது உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களின் வளர்ச்சி தடுக்கப்படும். அதுபோல இந்த கலவையில் உள்ள தேன் மற்ற இனிப்பு உணவுகளின் மீதுள்ள நாட்டத்தைக் குறைத்து உள்ளுறுப்புகளில் இருக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையைக் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி வாய் ஆரோக்கியமும் மேம்படும். மேலும் தேனுடன் எள் சேர்த்து சாப்பிடுவதால் … Read more

கோவாவில் 78.94% வாக்கு பதிவு – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

கோவா: கோவாவில் 78.94% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று கோவா தலைமை தேர்தல் அதிகாரி குணால் தெரிவித்துள்ளார். 40 தொகுதிகளைக் கொண்ட கோவா பேரவைக்கும், 70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்ட் பேரவைக்கும் இன்று ஒரேகட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. காலையில் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில், கோவாவில் 78.94% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று கோவா தலைமை தேர்தல் அதிகாரி குணால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகபட்சமாக சன்குலிம் தொகுதியில் 89.64% வாக்குகள் பதிவாகியுள்ளன. தெற்கு கோவாவில் … Read more

எல்ஐசி பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: எல்.ஐ.சி நிறுவனம் பல்லாண்டுகளாகப் பலகோடி இந்தியர்களின் தேவைகளை நிறைவுசெய்து, அவர்களின் நன்னம்பிக்கையைச் சம்பாதித்து, தனது திறம்பட்ட செயல்பாட்டால் அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை வழங்கியுள்ளது. அத்தகைய நிறுவனத்தின் பங்குகளில் 5 விழுக்காட்டை விற்பனை செய்ய ஒன்றிய அரசு வரைவு அறிக்கை தாக்கல் செய்திருப்பது தனியார்மயத்தை நோக்கிய – முற்றிலும் விரும்பத்தகாத செயலாகும். இம்முடிவு மக்களின் நலனையோ எல்ஐசி நிறுவனத்தின் நலனையோ கருதி மேற்கொள்ளப்பட்டதன்று. ஒரு நல்லரசு என்பது … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு: ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறும் என மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பிரசாரம் முடிந்த பின் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் அந்தந்த உள்ளாட்சி பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும் வெளியேறாதவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.