சுவிட்சர்லாந்தில் பெருமளவில் குறைந்துள்ள கொரோனா தொற்று

சென்ற வாரத்தில் சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 157,683 பேர் புதிதாக சென்ற வாரத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், முந்தைய வாரத்தை விட இந்த எண்ணிக்கை 24% குறைவு என தெரியவந்துள்ளது. முந்தைய வாரம் சுவிட்சர்லாந்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 208,542 ஆகும். மருத்துவமனைகளில் முந்தைய வாரம் 518 பேர் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்ற வாரம் அந்த எண்ணிக்கையும் 5% குறைந்து 492 ஆகியுள்ளது. அத்துடன், … Read more

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: மாணவியின் தந்தைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தஞ்சை: மதமாற்றம் செய்ய வலியுறுத்தியதாக வீடியோ வெளியிட்டு, தற்கொலை செய்துகொண்ட தஞ்சை பள்ளி மாணவி லாவண்யா  தற்கொலை தொடர்பான வழக்கில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க மாணவியின் தந்தைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்கவும் மறுத்து விட்டது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா,  தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ பள்ளியில் விடுதியில் தங்கியிருந்து படித்து வந்தார். இவர், ஜனவரி 9-ஆம் தேதி … Read more

பா.ஜனதாவும், அ.தி.மு.க.வும் அடிபட்ட நச்சு பாம்புகள்- கே.எஸ். அழகிரி தாக்கு

சென்னை: சென்னை மாநகராட்சி  தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று பெரம்பூர் பகுதியில் 37-வது வார்டில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் மற்றும் தாமோதரன் நகர் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் டில்லி பாபுவுக்கு ஆதரவு திரட்டினார். தமிழகத்தை பொறுத்த வரை அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் அடிபட்ட நச்சு பாம்புகள். ஆனால் இன்னும் உயிர் இழக்கவில்லை. பா.ஜனதா இந்தியாவுக்கே ஆபத்தான கட்சி. அ.தி.மு.க. தமிழகத்துக்கு ஆபத்தான … Read more

குறையும் கொரோனா பரவல்: திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்

ஆந்திரா: கொரோனா பரவல் குறைந்து வருவதால் திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. நாளை காலை 9 மணி முதல் இலவச தரிசன டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் இறங்கு முகத்தில் கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று 44 ஆயிரமாக இருந்த தினசரி கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணி நேரத்தில் 34 ஆயிரமாக குறைந்தது. இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,113 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,26,65,534 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 91,930 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,16,77,641 ஆனது. தற்போது 4,78,882 … Read more

சீனாவின் 54 ஆப்களுக்கு தடை.. பாதுகாப்பு அச்சுறுத்தல் தான் காரணம் என பரபர குற்றச்சாட்டு..!

சீனாவின் பிரபலமான 54 ஆப்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக சீனாவின் பிரபலமான டிக்டாக், வீசாட், ஹலோ உள்ளிட்ட பல ஆப்களுக்கு, இந்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் 54 ஆப்களுக்கு தடை விதித்துள்ளது. இது பியூட்டி கேமரா, ஸ்வீட் செல்பி HD, கேம்கார்ட் , விவா வீடியோ எடிட்டர், டென்சென்ட் Xriver, onmyoji,ஆன்மியோஜி செஸ், ஆன்மியோஜி அரீனா, ஆப்லொஜி அரங்கம் உள்ளிட்ட பல ஆப்கள் இதில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. … Read more

Mr.IPL: சேப்பாக்கம் முதல் சென்சூரியன் வரை… ரெய்னாவின் வெறியான 5 இன்னிங்ஸ்கள்!

Mr.IPL, சின்ன தல என ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவின் கிரிக்கெட் கரியர் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. ஐ.பி.எல் மெகா ஏலத்தில் எந்த அணியும் அவரை எடுக்கவில்லை. சென்னை அணியுமே கூட கைவிரித்துவிட்டது. ஒரு மாபெரும் சகாப்தமே கண்முன் சரிந்ததை போல இருக்கிறது. ஆனாலும் இத்தனை ஆண்டுகளாக சென்னை அணிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை யாராலும் மறக்க முடியாது. அதை கொண்டாடும் வகையில் சென்னை அணிக்காக ரெய்னா ஆடிய டாப் 5 இன்னிங்ஸ்கள் இங்கே… 87(25) … Read more

27 ஆண்டுகளுக்கு முன் காதலியிடம் காதலைச் சொன்ன அதே இடத்துக்குச் சென்ற பிரித்தானியருக்கு நேர்ந்த பரிதாபம்

தான் தன் காதலியிடம் 27 ஆண்டுகளுக்கு முன் காதலைச் சொன்ன அதே இடத்துக்கு மீண்டும் சென்ற பிரித்தானியர் ஒருவர் பரிதாபமாக பலியானதைக் குறித்த ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இங்கிலாந்திலுள்ள Altrincham என்ற நகரைச் சேர்ந்தவர் Dr Jamie Butler (54). Butlerக்கு இரட்டையர்களான இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில், தான் தன் மனைவியிடம் முதன்முதலாக தன் காதலை வெளிப்படுத்திய அதே இடத்துக்குச் சென்று, மீண்டும் தன் காதலை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளார் Butler.   அதன்படி, கணவனும் மனைவியுமாக … Read more

சென்னை முதலை பண்ணையில் இருந்து 1000 முதலைகள் குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் முதலை பண்ணைக்கு மாற்றம்!

சென்னை: மத்தியஅரசுக்கு சொந்தமான ஈசிஆர் முதலை பண்ணையில் இருந்து 1000 முதலைகள் குஜராத்தில் உள்ள ரிலையன்ஸ் முதலை பண்ணைக்கு மாற்றம் செய்யப்படுகிறது. முதலைகளை பராமரிக்க போதிய நிதி இல்லாததால்,  நிதி நெருக்கடி காரணமாக, இந்ந மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், வடநெம்மேலி பகுதியில் மாபெரும் முதலைப் பண்ணை செயல்பட்டு வருகிறது. இங்கு 17 வகைகளை சேர்ந்த 2 ஆயிரத்துக் கும் மேற்பட்ட முதலைகள் கடந்த பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் இருந்து … Read more

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

புதுடெல்லி: கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் புல்வாமா பகுதியில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 40 மத்திய ரிசர்வ் படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டடுவிட்டர் செய்தியில், 2019-ம் ஆண்டு இந்த நாளில் புல்வாமாவில் வீரமரணம் அடைந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதுடன், நமது தேசத்திற்கு அவர்கள் ஆற்றிய சிறந்த … Read more