“இனி வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டதால்…" – வறுமையால் அண்ணன், தங்கை தற்கொலை?

விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தவர் சுசீந்தரன்(54). சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படும் இவருக்கு, திருமணம் ஆகவில்லை. இவரின் தங்கை பெயர் ரேவதி(50) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிரபல தமிழ் நடிகை ஒருவரின் தம்பியை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் ரேவதி, கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் அவரின் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக தன் அண்ணன் வீட்டிலேயே வசித்து வந்தாராம். அண்ணன், தங்கை இருவரும் வசித்து வந்த வீட்டில் நேற்று(13.02.2022) … Read more

பிரதான சாலைகளை மொத்தமாக முடக்குவோம்… கடும் எச்சரிக்கை விடுத்த விவசாயிகள்

எரிபொருள் விலை அதிகரித்து வருவதை எதிர்த்து நாட்டின் அனைத்து முக்கிய நெடுஞ்சாலைகளையும் முடக்குவதில் உறுதியாக இருப்பதாக கிரேக்க விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய கிரீஸில் உள்ள லாரிசா நகருக்கு தெற்கே ஞாயிறன்று நடந்த கூட்டத்தில், கிரேக்க பிரதமர் Kyriakos Mitsotakis உடன் ஒரு சந்திப்பைக் கோர அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பா முழுவதும் எரிபொருள் விலை அதிகரித்து வருவதால், கிரேக்க விவசாயிகள் தங்கள் எரிபொருள் செலவைக் குறைக்க மானியங்களைக் கோரி வருகின்றனர். 27 உறுப்பு … Read more

பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இந்தியா- இலங்கை இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை

புனே: இந்தியா, இலங்கை இடையிலான ஒன்பதாவது வருடாந்த இராணுவப் பணியாளர்களுக்கான பேச்சு வார்த்தை புனேவில் நடைபெற்றது.  இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க இலங்கை ஆயுதப்படை அதிகாரிகள்   குழு கடந்த 10ம் தேதி இந்தியா வந்ததாக பாதுகாப்பு அமைச்சகத்தின் புனே மக்கள் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இராணுவம்-இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில்  பலதரப்பு பயிற்சிகள், கலை, விளையாட்டு மற்றும் கலாச்சார பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் உறவுகளை மேம்படுத்துதல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக … Read more

பிப்-14: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

‘மனதின் குரல்’ நிகழ்ச்சிக்கு ஆலோசனைகளை வழங்க பிரதமர் மோடி அழைப்பு

புதுடெல்லி,  பிரதமர் நரேந்திரமோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அந்த வகையில் பிப்ரவரி மாதத்துக்கான மனதின் குரல் நிகழ்ச்சி வருகிற 27-ந்தேதி ஒலிபரப்பாகிறது. இந்த நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சிக்கான கருத்துகளையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “இந்த மாதத்தின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி பிப்ரவரி 27-ந் … Read more

இறுகும் ரஷ்ய- உக்ரைன் விவகாரம்… கனேடிய துருப்புகள் அதிரடியாக வெளியேற்றம்

உக்ரைனில் பயிற்சி அளித்து வந்த கனேடிய துருப்புகள் அங்கிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளது, ரஷ்ய படையெடுப்பை கனடா உறுதி செய்வதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் பாதுகாப்புத்துறை நிர்வாகம் தெரிவிக்கையில், பயிற்சிப் பணியின் ஒரு பகுதியாக உக்ரைனில் இருந்த கனேடிய வீரர்கள் தற்காலிகமாக ஐரோப்பாவில் வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர். ஆனால், எந்த பகுதிக்கு கனேடிய துருப்புகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை பாதுகாப்புத்துறை தெளிவுப்படுத்த மறுத்துள்ளது. மட்டுமின்றி, பாதுகாப்பு காரணங்களுக்காக எத்தனை இராணுவத்தினர் உக்ரைனில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பதையும் … Read more

நாளை முதல்  சென்னையில் மின்சார ரயில்கள் 100% இயக்கப்படும்

சென்னை கொரோனா பரவல் குறைந்து வருவதால் நாளை முதல் சென்னையில் மின்சார ரயில்கள் 100% இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை நகரில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக புறநகர் ரெயில் சேவை 100 சதவீதம் இயங்க வில்லை.  மேலும் புறந்கர் ரயிலில் பயணிக்க இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை தெற்கு ரெயில்வே விதித்து இருந்தது.  சமீபத்தில் சில வாரங்களாகத் தொற்று பரவல் மீண்டும் இறங்கு முகம் கண்டு வருகிறது. தமிழக அரசு … Read more

ஹிஜாப் அணியாத பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்: கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை கருத்து

ஹூப்ளி: கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அதற்கு அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினர்.பதிலுக்கு இந்து மாணவர்களும் காவி துண்டு போட்டு வந்தனர்.  இதனால் அந்த மாநிலத்தில் மத ரீதியிலான மோதல் போக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த 8-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இது கர்நாடகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினை ராஜஸ்தானிலும் … Read more

எல்.ஐ.சி., பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி மத்திய அரசு விண்ணப்பம்| Dinamalar

புதுடில்லி-நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., நிறுவனத்தில், 5 சதவீத பங்குகளை விற்பதற்கான புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி, ‘செபி’ எனப்படும் பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம், மத்திய அரசு வரைவு விண்ணப்பத்தை தாக்கல் செய்துள்ளது. எல்.ஐ.சி., நிறுவனத்தில் உள்ள தன் பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை, பங்கு வெளியீடு மூலமாக திரட்டுவதற்கான நடவடிக்கைகள் நடந்து வந்தன. இதற்கு, ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் … Read more

தண்டவாளத்தில் இருந்து செல்பி எடுத்த 2 இளைஞர்கள் உயிரிழப்பு..!

கொல்கத்தா, மேற்கு வங்கம் மாநிலம் மேற்கு மேதினிபூர் மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தண்டவாளத்தில் இருந்து செல்பி எடுத்துக் கொண்டிருந்த இருவர் ரயில் மோதி உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். மேதினிபூர் நகரில் உள்ள கஞ்சவதி ஆற்றின் கரையில் பகுதியில், ரெயில் பாலத்திற்கு அருகில் ஒரு சுற்றுலா இடம் உள்ளது. மிதுன் கான்  (வயது 36), அப்துல் கெய்ன் (வயது 32), உள்ளிட்ட 3 இளைஞர்கள் இந்த பகுதிக்கு சுற்றுலாவிற்கு வந்தனர். மிதுன் மற்றும் அப்துல் இருவரும் … Read more