இந்தியாவில் தொடர்ந்து குறையுது தினசரி கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 44,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதற்கு முந்தைய நாளை காட்டிலும் 13.4 சதவீதம் குறைவாகும். மொத்த பாதிப்பு 4,26,31,421 ஆனது.அதேபோல், 1,17,591 பேர் குணமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,15,85,711 ஆனது. தற்போது, 5,37,045 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.வைரஸ் தொற்று காரணமாக 684 பேர் உயிரிழந்ததால், மொத்த இறப்பு 5,08,665 ஆனது. புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் … Read more

டிசிஎஸ்-க்கு பெரும் இழப்பு.. ஒரே வாரத்தில் ரூ.1 லட்சம் கோடியை இழந்த 9 நிறுவனங்கள்..!

கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது பலத்த சரிவினைக் கண்ட நிலையில் 10ல் 9 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பானது,1,03,532.08 கோடி ரூபாய் இழப்பினைக் கண்டுள்ளது. இதில் டிசிஎஸ் டாப் லூசராகவும் உள்ளது. எனினும் வழக்கம்போல சந்தை மதிப்பில் முதலிடத்தில் உள்ள நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான். இதற்கிடையில் பிஎஸ்இ சென்செக்ஸ் 491.90 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது. அரசியல் பதற்றம், அன்னிய முதலீடுகள், சர்வதேச அளவிலான காரணிகள் என பலவும் கவனிக்க வேண்டியவையாக உள்ளது. வரியை எப்படி தவிர்க்கலாம்.. … Read more

`உலகம் சுற்றும் ஃபினிஷர்' 8.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கிய டிம் டேவிட் யார்?

ஐ.பி.எல் மெகா ஏலம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் டிம் டேவிட் எனும் வீரர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பெரிய தொகைக்கு ஏலம் போயிருக்கிறார். அடிப்படை விலையாக 40 லட்சத்தை கொண்டிருந்த டிம் டேவிட் கிட்டத்தட்ட 20 மடங்கு அதிகமாக 8.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டிருக்கிறார். பெரும்பாலான அணிகள் இவருக்காக போட்டி போட்டிருந்தன. யார் இந்த டிம் டேவிட்? Tim David 25 வயதான டிம் டேவிட் சிங்கப்பூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது தந்தையின் … Read more

இளம் சிங்கக்குட்டியை தட்டி தூக்கிய CSK: உற்சாகத்தில் சென்னை ரசிகர்கள்!

U19 உலக கோப்பை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ராஜேவர்தன் ஹங்காரகேகரை சென்னை அணி வாங்கி இருப்பது ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. IPL மெகா ஏலம் பெங்களூருவில் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் U 19 உலகக்கோப்பை அணியில் சிறப்பாக விளையாடிய யாஷ், ராஜ் பாவா, ராஜேவர்தன் ஆகிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், U19 உலக கோப்பை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ராஜேவர்தனை 1.5 கோடிக்கு சென்னை சூப்பர் … Read more

அடுத்த வாரம் பிரான்சில் இருந்து இந்தியாவுக்கு 3 ரஃபேல் விமானங்கள் வருகை

டில்லி இந்தியாவுக்கு அடுத்த வாரம் பிரான்ஸ் நாட்டில் இருந்து 3 ரஃபே;ல் விமானங்கள் வர உள்ளன. பிரான்ஸ் நாட்டில் டசால்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ரஃபேல் போர் விமானங்கள் பல்வேறு நவீன அம்,சங்களைக் கொண்டவை ஆகும்..    இந்த விமானம் வானில் இருந்து இலக்கை தாக்குதல் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் திறமை கொண்டவை ஆகும்.   இத விமானத்தில் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3700 கிமீ தூரம் செல்லமுடியும். கடந்த 2016 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இந்தியா அரசு 36 ரஃபேல் வி,மானங்களை வாங்க ஒப்பந்தம் இட்டது.  இந்த ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு … Read more

41 தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையை விரைவுபடுத்துக – பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: கடந்த 12ம் தேதி 2 இயந்திர மீன்பிடிப் படகுகளில் மீனவர்கள் ராமேஸ்வரம் தளத்திலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்ற நிலையில், மறுநாள் அதிகாலையில் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டு தலைமன்னாருக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரங்களில் இவ்வாறு நடந்துள்ள மூன்றாவது சம்பவம் இது என்பதையும், தற்போது வரை, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 41 பேரும் 6 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் … Read more

கொரோனா 3-வது அலையில் இருந்து மக்களை காப்பாற்றியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை:  கொரோனா 3-வது அலையில் இருந்து மக்களை பாதுகாப்பாக காப்பாற்றியவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். மேலும் எம்மதமும் சம்மதம், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கொள்கையில் இந்த ஆட்சி நடைபெற்று வருகிறது என அமைச்சர் கூறியுள்ளார்.

அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான்.. இது உலகளவில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்..!

இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமமாக இருந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏற்கனவே பல துறைகளிலும் வெற்றிகரமாக கோலோச்சி வருகின்றது. இந்த நிலையில் தற்போது முகேஷ் அம்பானி புதிய தொழிலுக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது ப்ளூ ஹைட்ரஜன் உற்பத்தியில் இறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறைந்த விலையில் உற்பத்தி முகேஷ் அம்பானியின் இந்த திட்டம் சர்வதேச அளவில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ப்ளூ ஹைட்ரஜன் உற்பத்தியில் சர்வதேச அளவில் மிகப்பெரிய இடத்தினை பிடிக்கவும், மிக … Read more

மது போதையில் பள்ளி மாணவிகளை டார்ச்சர் செய்த ஆசிரியர்; போக்சோவில் கைது செய்த போலீஸ்!

பெரம்பலூர் மாவட்டம், நூத்தப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவர் மலையப்ப நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், வழக்கம் போல் பள்ளிக்குக் குடித்துவிட்டு வந்ததாகவும், வகுப்பறையில் படித்துக்கொண்டிருந்த மாணவிகளிடம் அருகில் அமர்ந்து கொண்டு உடையை மாற்றி வரச் சொல்லி யூடியூபில் பாடல்களைப் போட்டு ஆடச்சொல்லியதாகவும் கூறப்படுகிறது. பெரம்பலூர் இதனால் அதிர்ச்சி அடைந்து வகுப்பறையிலிருந்து வெளியேறிய மாணவிகள், இது பற்றிப் பெற்றோர்களிடம் … Read more