விண்வெளியில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை: ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தகவல்

ஆஸ்திரேலியா: விண்வெளியில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் நட்சத்திரங்கள் மற்றும் பிற கோள்களிலிருந்து எந்த விதமான அதிர்வுகளும் கண்டறியப்படவில்லை எனவும் மிக சக்தி வாய்ந்த ரேடியோ டெலஸ்க்கோப் மூலம் ஆராய்ச்சி செய்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இடுக்கி மோப்ப நாய் பிரிவில் பெல்ஜியம் மெலானாய்டு வகை சேர்ப்பு| Dinamalar

மூணாறு: இடுக்கி மாவட்ட போலீஸ் மோப்ப நாய் பிரிவில் பயிற்சி பெற்ற பெல்ஜியம் மெலானாய்டு வகை நாய் சேர்க்கப்பட்டது. மாவட்டத்தில் மோப்ப நாய் பிரிவில் திருட்டு, கொலை குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்களை எளிதில் கண்டறிய வசதியாக ஏழு மோப்ப நாய்கள் உள்ளன. தற்போது பெல்ஜியம் மெலானாய்டு வகையைச் சேர்ந்த ஏஞ்சல் என பெயரிடப்பட்ட நாய் சேர்க்கப்பட்டதால் மோப்ப நாய்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்தது.இந்த நாயுடன் 23 நாய்களுக்கு திருச்சூர் போலீஸ் அகாடமியில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒன்பது … Read more

அதிர்ச்சியளிக்கும் ராகுல் பஜாஜின் மறைவு.. தொழிற்துறையில் மாபெரும் வெற்றிடம்..!

மனிதர்கள் பிறப்பதும் இறப்பதும் சகஜமான விஷயம் தான். ஆனால் சிலரின் மறைவினையே ஊரே பேசும். அந்தளவுக்கு இன்று பேசுப்படுவர் ராகுல் பஜாஜ். பஜாஜ் நிறுவனத்தின் ஆணி வேராக இருந்த ராகுல் பஜாஜ் சனிக்கிழமையன்று உடல் நலக்குறைவால் காலமானார். கொல்கத்தாவில் பிறந்த ராகுல், ஒரு வணிக குடும்பத்திலேயே பிறந்தவர். அதனால் அவரின் ரத்தத்திலேயே கலந்துள்ளது வணிக ரத்தம். அமெரிக்காவில் ஹார்வார்டு பிசினஸ் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் எம்பிஏ படித்தவர். பஜாஜ் தலைவர் படிப்பினை முடித்த கையோடு பஜாஜ் நிறுவனத்தில் … Read more

28 வங்கிகளில் ரூ.22,842 கோடி கடன் மோசடி: பிரபல கப்பல் கட்டுமான நிறுவனம் மீது வழக்கு பதிவு!

குஜராத் மற்றும் சூரத்தில் கப்பல் கட்டுமான தளங்களைக் கொண்டு இயங்கி வரும் நிறுவனம் ஏ.பி.ஜி. கடந்த 2019-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மீது சில வங்கிகள் கடன் மோசடி புகார்களை அளித்தன. அந்தப் புகார்கள் சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இதுவரை 28 வங்கிகளில் ரூ.22,842 கோடி அளவுக்கு ஏ.பி.ஜி ஷிப்யார்டு மற்றும் அதன் இயக்குநர்கள் ரிஷி அகர்வால், சந்தானம் முத்துசாமி மற்றும் அஷ்வினி குமார் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி அவர்கள் … Read more

அவுஸ்திரேலிய பிரபலத்தை மணக்கும் தமிழ்ப்பெண் வினு ராமன் யார்? காதலில் விழுந்த சுவாரசிய கதை

அவுஸ்திரேலிய கிரிக்கெட் பிரபலமும், கோடீஸ்வரருமான கிளென் மேக்ஸ்வெல்லுக்கும் தமிழ்ப்பெண்ணான வினி ராமன் என்பவருக்கும் வெகு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. இதையடுத்து தமிழ் பாரம்பரிய முறையில் அச்சடிக்கப்பட்ட திருமண மஞ்சள் நிற பத்திரிக்கை இணையத்தில் வைரலாகியுள்ளது. மேக்ஸ்வெல் – வினி ராமன் இருவரும் கடந்த 2013லேயே சந்தித்துவிட்டனர். ஆம் அப்போதில் இருந்து இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். முதலில் வினி ராமனை மேக்ஸ்வெல் தான் சந்தித்து பேசி இருக்கிறார். அடிக்கடி சந்தித்த இவர்கள் நண்பர்களாக பழகி இருக்கின்றனர். இந்த … Read more

முதல்வர் ஸ்டாலினுடன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் சந்திப்பு

சென்னை: கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் தனது மனைவியுடன் இன்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். அடுத்த மாதம் மார்ச் 17ம் தேதி நடிகர் சிவராஜ்குமாரின் தம்பியும் மறைந்த நடிகருமான புனீத் ராஜ்குமார் கடைசியாக நடித்த ஜேம்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், எந்த விஷயத்திற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது என்கிற கேள்வி கோலிவுட்டில் எழுந்துள்ளது. முன்னதாக புனீத் ராஜ்குமாரின் நினைவிடத்திற்கு உதயநிதி ஸ்டாலின் சென்று மரியாதை செலுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை கன்னட … Read more

குமாரபாளையம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் திடீர் மாயம்

பள்ளிப்பாளையம்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கொக்கராயன்பேட்டை ஆலங்காடு என்ற இடத்தை சேர்ந்தவர் நசீர் (வயது 32), சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு தாசின் (26) என்ற மனைவியும், கிகனா (8) என்ற மகளும், சையத் கலாம் (7) என்ற மகன், முகமது உசேன் என்ற 6 மாத கைக்குழந்தை உள்ளனர். நசீருக்கும், தனது மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் தாசின் கோபித்துக்கொண்டு அவருடைய தாய் வீட்டுக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. … Read more

ஐபிஎல் மெகா ஏலம்: 98வது வீரர்களிலிருந்து 164 வரை வீரர்கள் இன்று ஏலம்

பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் இன்று 98வது வீரர்களிலிருந்து 164 வரை வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 164 முதல் 600 வரை உள்ள வீரர்களில் ஒவ்வொரு அணியும் 20 பேரை தேர்வு செய்ய வேண்டும். அணிகள் தேர்வு செய்த வீரர்கள் மட்டுமே ஏலத்திற்கு விடப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை எப்போது வேண்டுமானாலும் குறையலாம்.. நிபுணர்களின் சூப்பர் வாய்ப்பு..!

தங்கம் விலையானது இரண்டு மாத உச்சத்தில் இருந்து வருகின்றது. இது அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் பாதுகாப்பு புகலிடமாக இருந்து வருகின்றது. இதற்கிடையில் ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையும் விஸ்வரூப எடுத்து வருகின்றது. இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. தொடர்ந்து தங்கம் விலையானது உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இதன் காரணமாக பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. தங்கம் விலை உயர்வு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை..?! சிறந்த ஹெட்ஜிங் பணவீக்கத்திற்கு எதிரான … Read more

விரைவில்.., அதிக ரேஞ்சு வழங்கும் டாடா நெக்ஸான் EV அறிமுகம்

இந்தியாவின் மிக பிரபலமான எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலான டாடா நெக்ஸான் EV காரில் கூடுதலான ரேஞ்சு வழங்கும் மாடலை விற்பனைக்கு ஏப்ரல் மாதம் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூரம் பயணிப்பதற்க்கான நெக்ஸான் மின்சார காரில், பெரிய 40kWh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய நெக்ஸான் EV உடன் விற்பனைக்கு கிடைக்கும். இந்தியாவில் விற்கப்படும் மின்சார கார்களில் 60 சதவீத சந்தையை நெக்ஸான் கொண்டுள்ளது. டாடா நெக்ஸான் இவி சிறப்புகள் விற்பனையில் கிடைக்கின்ற நெக்ஸான் … Read more