இல்லதரசிகளுக்கு சூப்பர் நியூஸ்.. இனி சமையல் எண்ணெய் விலை குறையலாம்..!

மத்திய அரசு கச்சா பாமாயில் எண்ணெய் மீதான இறக்குமதி வரியானது 8.25%ல் இருந்து, 5.5% ஆக குறைத்துள்ளது. தொடர்ந்து சமையல் எண்ணெய் விலையானது அதிகமாக இருந்து வரும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கை காரணமாக விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் சுத்திகரிப்பட்ட பாமாயில் எண்ணெய் விலையானது உச்சத்திலேயோ இருந்து வரும் நிலையில், இந்தியாவில் உள்நாட்டில் பாமாயில் விலையானது தொடர்ந்து அதிகமாக இருந்து வருகின்றது. 15 ஆண்டுகளுக்கு இப்படித் தான்.. விலை உயர்ந்த எண்ணெய் வாங்க … Read more

தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத ஷில்பா ஷெட்டி; நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்!

நடிகை ஷில்பா ஷெட்டியின் தந்தை சுரேந்திரா கடந்த 2015-ம் ஆண்டு ஆட்டோமொபைல் ஏஜென்சி உரிமையாளர் பர்ஹத் அம்ரா என்பவரிடம் ரூ.21 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அந்தக் கடனை 2017-ம் ஆண்டு 18 சதவிகித வட்டியுடன் திரும்ப கொடுப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது ஷில்பா ஷெட்டியின் தந்தை இறந்துவிட்டார். இதனால் கடன் திரும்ப கொடுக்கப்படாமல் இருக்கிறது. கடன் தொடுத்த தொழிலதிபர் கடனை திரும்ப கொடுக்கும்படி ஷில்பா ஷெட்டி மற்றும் அவர் தாயாரிடம் கேட்டார். ஆனால், அவர்கள் கொடுக்க முன் வரவில்லை. … Read more

49 வயதில் 3வது திருமணம்.. தன்னை விட 31 வயது இளைய பெண்ணை மணந்த பிரபலம்.. வைரல் புகைப்படம்

பாகிஸ்தானில் அரசியல் பிரபலம் ஒருவர் தன்னை விட 31 வயது குறைவான பெண்ணை 3வது திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. பாகிஸ்தானின் பிரபல கட்சியின் தலைவராக இருப்பவர் ஆமிர் லியாகத்(49). இவருக்கு ஏற்கனவே திருமண ஆன நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு 2வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை 2வது மனைவியையும் விவாகரத்து பெற்றதாக ஆமிர் லியாகத் அறிவித்தார். இதையடுத்து உடனடியாக, … Read more

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் பாதிப்பு 45000க்கு குறைவு – 14.15 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 14,15,279 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 44,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,877 பேர் அதிகரித்து மொத்தம் 4,26,31,421 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மரணமடைந்தோர் எண்ணிக்கை 684 அதிகரித்து மொத்தம் 5,08,665 பேர் உயிர் இழந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 1,17,591 பேர் குணமடைந்து இதுவரை 4,15,85,711 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 5,37,045 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று இந்தியாவில் 49,16,801 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு … Read more

ஒரே நாடு… ஒரே ரேசன் கார்டு… என்பவர்கள் ஒரே குளம்… ஒரே சுடுகாடு… கொண்டு வாருங்கள்: சீமான்

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.  தஞ்சாவூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள் சந்தித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:- தேர்தலுக்கு என்று தமிழக மாநிலத்திற்கு எவ்வளவு நீதி ஒதுக்குகிறீர்கள். தமிழக பாராளுமன்ற தேர்தலுக்கு, கர்நாடாக சட்டசபை தேர்தலுக்கு எவ்வளவு நிதி ஓதுக்கிறீர்களோ அதே … Read more

சென்னையில் மீண்டும் தலை தூக்கியது ஆன்லைன் லோன் ஆப் மோசடி: மக்களே உஷார்..!

சென்னை: சென்னையில் மீண்டும் ஆன்லைன் லோன்  ஆப் மோசடி தலை துக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு லோன் ஆப் மூலம் பெரிய அளவில் மோசடியில் ஈடுபட்ட சீன நாட்டினர் 2 பேர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது சென்னை மாநகர காவால்த்துறையில் இருந்து மாற்றப்பட்டு  சி.பி.சி.டி விசரணையில் உள்ளது. விரைவில் இந்த வழக்கு அமலாக்கத்துறைக்கு மாற்றப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில் அதே லோன் ஆப் மோசடி தொடர்பாக சென்னை சைபர் கிரைம் … Read more

ஆந்திராவில் 2 லட்சம் கிலோ கஞ்சா தீயிட்டு எரிப்பு| Dinamalar

திருப்பதி: ஆந்திராவில் 2 லட்சம் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை தீயிட்டு எரித்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜயநகரம், கிழக்கு கோதாவரி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட, 2 லட்சம் கிலோ கஞ்சாவை போலீசார் தீயிட்டு எரித்தனர். இது குறித்து, போலீஸ் டி.ஜி.பி., கெளதம் சவாங் கூறியதாவது: ஆந்திரா – ஒடிசா மாநில எல்லையில் உள்ள குக்கிராமங்களில் பல ஆண்டுகளாக கஞ்சா பயிரிட்டு அவற்றை … Read more

அசாம் முதல்-மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – சந்திரசேகர ராவ்

ஐதராபாத், உத்தரகாண்டில் பாஜக வேட்பாளரை ஆதரித்து நேற்று முன் தினம் அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ஹிமந்தா, காங்கிரஸ் மீதும் ராகுல் காந்தி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில், பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய சர்ஜிகல் தாக்குதலுக்கு ராகுல் காந்தி ஆதாரம் கேட்கிறார். நீங்கள் ராஜீவ் காந்தியின் மகன் தானா? இல்லையா? என்பதற்கு நாங்கள் எப்போதாவது உங்களிடம் ஆதாரம் கேட்டோமா?. நமது ராணுவ … Read more

மட்டன் முருங்கைக்கீரைச் சாறு | மத்தி மீன் குருமா| காளான் மலபாரி – சத்தான வீக் எண்ட் ரெசிப்பீஸ்!

வீட்டுச் சாப்பாடாக இருக்க வேண்டும்… அதே நேரம் ஹோட்டல் ருசியும் வேண்டும்… இதுதான் பலரின் விருப்பமும். அப்படி ஆசைப்படுவோருக்கான சைவ, அசைவ சமையல் குறிப்புகள்தான் இவை. இந்த வார வீக் எண்டுக்கு ருசியான, சத்தான ஹோம்லி சாப்பாட்டை முயற்சி செய்யுங்களேன்… மட்டன் முருங்கைக்கீரைச் சாறு தேவையானவை: எலும்புள்ள மட்டன் துண்டுகள் – 150 கிராம் முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி அளவு கேரட் – ஒன்று தக்காளி – 2 பிரிஞ்சி இலை – ஒன்று … Read more

தமிழ்ப்பெண்ணை மணக்கும் அவுஸ்திரேலிய கோடீஸ்வர பிரபலம்! வெளியான தமிழ் பாரம்பரிய மஞ்சள் நிற பத்திரிக்கை

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தமிழ் பெண்ணை திருமணம் செய்யவுள்ள நிலையில் அவர்களின் திருமண பத்திரிக்கை வைரலாகியுள்ளது. ஆல்ரவுண்டராக அவுஸ்திரேலிய அணியில் அதிரடி காட்டுபவர் க்ளவுன் மேக்ஸ்வெல். ஆர்சிபி அணிக்காக கடந்தாண்டு ஐபிஎல்லில் ஆடிய மேக்ஸ்வெல்லை அந்த அணியே மீண்டும் தக்கவைத்துள்ளது. மேக்ஸ்வெல்லின் நிகர சொத்து மதிப்பு ரூ 218 கோடி (இலங்கை மதிப்பில்) என கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மேக்ஸ்வெல் அவுஸ்திரேலியா வாழ் தமிழ் பெண்ணான வினி ராமன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, அவர்களுக்கு … Read more