ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தெப்போற்சவம்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் ஆனந்தவல்லி நாயக சமேத ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு, தெப்போற்சவ விழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடந்தது. இதையெட்டி தேவி, பூதேவியுடன், சுந்தரவரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, கோயில் வளாகத்தில் அமைந்துள்ள குளத்தில் வண்ண மலர்கள் மற்றும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட  தெப்பத்தில் தேவி, பூதேவியுடன் உற்சவர் சுந்தரவரதராஜப் பெருமாள் எழுந்தருளி குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில், உத்திரமேரூர் மற்றும் பல்வேறு பகுதிகளை … Read more

சபரிமலையில்மாசி மாத பூஜைகளுக்காக நடை திறப்பு| Dinamalar

சபரிமலை:மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது.மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்த பின், 18ம் படி வழியாக சென்று ஆழியில் தீ வளர்ப்பார். இரவு, 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். பிப்.13 அதிகாலை, 5:00 மணி முதல் பூஜைகள் துவங்கும். 17 இரவு, 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். பிப்., 13 முதல் 17 வரை தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு, ‘ஆன்லைன்’ முன்பதிவு வாயிலாக தரிசனத்திற்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது. … Read more

நேரு நினைத்திருந்தால் சில மணி நேரத்தில் கோவாவை விடுதலை செய்திருக்கலாம் – பிரதமர் மோடி பாய்ச்சல்

பனாஜி, 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கு வரும் 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போட்டியிட உள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருவதால் கோவா அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், கோவாவில் நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். பிரசாரத்தின் போது பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியா சுதந்திரம் அடைந்த (1947) பிறகு … Read more

கிரிப்டோவுக்கு எந்த மதிப்பும் இல்லை, சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. ரிஸ்க் எடுப்பது உங்க இஷ்டம்..!

இந்தியாவில் கிரிப்டோகரன்சியை அதிகாரப்பூர்வ முதலீடாக அறிவிக்கவில்லை என்றாலும், கிரிப்டோ முதலீட்டை ஒழுங்குமுறைப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கிரிப்டோ மற்றும் இதர டிஜிட்டல் சொத்துக்கள் மீதான முதலீட்டில் கிடைக்கும் லாபத்திற்கு 30 சதவீதம் வரி விதித்துள்ளது மத்திய அரசு. 3 நாளில் ரேஷன் கார்டு அப்ரூவல் வேண்டுமா? இப்படி அப்பளை பண்ணுங்க.. ! இந்த நிலையிலும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அடிப்படை மதிப்பு இல்லை கிரிப்டோ முதலீடுகளும், … Read more

₹.1.98 லட்சத்தில் யெஸ்டி பைக்குகள் விற்பனைக்கு வந்தது

மஹிந்திரா நிறுவனம் யெஸ்டி பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ரோட்ஸ்டெர், அட்வென்ச்சர், மற்றும் ஸ்கிராம்பளர் என மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. யெஸ்டி பைக் Roadster, Scrambler & Adventure மூன்று மாடல்களும் 334சிசி, சிங்கிள்-சிலிண்டர், DOHC, லிக்விட் கூல்டு எஞ்சின் மூலம் இயக்கப்பட்டாலும்,  ஒவ்வொன்றும் வெவ்வேறு ட்யூன் நிலையில், சற்று மாறுபட்ட பவர் மற்றும் டார்க் மாறுபடுகின்றது. இதேபோல், ஒவ்வொரு பைக்கிலும் வெவ்வேறு சஸ்பென்ஷன் மற்றும் வீல் அளவுகள், மற்ற வேறுபாடுகளுடன் தனித்துவமான சேஸ் … Read more

இன்றைய ராசி பலன் | 11/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link

78 முறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்! பல மாதங்களாக தனிமையில் இருக்கும் அதிர்ச்சியூட்டும் சம்பவம்

துருக்கியில் 78 முறை தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் 14 மாதங்களாக தனிமைப்படுத்தப்பட்டு பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளார். முசாஃபர் கயாசன் (Muzzafer Kayasan) எனும் அந்த நபர் முதன்முறையாக நவம்பர் 2020-ல் கோவிட்-19 நேர்மறை சோதனை செய்தார். அவர் கடந்த ஒரு வருடமாக மருத்துவமனையில் வைக்கப்பட்டு 14 மாதங்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முசாஃபர் கயாசன், நவம்பர் 2020-ல் முதன்முதலில் கோவிட் -19 நேர்மறையை பரிசோதித்தபோது, ​​​​அவருக்கு கோவிட் -19 அறிகுறிகள் இருந்தன, அவை விரைவில் குணமடைந்தன. ஆனால், … Read more

ஹிஜாப்  வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு! கர்நாடக உயர்நீதி மன்றம்…

பெங்களூரு: ஹிஜாப்  வழக்கில் எந்தவித உத்தரவையும் பிறப்பிக்காமல் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுவதாக கர்நாடக உயர்நீதி மன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் பள்ளி , கல்லூரிகளில் சமத்துவத்தை பின்பற்றும் வகையில் ஒரே சீருடை சட்டம் அமல்படுத்த அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், அதை ஏற்க மறுத்து, உடுப்பி அரசு பி.யூ மகளிர் கல்லூரியில் இஸ்லாமிய பெண்கள் சிலர் ஹிஜாப் அணிந்து வந்தனர். அவர்களை கல்லூரிக்குள் அனுமதிக்க நிர்வாகம் மறுத்த நிலையில், அவர்கள்  கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஹிஜாப் அணிந்து … Read more

குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள முகலாய தோட்டம் திறப்பு – பொது மக்கள் பார்வையிட அனுமதி

புதுடெல்லி: குடியரசுத்தலைவர் மாளிகையின் வருடாந்திர தோட்டத்திருவிழாவையொட்டி அங்குள்ள வரலாற்று புகழ் பெற்ற  முகலாய தோட்டத்தை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். வண்ண வண்ண விதவிதமான மலர்கள் நிறைந்த இந்த தோட்டத்தில் இந்த ஆண்டு புதிதாக 11 வகையான துலிப் மலர்கள் பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காற்றைத் தூய்மைப்படுத்தக் கூடிய தாவரங்களும் இந்தத் தோட்டத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிட த்தக்கது.வருடந்தோறும் இந்த மலர் தோட்டத்தை பொது மக்களும் பார்வையிட … Read more

காவல்துறையில் 90 % அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர்: ஐகோர்ட் கருத்து

சென்னை: காவல்துறையில் 90 % அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவும், திறமையற்றவர்களாகவும் உள்ளனர், 10% அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும் திறமையானவர்களாகவும் உள்ளனர் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊழல் அதிகாரிகளை களைந்து திறமையான அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்க வேண்டும் என நீதிபதி வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.