ரஜினிகாந்த் நடிக்கும் 169 வது படம்

நடிகர் ரஜினிகாந்தின் 169வது படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அண்ணாத்த திரைப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைகிறார் ரஜினிகாந்த். #Thalaivar169BySunPictures: ▶ https://t.co/EFmnDDnBIU Presenting Superstar @rajinikanth’s #Thalaivar169 directed by @Nelsondilpkumar and music by @anirudhofficial — Sun Pictures (@sunpictures) February 10, 2022 இந்த படத்தை பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்க இருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு. https://patrikai.com/wp-content/uploads/2022/02/rajini169.mp4

அ.தி.மு.க. ஆட்சியில்தான் நீட் தேர்வு வந்தது என்பதை ஆதாரங்களுடன் நிரூபிக்க தயார் – மு.க.ஸ்டாலின்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொண்டார். ஈரோட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களை எடுத்துரைத்து முதல்வர் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தலுக்காக உருவானதல்ல தி.மு.க. தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற உருவான இயக்கமே தி.மு.க. தமிழர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட கட்சி தி.மு.க. தி.மு.க. ஆட்சி இதுவரை நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய ஆட்சியாக இருந்தது. இனியும் … Read more

மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதை மூடல்

சென்னை: வனவிலங்குகள் நலனை கருத்தில் கொண்டு மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதை மூடப்படுகிறது. திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன.

3 மாதங்களில் ஒயிட் டாப்பிங் பணி முடியும்!| Dinamalar

பெங்களூரு-பெங்களூரில் சுமுகமான போக்குவரத்துக்காக துவங்கப்பட்ட ‘ஒயிட் டாப்பிங்’ பணிகள், பல இடையூறுகளுக்கு பின், இறுதி கட்டத்தை எட்டியதால், வாகன பயணியர் நிம்மதியடைந்துள்ளனர். எனினும், இன்னும் மூன்று மாதங்களில் தான் பணிகள் முடியுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பெங்களூரின் இருதய பகுதிகள், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடங்களில், சாலைகள் பள்ளம் ஏற்பட்டிருந்ததால், வாகன பயணியர் அவதிப்பட்டனர். விபத்துகளும் நடந்தன. இதற்கு தீர்வு காணும் நோக்கில், 2018ல் ஒயிட் டாப்பிங் பணிகள் துவங்கப்பட்டது. இதன்படி, சாலை மீது சிமென்ட் காங்கிரீட் கலவை பூசப்பட்டது.பணிகள் … Read more

Work From Home முடிந்தது.. எல்லோருக்கும் அழைப்பு.. ஐடி துறை மட்டும் தான் பாக்கி..!

இந்தியாவில் 3வது கொரோனா தொற்று அலையின் வேகம் குறைந்துள்ளது மட்டும் அல்லாமல் வைரஸின் வீரியமும் குறைவாக இருக்கும் காரணத்தால் வர்த்தகம், பொருளாதாரம் அனைத்தும் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. குறிப்பாக வேலைவாய்ப்பு சந்தை 2 வருட உச்சத்தைத் தொட காத்திருக்கிறது.. இந்தச் சூழ்நிலையில் வீட்டில் இருந்து பணியாற்றி வரும் மத்திய அரசு ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக அலுவலகத்திற்கு வர உத்தரவிடப்பட்டது. இதை உடனடியாக அமல்படுத்தவும் மத்திய அரசு அறிவித்துள்ள காரணத்தால் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் … Read more

பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவது எப்படி?

பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவது எப்படி? பிரான்சில் குடியுரிமை பெறுவதற்கு இரண்டு முக்கிய வழிமுறைகள் உள்ளன. 1. நீங்கள் ஐந்து வருடங்கள் பிரான்சில் வாழ்ந்திருந்தால் அதைப் பயன்படுத்தி பிரெஞ்சுக் குடியுரிமை கோரலாம் நீங்கள் பிரெஞ்சுப் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்றிருந்தால், இரண்டு ஆண்டுகளிலேயே குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வகையில் குடியுரிமை கோருவோர், தங்களுக்கு B1 levelஇல் பிரெஞ்சு மொழி பேசத் தெரியும் என நிரூபிக்கவேண்டும், பிரான்ஸ், அதன் கலாச்சாரம், வரலாறு மற்றும் அரசியலைக் குறித்து போதுமான அளவு தெரிந்துவைத்திருக்கவேண்டும். … Read more

தமிழக கோவில்களில் ஆதிசங்கரர் குறித்த பிரதமர் மோடியுன் உரை நேரடி ஒளிபரப்பு! வழக்கு தள்ளுபடி…

சென்னை: கேதர்நாத் கோவிலில்  நடைபெற்ற ஆதிசங்கரர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசினார். இந்த நிகழ்வு தமிழகத்தில் உள்ள சில கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள ஸ்ரீஆதிசங்கரர்  கோவில்  கடந்த நவம்பர் மாதம் ரூ.250 கோடியில் புனரமைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு,  ஸ்ரீஆதிசங்கரர் சமாதியை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி தொடர்பான  வீடியோ, காணொலி … Read more

இஸ்ரோ 36 நாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது – மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இஸ்ரோவின் ராக்கெட் ஏவும் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான முதல் ராக்கெட் ஏவுவதற்கான பணியில் இஸ்ரோ தீவிரமாக களம் இறங்கி உள்ளது. இதற்கிடையே, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து வரும் 14-ம் தேதி காலை 5:59 … Read more

சேவை கட்டணத்தை உயர்த்தவுள்ளதாக இந்தியாவுக்கான ஏர்டெல் செயல் இயக்குநர் கோபால் விட்டல் தகவல்

டெல்லி: சராசரி தனிநபர் வாடிக்கையாளர் வருவாய் இலக்கை ரூ.163-லிருந்து ரூ.200-ஆக ஏர்டெல் நிறுவனம் உயர்த்தியுள்ளது. அடுத்த 3-4 மாதங்களுக்கு பிறகு சேவை கட்டணத்தை உயர்த்தவுள்ளதாக இந்தியாவுக்கான ஏர்டெல் செயல் இயக்குநர் கோபால் விட்டல் தகவல் தெரிவித்துள்ளார்.