ஹிஜாப் விவகாரம்; வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது கர்நாடகா உயர் நீதிமன்றம்!

கர்நாடக மாநிலம் குண்டபுராவில் உள்ள பியூ அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கல்லூரி நிர்வாகம் தடைவிதித்திருந்தது. அதையடுத்து கல்லூரி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் கல்லூரி முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்திவந்தனர். ஆனால், இந்த போராட்டமானது தற்போது இந்து மாணவ மாணவிகளின் பலத்த எதிர்ப்பின் காரணமாக மதக்கலவரமாக மாறும் அளவிற்கு உருவெடுத்துள்ளது. நேற்று கூட கர்நாடகாவில், கல்லூரிக்கு பர்தா அணிந்து வந்த மாணவியை, இந்து மாணவர்கள் கூட்டமாக நின்று கோஷமிட்டது பெரும் … Read more

பிரான்ஸ் எப்போது கொரோனா பரிசோதனை கட்டுப்பாடுகளை முழுமையாக விலக்கிக்கொள்ளும்?

Omicron வகை மரபணு மாற்றக் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகள் சில அமுலுக்கு வந்தன. இப்போதோ, பிரான்சில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளவர்களில் 98 சதவிகிதம் பேரும் Omicron வகை கொரோனா வைரஸால்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தினசரி கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை சுமார் 400,000ஆக உள்ள நிலையில், இந்த கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட வாய்ப்புள்ளதா? என்னென்ன விதிகள் அமுலில் உள்ளன? ஆரஞ்சு நாடுகள் பட்டியலில் இருக்கும் நாடுகளிலிருந்து பிரான்சுக்கு வரும் அனைவரும், அவர்கள் கொரோனா தடுப்பூசி … Read more

விவசாய கடன் தள்ளுபடி – இலவச கல்வி – 20லட்சம் பேருக்கு வேலை: உ.பி. மாநில தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பிரியங்கா காந்தி!

லக்னோ: உ.பி. மாநில சட்டமன்ற தேர்தலையொட்டி, விவசாய கடன் தள்ளுபடி, எல்கேஜி முதல் கல்லூரி வரை இலவச கல்வி,  20லட்சம் பேருக்கு அரசு வேலை உள்பட பல்வேறு அறிவிப்புகளை அம்மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டார். கட்சியின் தேர்தல் அறிக்கையான “உன்னதி விதான்” இன்று உ.பி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சி தலைவர்கள் முன்னிலையில் பிரியங்கா காந்தி வெளியிட்டார், அப்போது, தேர்தல் அறிக்கையான உன்னதி விதான் என்பதை  அவர் “ஜன் கோஷ்னா பத்ரா” என்று அழைத்தார். 403 … Read more

வேட்பாளர் 20 பேருடன் சென்று வீடு வீடாக பிரசாரம் செய்யலாம்- தேர்தல் கமி‌ஷன் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகளை மாநில தேர்தல் கமி‌ஷன் மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கூட்டங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை அனுமதிக்கப்படமாட்டாது. சுவரொட்டிகள், கொடிகள், பதாகைகள், சிலைகள் அல்லது வேறு ஏதேனும் பிரச்சாரப் பொருள்கள், அனுமதிக்கப்படமாட்டாது. மத சார்புடைய சின்னங்கள் பயன்படுத்தியோ, அல்லது சமூகம் மற்றும் சாதி அடிப்படையான உணர்வுகளை பயன்படுத்தியோ வாக்குசேகரிக்க கூடாது. மத அல்லது மொழி அடிப்படையில் பல்வேறு தரப்பினரிடையே வெறுப்புணர்வு அல்லது … Read more

ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகளில் தவறில்லை: சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

சென்னை: ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழக அரசின் நடவடிக்கைகளில் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஆட்சியர் பரிந்துரை செய்யலாம், நிலத்தின் தன்மையை வகைமாற்றம் செய்ய நில நிர்வாக ஆணையருக்கே அதிகாரம் உள்ளது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசு இத்தனை ஆண்டுகளாக ஏன் அனுமதித்தது? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பெத்தேல் நகர் குடியிருப்போர் நலசங்கம் தொடுத்த வழக்கின் விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஒயின் விற்பனை: அன்னா ஹசாரே போராட்டம்| Dinamalar

மும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் பழரசம் மூலம் தயாரிக்கப்படும் ஒயின் விற்பனை செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என அம்மாநில திறன் வளர்ச்சி துறை அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர். மஹாராஷ்டிர அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, முடிவை திரும்ப பெறாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், … Read more

WFH முடிந்தது, ஆபீஸ்க்கு கிளம்புங்க.. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ ஊழியர்கள் நிலை என்ன..?!

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் அனைத்து துறையிலும் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டது. இப்படி வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்கள் வாரங்கள், மாதங்கள் தாண்டி தற்போது கிட்டதட்ட 2 வருடமாக ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ஒமிக்ரான் மூலம் உருவான 3வது தொற்று அலையில் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லாத நிலையில் பள்ளிகள், கல்லூரிகளைத் தொடர்ந்து நிறுவனங்களும் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கத் துவங்கியுள்ளது. ஆசியாவிலேயே இனி அதானி தான் … Read more

`ஸ்மார்ட் கழிவுத்தொட்டி; காற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பம்!"-மநீம தேர்தல் வாக்குறுதிகள்

தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், வேட்புமனு பரிசீலனை முடிந்து, அனைத்து நகர்ப்புற வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் முன்னதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, பல்வேறு அரசியல் தலைவர்களும், அவரவர் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடும், மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை, ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் தனது … Read more

43 மணிநேர போராட்டம்! அன்பு முத்தம் கொடுத்த பாபு- வைரலாகும் வீடியோ காட்சிகள்

கேரளாவில் மலை இடுக்குகளில் இருந்து தன்னை மீட்ட ராணுவ வீரர்களுக்கு பாபு அன்பாக முத்தம் கொடுத்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கேரளாவின் மலப்புழா பகுதியில் உள்ள சேராட் கிராமத்தை சேர்ந்தவர் ஆர் பாபு. அங்குள்ள குறம்பாச்சி மலைப்பகுதியில் நண்பர்களுடன் டிரெக்கிங் சென்ற போது பாபு தவறி கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக மலைக்கு கீழே விழாமல் இடுக்கில் மாட்டிக்கொண்டார், உணவு, தண்ணீர் இல்லாமல் சுமார் 43 மணிநேரமாக போராடிய பாவுவை மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவத்தினர் பத்திரமாக மீட்டனர். … Read more

புதிதாக தொடங்கப்பட்ட ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் 396 வேட்பாளர்கள் போட்டி!

ஆவடி: தமிழ்நாட்டில்  புதிதாக தொடங்கப்பட்ட ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் 396 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பாளர்கள் பட்டியில் வெளியிடப்பட்டு தேர்தல் பணிகளும் சுறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், புதிதாக தொடங்கப்பட்ட ஆவடி மாநகராட்சியில்  இடம்பெற்றுள்ள 48 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி,  48 வார்டுகளில் அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் உள்பட 396 … Read more