திருமணமாகாததால் குடித்துவிட்டு தகராறு செய்த மகன்; ஆத்திரத்தில் கொலை செய்த தாய்! – என்ன நடந்தது?

தஞ்சாவூர் அருகே உள்ள நாஞ்சிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் வைரமணி (36). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லைவில்லையாம். அதனால், தனக்கு திருமணம் செய்து வைக்காததால் வைரமணி தினமும் குடித்து விட்டு வந்து தன் தாய் மாரியம்மாள் (60), அண்ணன் முத்தமிழ் ராஜா (40) ஆகிய இருவரிமும் சண்டையிட்டு வந்திருக்கிறார். வைரமணி அந்த வகையில், நேற்று முன் தினம் இரவும் மது போதையில் வைரமணி இருவரிடமும் சண்டையிட்டதாக தெரிகிறது. அதில், ஆத்திரமடைந்த அண்ணன் மற்றும் தாய் இருவரும் வைரமணியை … Read more

இந்தியாவின் டிஜிட்டல் பிச்சைக்காரர்! வியப்பில் வாய்பிளக்கும் மக்கள்

பீகாரில் ராஜு படேல்(40) என்ற பிச்சைக்காரர் Bettiah ரயில் நிலையத்தில் டிஜிட்டல் முறையில் பிச்சை எடுத்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பீகாரில் உள்ள Bettiah ரயில் நிலையத்தில் ராஜு படேல்(40) என்ற பிச்சைக்காரர் ஒருவர் கழுத்தில் டிஜிட்டல் payment செய்வதற்கான QR குறியீடு அட்டையை மாட்டிக்கொண்டு அனைத்து விதமான ஆன்-லைன் கருணையையும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துக்கொண்டு பிச்சை எடுத்து வருகிறார். மேலும் இவர் தன்னை முன்னாள் பீகார் முதலமைச்சர் லல்லு பிரசாத் யாதவ்வின் தீவிரதொண்டன் என்றும், தற்போது … Read more

25 உறுப்பினர்களுடன் மத்திய ஊடக அங்கீகார குழு அமைக்கப்படும்! மத்திய செய்தி-ஒலிபரப்பு அமைச்சகம்

டெல்லி: 25 உறுப்பினர்களுடன் மத்திய ஊடக அங்கீகார குழு அமைக்கப்பட இருப்பதாகவும்,  நாட்டின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் எதிராகச் செயல்படும் பத்திரிகையாளா்களுக்கு அரசு வழங்கிய அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று மத்திய செய்தி-ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளா்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான புதிய விதிகளை மத்திய செய்தி-ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன் தலைவராக  மத்திய ஊடக அங்கீகாரக் குழு (CMAC) முதன்மை இயக்குநர் ஜெனரல், பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) தலைமையில், அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட 25 உறுப்பினர்களை … Read more

தி.மு.க. மூத்த தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் இன்று முதல் தேர்தல் பிரசாரம் தொடக்கம்

சென்னை: மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுவதையொட்டி தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கத்தொடங்கி உள்ளன. கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து அந்தந்த கட்சி மாவட்டச்செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்களுடன் சேர்ந்து ஆங்காங்கே ஓட்டு கேட்டும் வருகின்றனர். தி.மு.க. தலைவரான முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தினமும் மாலை 5.30 மணிக்கு காணொலி மூலம் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். 6-ந்தேதி கோவை, 7-ந்தேதி … Read more

நீட் மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்பிய முதலமைச்சருக்கு கவிஞர் வைரமுத்து பாராட்டு

சென்னை: நீட் மசோதாவை ஆளுநருக்கே திருப்பி அனுப்பி இறையாண்மைக்கு உட்பட்டு மறையாண்மை செய்திருக்கிறார் முதலமைச்சர் என கவிஞர் வைரமுத்து பாராட்டியுள்ளார். ‘எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்’ என்று விரைந்து வினைப்படுகிறார் முதலமைச்சர் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். மேலும் முன்னோடிகளை முந்தும் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் எனவும் வைரமுத்து பாராட்டியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை| Dinamalar

ஜெனிவா: ஒமைக்ரானுக்கு அடுத்ததாக வரும் கொரோனா திரிபுகள் தீவிரமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப ஆய்வுப் பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியதாவது: இன்னும் சில காலத்திற்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை உலக மக்கள் தொடர வேண்டியிருக்கும். கொரோனா திரிபுகளில் ஒமைக்ரான் கடைசியாக இருக்காது. மேலும் சில திரிபுகள் மக்களைத் தாக்க வாய்ப்புள்ளது. கொரோனாவின் அடுத்த திரிபு, ஒமைக்ரானைவிட தீவிரமாக … Read more

எல்ஐசி பாலிசி உங்களிடம் இருக்கா.. அப்போ 5% டிஸ்கவுண்ட் கட்டாயம் கிடைக்கும்..!

இந்தியாவின் 64 சதவீத ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்தைத் தன்னிடம் வைத்துக்கொண்டு யாரும் பெற முடியாத ஆதிக்கத்தை எல்ஐசி நிறுவனம் பெற்று இருக்கும் இந்த வேளையில் மத்திய அரசு இந்த ஆதிக்கத்தைப் பணமாக்க முடிவு செய்துள்ளது. ஆம், மத்திய அரசு கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பது அனைவருக்கும் தெரியும், இந்த நெருக்கடியைச் சமாளிக்கக் கடன் பெறுவதற்குப் பதிலாகக் கேப்பிடல் சந்தையில் முதலீட்டை திரட்டுவதன் மூலம் ஈடுசெய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு எல்ஐசி … Read more

“கல்வி நிறுவனங்கள், மதத்தைக் காட்டுவதற்கான இடம் அல்ல!" – குஷ்பு

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அரசுக் கல்லூரி அனுமதி மறுத்த விவகாரம் இந்திய அளவில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. இது குறித்து குஷ்பு தன்னுடைய ட்விட்டர் பதிவில், “கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல, சமத்துவம் சார்ந்தது. விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் என்பது உங்கள் மதத்தைக் காட்டுவதற்கான இடம் அல்ல. ஒரு இந்தியராக நம் பலத்தைக் காட்டுங்கள். இதை வைத்து அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு அவமானம். Education is … Read more

கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம்! இன்று மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்

நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். அந்தவகையில் இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். பிப்ரவரி 09 ஆம் தேதி புதன்கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம் மேஷம் குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கை மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். பழைய … Read more

திமுகவுக்கு ஆதரவு: 10அதிமுக நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் நடவடிக்கை…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததாக 10அதிமுக நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி,  திருநெல்வேலி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஓபிஎஸ்,ஈபிஎஸ் அறிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  அறிவிக்கப்பட்டு நிலையில், வாக்கு சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மாற்றுக்கட்சியை இழுக்கும் குதிரை பேரமும் நடைபெற்று வருகிறது. பல வேட்பாளர்கள் மாற்று கட்சியினருக்கு ஆதரவு … Read more