பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சுயேட்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்த 113 வேட்பு மனுக்களும், ஏற்றுக் கொள்ளப்பட்டது.| Dinamalar

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்த 113 வேட்பு மனுக்களும், ஏற்றுக் கொள்ளப்பட்டது.பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு வரும் 19ம் தேதி நடக்க உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, ஆளுங்கட்சியான தி.மு.க., 16 வார்டுகள், அ.தி.மு.க., 17 வார்டுகள், பா.ம.க., 7 வார்டுகள், பா.ஜ., 11 வார்டுகள், எஸ்.டி.பி.ஐ., கட்சி 6 வார்டுகள், அ.ம.மு.க., 3 வார்டுகள், மா.கம்யூ., 2 வார்டுகளிலும், வி.சி., கட்சி … Read more

பிரதமர் மோடியை வரவேற்காமல் புறக்கணிப்பு: தெலங்கானா முதல் மந்திரிக்கு பாஜக கண்டனம்

ஐதராபாத், பிரதமர் மோடி இன்று தெலுங்கானா மாநிலம் வருகை தந்தார். ஐதராபாத் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை வரவேற்க  தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ்  வரவில்லை.  கவர்னர்  தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலங்கானா அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் உள்ளிட்டோர் பிரதமரை  விமான நிலையத்தில் வரவேற்றனர்.  பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கு சென்று சந்திரசேகர் ராவ் வரவேற்காதது அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.   எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் கடும் … Read more

சிறுவன் Rayan உயிரிழப்பு.., கடும் துயரத்தில் மொராக்கோ..

மொராக்கோவில் கிட்டத்தட்ட 5 நாட்களாக 104 அடியில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியிருந்த ஐந்து வயது சிறுவன் Rayanசடலமாக மட்கப்பட்டதால் நாடே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மொராக்கோவின் Chefchaouen மாநிலத்தில் உள்ள ஹிக்ரான் கிராமத்தை சேர்ந்த Rayan என்ற 5 வயது சிறுவன் கடந்த 1-ஆம் திகதி (செவ்வாய்கிழமை) மாலையில் 100 அடி (32 மீற்றர்) ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். அதனைத் தொடர்ந்து, கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக இரவும் பகலும் சிறுவனை மீட்கும்பணி நடந்தது. … Read more

நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் 40 புதிய மருத்துவ கல்லூரிகள்! மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் 40 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்  என நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த  மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இன்றைய மக்களை அமர்வின்போது, சுகாதார கட்டமைப்பு மேம்பாடு குறித்து உறுப்பினர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் பதில் அளித்தார். அப்போது, சுகாதார கட்டமைப்பு மேம்பாடு உயர்த்தப்பட்டு வருவதாகவும்,  நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்காக  மருத்துவக்கல்லூரிகள் … Read more

ஜூனியர் உலக கோப்பையை 5வது முறை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரொக்கப் பரிசு

19 வயதுக்குட்பட்டோருக்கான  உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ரூ.40 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது சிறிய டோக்கன் முறையிலான பாராட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஜூனியன் அணி ஐந்தாவது முறை சாம்பியன் பட்டம் வென்றவுடன் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா, வீரர்கள் மற்றும் துணைப்பணியாளர்களுக்கு ரொக்க வெகுமதிகளை அறிவித்தார்.  இது … Read more

இங்கிலாந்து அணியை வீழ்த்தி 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி

ஆன்டிகுவா: யு-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில்  வீழ்த்தி இந்திய அணி 5 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

விஸ்வரூபம் எடுக்கும் பர்தா விவகாரம் ; காவி துண்டு அணிந்து வரும் மாணவர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களுரு-கர்நாடக கல்வி மையங்களில் முஸ்லிம் மாணவியர், ‘பர்தா’ அணிந்து செல்ல அனுமதிக்கக் கோரி அம்மாநிலத்தின் பல பகுதிகளில் காங்., போராட்டம் நடத்தியது. இதற்கு பதிலடியாக பல கல்லுாரிகளில் ஹிந்து மாணவ – மாணவியர் கழுத்தில் காவித் துண்டுடன் வகுப்புக்கு வந்ததால் பரபரப்பு நிலவுகிறது. விதிமுறைகர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள உடுப்பி அரசு மகளிர் கல்லுாரியில், கடந்த மாதம் ஆறு முஸ்லிம் மாணவியர் பர்தா … Read more

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவில்லை எனில் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை – ஆசிரியர்கள் போராட்டம்

பர்னாலா, கொரோனா மூன்றாம் அலை பரவி வருவதை ஒட்டி பஞ்சாப்பில் இம்மாதம் 8ந்தேதி வரை பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை என அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பள்ளிகளை மீண்டும் வழக்கம்போல திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் போராட்டத்தில் இறங்கினர்.  பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவில்லையெனில் அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளனர். பர்னாலா மாவட்டத்தில் மட்டும் சுமார் 100 … Read more

இன்றைய ராசிபலன்

‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் பிப்ரவரி- 6 – ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன். 27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷ ராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத் துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி … Read more

உலகின் இரண்டாவது பெரிய சிலை: தெலுங்கானாவில் 216 அடி உயர ராமானுஜர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் முச்சிந்தலாவில் அமைக்கப்பட்டுள்ள  216 அடி உயர ராமானுஜர் சிலையை பிரதமர் மோடி இன்று மாலை திறந்து வைத்தார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாதின் புறநகர் பகுதியான ஷம்ஷாபாதில் ரூ.1,000 கோடி செலவில் பஞ்சலோகத்திலான பிரமாண்டமான ராமானுஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஜீயர் அறக்கட்டளையால் ஐதராபாத்தில் உள்ள சம்ஷாபாத்தில் உள்ள ஸ்ரீராம் நகரில் உள்ள ஜீவா ஆஸ்ரமத்திற்கு அருகில் ராமாநுஜரின் 1,000-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்த சிலை உருவாக்கப்பட்டு உள்ளது. 45 ஏக்கர் … Read more