முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பிப்.12ம் தேதி தொடங்க உள்ள தேர்வுக்கான ஹால் டிக்கெட் http://trb.tn.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடக அரசு அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

பெங்களூரு, கர்நாடகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக கர்நாடக அரசின் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை மற்றும் கர்நாடக மாநில கிராம வாழ்வாதார மேம்பாட்டுத்துறை மற்றும் அமேசான் நிறுவனம் இடையே ஒப்பந்தம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில்  கையெழுத்தானது. இதில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:- தற்போதைய சூழலில் ஏழ்மை நமக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது, கிராமப்புற மக்களை மேம்படுத்துவது மட்டுமல்லாது வறுமையையும் ஒழிக்க வேண்டும். ஏழை மக்களுக்கு … Read more

இன்றைய ராசி பலன் | 06/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOsv Source link

தடுப்பூசி போடாதவர்களுக்கு கடுமையான அபராதம்! கட்டாயமாக்கிய முதல் ஐரோப்பிய நாடு

ஐரோப்பாவில் கோவிட் தடுப்பூசியை கட்டாயப்படுத்திய முதல் நாடாக ஆஸ்திரியா திகழ்கிறது. ஆஸ்திரியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட யாரும் இன்று (05 பிப்ரவரி 2022) முதல் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும் அல்லது அவர்கள் கடுமையான அபராதத்தை சந்திக்க நேரிடும். கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகும், ஆஸ்திரியா இந்த அணுகுமுறையைத் தொடர முடிவு செய்தது. முன்னதாக, ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாம்மர் கூறுகையில், பிப்ரவரியில் பெரியவர்களுக்கு கோவிட் தடுப்பூசிகளை கட்டாயமாக்கும் ஐரோப்பாவில் முதல் நாடு இருக்கும் என்று … Read more

தீவிர சிகிச்சையில் கானக் குயில் லதா மங்கேஷ்கர்…

மும்பை: லதா மங்கேஷ்கர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இன்று பிப்ரவரி 5 ஆம் தேதி அவரது உடல்நிலை மோசமடைந்தது, மேலும் அவர் தொடர்ந்து ICU வில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். கடந்த மாதம் சிறிது முன்னேற்றம் காணப்பட்ட நிலையில், இன்று அதிகாலை லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்தது. புகழ்பெற்ற பாடகர் தீவிர சிகிச்சையில் தொடர்ந்து இருக்கிறார். லதா மங்கேஷ்கர் மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி 8 அன்று லதா மங்கேஷ்கருக்கு … Read more

U19 உலகக்கோப்பை கிரிக்கெட்: 189 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து- சேஸிங் செய்து இந்தியா வரலாறு படைக்குமா?

19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். இதனால் 61 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4 விக்கெட் வீழ்த்திய ரவி குமார் 4-வது … Read more

ரவுடி படப்பை குணாவின் கூட்டாளி கைது

சென்னை: ரவுடி படப்பை குணாவின் கூட்டாளி மாம்பாக்கம் பிரபு ஸ்ரீபெரும்பத்தூரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஏடிஎஸ்பி வெள்ளத்துரை தலைமையிலான தனிப்படை போலீசார் மாம்பாக்கம் பிரபுவை கைது செய்தனர்.

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?

லக்னோ, உத்தரப்பிரதேசத்தின் துறவி முதல் மந்திரியான  யோகி ஆதித்யநாத்திடம் இரண்டு துப்பாக்கிகளுடன் ரூ.1.54 கோடி மதிப்பிலான சொத்தும் இருப்பது தெரிந்துள்ளது. இந்த தகவல், அவர் போட்டியிடும் கோரக்பூரில் தாக்கல் செய்த மனுவில் வெளியாகி உள்ளது. மேலும், யோகி ஆதித்யநாத்திடம்  தங்கநகைகளும் உள்ளன. இவர் தனது மனுத்தாக்கலில் குறிப்பிட்டபடி, ரூ.49,000 மதிப்பிலான தங்கசெயின் உள்ளது. இதர தங்கநகைகளின் மதிப்பு ரூ.26,000 என குறிப்பிட்டுள்ளார்.  தற்போதைய கையிருப்பாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக உள்ளது.  டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தின் எஸ்பிஐ … Read more

எஸ்பிஐ நிகரலாபம் ரூ.8432 கோடி.. தனியார் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் PSU..!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அதன் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது. அதன் படி நிகரலாபம் 62% அதிகரித்து, 8432 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 5196 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வங்கியானது ஒரு காலாண்டில் அதிகளவிலான லாபத்தினை பதிவு செய்துள்ளது. வருவாய் மொத்த வருவாய் விகிதமானது 78,352 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 75,981 கோடி ரூபாயாக இருந்தது. இதே எஸ்பிஐ குழுமத்தின் நிகர லாபம் … Read more

“டி.வி-யை ஆன் செய்தால் ஸ்டாலின் வந்தாரு… போனாரு… ரிப்பீட்டு!'' – ஜெயக்குமார் தாக்கு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் குப்பையைத்தான் கொடுத்தனர். தேர்தல் உள்ளாட்சியில் மகளிருக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு திட்டத்தை மோசடி மூலம் தி.மு.க தனது திட்டம் எனக் கூறிவருகிறது. தொலைகாட்சியை ஆன் செய்தாலே ஆணழகன் ஸ்டாலின் … Read more