பாஜக ஆளும் கர்நாடகாவில் ஹிஜாப் அணியத் தடை – ராகுல் கண்டனம்

கர்நாடகா: பாஜக ஆளும் கர்நாடகாவில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை கண்டிக்கும் வகையில், தற்போது கர்நாடகாவில் குந்தபுரா பகுதியில் இஸ்லாமிய மாணவர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். பியூ கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய மாணவர்கள் களமிறங்கி போராடி வருகிறார்கள். மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் நாங்களும் வர மாட்டோம். … Read more

லதா மங்கேஷ்கர் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

மும்பை: இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில்  திரையுலகம், அரசியல் விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.  இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.  இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் … Read more

நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுவரை 100% கால அளவில் அலுவல் பணிகள் நடைபெற்றதற்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு..!!

டெல்லி: நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுவரை 100% கால அளவில் அலுவல் பணிகள் நடைபெற்றதற்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த வாரம் போலவே மீதமுள்ள நாட்களிலும் அவையை சுமுகமாக நடத்த எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.

கர்நாடக கல்லூரி மாணவரின் சூட்கேஸ் பெட்டிக்குள் காதலி| Dinamalar

உடுப்பி: கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில், விடுதிக்கு வந்த இன்ஜினியரிங் கல்லுாரி மாணவரின் ‘சூட்கேஸ்’ பெட்டிக்குள், அவரது காதலியான மாணவி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, உடுப்பி மாவட்டம் மணிபால் அருகே உள்ள இன்ஜினியரிங் கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் பலரும் விடுதியில் தங்கியுள்ளனர். சமீபத்தில் அவர்களில் ஒருவர் மிகப்பெரிய சூட்கேஸ் உடன் விடுதிக்கு வந்துள்ளார். அங்கிருந்த காவலர்கள் சந்தேகம் அடைந்து, அதில் என்ன இருக்கிறது என … Read more

சாமானியர்களுக்கு சரியான வாய்ப்பு.. தடுமாறும் தங்கம் விலை .. நிபுணர்களின் சூப்பர் கணிப்பு!

கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது பெரியளவில் மாற்றமின்றி தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. இது இன்னும் முதலீட்டாளர்களுக்கு வாங்க சரியான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1852 டாலர்களை தொட்ட நிலையில், பெரியளவில் ஏற்றம் காணவில்லை. மாறாக பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டது. குறிப்பாக வார இறுதியில் முதலீட்டாளர்கள் புராபிட் செய்ததன் காரணமாக பெரியளவில் மாற்றமின்றி காணப்பட்டது. பேங்க் ஆப் இங்கிலாந்து பேங்க் ஆப் இங்கிலாந்து கடந்த வாரத்தில் வட்டி விகிதத்தினை … Read more

BB Ultimate எவிக்‌ஷன்: வனிதாவா, சுரேஷா, அபிநய்யா? முதல் ஆளாக வெளியேறியது யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 5 விஜய் டிவியில் சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து ஒ.டி.டி.யில் முதன் முறையாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில், கடந்த வாரம் முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியது பிக் பாஸ் அல்டிமேட். பிக் பாஸ் முந்தைய சீசன்களில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய வனிதா விஜய்குமார், பாலா, தாடி பாலாஜி, ஜூலி உள்ளிட்ட 14 பேர் பிக் பாஸ் அல்டிமேட்டில் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர். பிக் பாஸ் அல்டிமேட் 24 மணி நேர லைவ் எனச் சொல்லப்பட்டாலும், … Read more

ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழ மாட்டேன்! திட்டவட்டமாக கூறிய நடிகர் தனுஷ்.. சோகத்தில் குடும்பத்தார்கள்

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறியுள்ளது குடும்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் முடிவடைந்த நிலையில் திடீரென இருவரும் பிரிய போவதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் … Read more

அதிமுக – பாஜக நாடகத்துக்கு மக்கள் பதிலடி தருவார்கள் – துரைமுருகன்

சென்னை: அதிமுக – பாஜக நாடகத்துக்கு மக்கள் பதிலடி தருவார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அதிமுக – பாஜக நாடகத்துக்கு மக்கள், மாணவ சமுதாயம் பதிலடி தருவார்கள் என்றும், நீட் தேர்வு தடுத்து நிறுத்தப்பட்டதுடன் திமுக ஆட்சியில் இருந்தவரை நீட் நுழையவில்லை என்றும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நீட் விவகாரத்தில் மீண்டும், மீண்டும் பொய் சொல்லி வரும் ஓபிஎஸ் மக்களை ஏமாற்ற துடிக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.

அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கு அ.தி.மு.க. ஆதரவு- மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- தங்களின் 3-2-2022 நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். அதில், மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் சட்ட முன்வடிவினை மறுபரிசீலனை செய்யும் பொருட்டு, கவர்னர் தமிழ்நாடு அரசிற்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கூட்ட அரங்கில் நடைபெற இருக்கும் சட்டமன்ற அனைத்துக் கட்சித் … Read more

ஃபாக்ஸ்கான் ஆலை விவகாரம்!: சாட்டை துரைமுருகன் தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் நீதிபதி ஆணை..!!

சென்னை: சாட்டை துரைமுருகன் தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் ஆணையிட்டுள்ளார். ஃபாக்ஸ்கான் ஆலை விவகாரத்தில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட வழக்கினை ரத்து செய்யக் கோரி சாட்டை துரைமுருகன் வழக்கு தொடர்ந்திருந்தார். திருவள்ளுவர் தாலுகா காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு பிப்ரவரி 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.