பழனிசாமியும் பன்னீர்செல்வமும் அடிமைச் சேவகம் செய்வதில் போட்டி போட்டவர்கள் – தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

கடலூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தி.மு.க.சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி என்ற தலைப்பிலான தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி இருக்கிறோம். அதை ஆளுநருக்கு  மீண்டும் அனுப்பி வைத்திருக்கிறோம்.  ஏழை, எளிய மாணவர்கள், கிராமப்புற மாணவர்கள், பட்டியலின பழங்குடி மாணவர்கள், … Read more

பாகுபலி பாடகர் திருமணம்

சென்னை: தெலுங்கு உள்பட பல மொழிகளில் வெளியான பாகுபலி படத்தில் இடம்பெற்ற ‘மனோகரி’என்ற பாடலைப் பாடியிருந்தவர், எல்.வி.ரேவந்த். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா என்ற படத்திலும் பாடியுள்ளார். கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நிறைய பாடல்களைப் பாடியிருக்கும் எல்.வி.ரேவந்த், தமிழில் அருண் விஜய் நடிப்பில் வெளியான தடம் என்ற படத்திலும் பாடியிருந்தார். அவருக்கும், அன்விதா என்பவருக்கும் இருவீட்டு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுடைய திருமணம் ஆந்திர மாநிலத்தில் எளியமுறையில் நடந்தது.

15 வயதிற்கு கீழ் உள்ளோருக்கு தடுப்பூசி நிபுணர் குழு அறிவுரைப்படி முடிவு| Dinamalar

புதுடில்லி :நிபுணர் குழு அறிவுரைப்படி, 15 வயதிற்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுவது குறித்து முடிவு செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5 கோடி பேர் நேற்று ராஜ்யசபாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது:தற்போது நாடு முழுதும், 15 – 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இப்பிரிவில் இதுவரை, 67 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 5 கோடி பேருக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுஉள்ளது.பள்ளிகள் திறக்கப்படுவதால், 15 வயதிற்கு உட்பட்டோருக்கு … Read more

அருணாசல பிரதேசத்தில் பனிச்சரிவில் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு; பிரதமர் மோடி இரங்கல்

புதுடெல்லி, அருணாசல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக சீரற்ற வானிலை நிலவி வருகிறது. கடுமையான பனிப்பொழிவும் நிலவி வருகிறது. அங்குள்ள காமெங் செக்டார் பகுதியில் ராணுவ வீரர்கள் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கடும் பனிச்சரிவு ஏற்பட்டதில் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் பாண்டே உள்ளிட்ட 7 ராணுவ வீரர்கள் அதில் சிக்கி கொண்டனர். இதனையடுத்து அங்கு மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன.  இந்த நிலையில், பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் … Read more

ஊழியர்களுக்கு இலவச பாரின் டூர்.. அசத்தும் பிரிட்டன் நிறுவனம்..!

கொரோனா காலத்தில் பல தடைகளைத் தாண்டி கடுமையாக உழைத்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிய ஊழியர்களுக்கு நன்றி கூறும் வகையில் உலகளவில் பல நிறுவனங்கள் பல விதத்தில் பல விஷயங்களைச் செய்து வருகிறது. குறிப்பாகக் கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்குப் பணமாகவே கொடுத்துள்ளனர், இன்னும் சில நிறுவனங்கள் ஊழியர்களுக்குப் பல்வேறு பரிசுகளைக் கொடுத்துள்ளது. ரூ.1.7 லட்சம் கோடிக்கு நிர்மலா சீதாராமன் அறிவித்த A – Z திட்டங்கள் இதோ! இந்நிலையில் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒரு … Read more

ஹிஜாப் விவகாரம்: மக்களவையில் கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சிகள்!

கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அரசுக் கல்லூரி அனுமதி மறுத்த விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று காலை அந்த குறிப்பிட்ட கல்லூரிக்கு ஒரு முஸ்லிம் மாணவி ஹிஜாபுடன் நுழைவதைக் கண்ட 50-க்கும் மேற்பட்ட இந்து மாணவர்கள், அந்தப் பெண்ணை நோக்கி `ஜெய் ஶ்ரீராம்’ என கோஷமிட்டனர். அந்த பெண்ணும் பதிலுக்கு `அல்லாஹு அக்பர்’ எனக் கோஷமிட, அவரை `ஜெய் ஶ்ரீராம்’ என கோஷமிட்டபடி இந்து மாணவர்கள் தொடர்ந்து சென்றனர். பின்னர், … Read more

துண்டு துணிக்காக எங்கள் கல்வியை பாழாக்குகின்றனர்! தனி ஆளாக காவி துண்டு குழுவை எதிர்த்து நின்ற மாணவி கொந்தளிப்பு

 தனியாக காவி துண்டு குழுவினரை எதிர்கொள்வதைப் பற்றி நான் கவலைப்படவில்லை, மேலும் ஹிஜாப் அணியும் உரிமைக்காக தொடர்ந்து போராடுவேன் என கர்நாடகா மாணவி முஸ்கான் தெரிவித்துள்ளார். கர்நாடகாவின் மாண்டியா pre-University கல்லூரியில் தனி ஆளாக, காவி துண்டு குழுவினரை புர்கா அணிந்த மாணவி எதிர்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. காவி துண்டு குழுவினரை தனி ஆளாக எதிர்த்த மாணவி முஸ்கான் சம்பவம் குறித்து கூறியதாவது, நான் கவலைப்படவில்லை. நான் கல்லூரிக்குள் நுழைந்தபோது புர்கா அணிந்திருந்ததால் காவி துண்டு … Read more

நாளை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமேஸ்வரம் இலங்கை அரசைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ர வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். தமிழக மீனவர்களைக் கைது செய்து அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்வதை இலங்கை கடற்படை வழக்கமாகக் கொண்டுள்ளது.  இதை எதிர்த்து மத்திய மாநில அரசுகள் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளன.  அப்போது இந்த நடவடிக்கை சற்று குறைந்து மீண்டும் தொடங்குவது அடிக்கடி நடைபெறுகிறது. இவ்வாறு  தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடி  படகுகளைத் திரும்ப அவர்களிடம் அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசு பலமுறை … Read more

தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று மளமளவென சரிந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 5,104 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய தொற்று பாதிப்பு 4,519 ஆக குறைந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,519 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 1,15,898 மாதிரிகள் … Read more

பிப்ரவரி 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: பிப்ரவரி 17ம் தேதி காலை 10 மணி முதல் 19ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.