அரசு விரைவு பேருந்துகள் உணவு இடைவேளைக்கு எந்தெந்த இடங்களில் நிறுத்த வேண்டும்! பட்டியல் வெளியீடு

சென்னை: அரசு  விரைவு பேருந்துகள், வழியில் பயணிகள் சிற்றுண்டி மற்றும் உணவுகள் அருந்த எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் என்ற பட்டியலை அரசு போக்குவரத்துக்கு துறை வெளியிட்டுள்ளது. தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள், உணவு இடைவேளையின்போது, தரமற்ற சாலையோர உணவகங்களில் நிறுத்தி விடுவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து  ஆய்வு செய்த போக்குவரத்துறை அதிகாரிகள், அரசு பேருந்துகள் உணவு இடைவேளைக்காக நிறுத்தும் இடங்களை ரத்து செய்தனர். இந்த … Read more

சட்டசபை சிறப்பு கூட்டம் விரைவில் கூடுகிறது- மசோதாவை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப ஏற்பாடு

சென்னை: தமிழகத்தில் 2017-ம் ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வுகள் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். நீட் தேர்வு முறையால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டதால் நீட் தேர்வு முறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது நீட் தேர்வுக்கு விலக்கு கோரி ஜனாதிபதியிடம் முறையிடப்பட்டது. ஆனால் ஜனாதிபதி ஒப்புதல் வழங்கவில்லை. இதற்கிடையே நீட் தேர்வு பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தில் பின் … Read more

ஐசிசி யு-19 உலக கோப்பை பைனல்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

ஆன்டிகுவா: ஐசிசி யு-19 உலக கோப்பை பைனலில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆன்டிகுவாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலில் களமிறங்க உள்ளது.

முதல் வாரத்தில் ராஜ்யசபாவில் பணிகள் சுமூகம்: அவை தலைவர் பாராட்டு| Dinamalar

புதுடில்லி: பட்ஜெட் கூட்டத்தொடரில் ராஜ்யசபாவில் முதல்வாரத்தில் முதல் 3 நாட்கள் எந்தவித அமளியும் ஒத்தி வைப்பும் இல்லாமல் பணிகள் 100 சதவீதம் நடந்துள்ளது. இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள அவை தலைவர் வெங்கையா நாயுடு, வரும் நாட்களிலும் இதே போன்ற சூழ்நிலை தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.,31 அன்று ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. தொடர்ந்து 1 ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து ராஜ்யசபாவில், … Read more

டாடா மோட்டார்ஸ் கொடுத்த ஆஃபர்.. கார் பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. இது ஷேர் விலையில்?

இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றான டாடா குழுமமத்தினை சேர்ந்த, முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்று டாடா மோட்டார்ஸ். இந்த நிறுவனம் ஜனவரி மாதத்தில் மிகப்பெரிய அளவில் வாகன விற்பனையை செய்துள்ளது. இது வரவிருக்கும் மாதங்களிலும் வாகன விற்பனையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை கையாண்டு வருகின்றது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். முதல் கட்டமாக மற்ற வாகன நிறுவனங்கள் விலையை அதிகரித்துக் கொண்டுள்ள நிலையில் வாகனங்களின் விலையில் சலுகையினை அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ். டாடாவுக்கு ஏற்பட்ட பலத்த நஷ்டம்.. … Read more

உ.பி: `ரூ.1.5 கோடி சொத்து… சொந்தமாக கார் இல்லை' – பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார் யோகி!

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் வரும் 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. அதனால், அங்கு தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், நேற்று உத்தரப்பிரதேச முதல்வர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவர் தனது பிரமாணப் பத்திரத்தில், 6 வங்கிக் கணக்குகளில் ரூ.1,54,94,054 ரொக்கமும், ரூ.12 ஆயிரம் மதிப்பிலான செல்போனும், ரூ.1 லட்சம் மதிப்புடைய கைத்துப்பாக்கியும், ரூ.80,000 ஆயிரம் மதிப்பிலான ரிவால்வரும், ரூ.49,000 … Read more

வீட்டுக்குள் மர்மநபர் அரைகுறை ஆடையுடன் இருந்தார்! சசிகலா புஷ்பாவின் 2வது கணவர் பரபரப்பு புகார்

சசிகலா புஷ்பா வீட்டு படுக்கை அறையில் அடையாளம் தெரியாத நபர் அரைகுறை ஆடையுடன் இருந்தார் என இரண்டாவது கணவர் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுகவில் முன்னர் எம்.பியாக இருந்தவர் சசிகலா புஷ்பா. பின்னர் பாஜகவில் இணைந்த அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. சசிகலா புஷ்பா வீட்டில் அரைகுறை ஆடையுடன் படுக்கை அறையில் மர்மநபர் இருந்தது குறித்து அவரின் 2வது கணவர் ராமசாமி காவல் நிலையத்தில் சமீபத்தில் புகாரளித்தார். இதையடுத்து விசாரணை … Read more

பாஜக ஆளும் கர்நாடகாவில் ஹிஜாப் அணியத் தடை – ராகுல் கண்டனம்

கர்நாடகா: பாஜக ஆளும் கர்நாடகாவில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனை கண்டிக்கும் வகையில், தற்போது கர்நாடகாவில் குந்தபுரா பகுதியில் இஸ்லாமிய மாணவர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். பியூ கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய மாணவர்கள் களமிறங்கி போராடி வருகிறார்கள். மாணவிகளை உள்ளே அனுமதிக்கவில்லை என்றால் நாங்களும் வர மாட்டோம். … Read more

லதா மங்கேஷ்கர் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்

மும்பை: இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில்  திரையுலகம், அரசியல் விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.  இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.  இதையடுத்து அவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் … Read more

நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுவரை 100% கால அளவில் அலுவல் பணிகள் நடைபெற்றதற்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு..!!

டெல்லி: நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுவரை 100% கால அளவில் அலுவல் பணிகள் நடைபெற்றதற்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த வாரம் போலவே மீதமுள்ள நாட்களிலும் அவையை சுமுகமாக நடத்த எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.