2.30 லட்சம் பேர் நலம்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2,30,814 பேர் நலம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,27,952 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,20,80,664 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 2,30,814 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,02,47,902 ஆனது. தற்போது 13,31,648 பேர் … Read more

பேடிஎம் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.. ரூ.779 கோடி நஷ்டம்.. அப்படின்னா பங்கு விலை என்னாவது?

கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவு பொது பங்கு வெளியீடானது இருந்தது. குறிப்பாக பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பங்கு வெளீயீடானது பெரியளவில் இருந்தது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்பட்டது. எனினும் கடந்த ஆண்டில் மறக்கமுடியாத பங்கு வெளியீடு எனில், அது பேடிஎம் வெளியீடாகத் தான் இருக்கும். ஏனெனில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நாளே பலத்த அடியினை கொடுத்தது. பின் டெக் நிதி நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் கடந்த ஆண்டில் பங்கு … Read more

உ.பி சட்டமன்றத் தேர்தல்: யோகிக்கு எதிராகக் களமிறங்கும் `தர்ணா' ஆசிரியர்!

உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவுக்கு எதிராக பா.ஜ.க மத்திய அமைச்சரை களத்தில் இறக்கி இருக்கிறது. பா.ஜ.க மற்றும் சமாஜ்வாடி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் சென்று நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இந்த நிலையில், கடந்த 26 ஆண்டுகளாக நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடி வரும் பள்ளி ஆசிரியர் ஒருவர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக … Read more

எமனாக மாறிய நீண்ட கூந்தல்! பரிதாபமாக உயிரிழந்த 21 வயதான கர்ப்பிணி பெண்… எச்சரிக்கை செய்தி

ஐரோப்பிய நாடான பெலாரஸில் நீளமான தலைமுடியை கொண்டிருந்த இளம் வயது கர்ப்பிணி பெண் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது மற்றவர்களுக்கு எச்சரிக்கை தரும் செய்தியாக அமைந்துள்ளது. 21 வயதான உமிடா நசரோவா என்ற பெண் ஏழு வார கர்ப்பிணியாக இருந்தார். உதவியாளர் பணியில் இருந்த உமிடா, வெல்டிங் கம்பிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் புதிய வேலைக்காக விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து அந்த தொழிற்சாலைக்கு 20 நாட்களுக்கு முன்னர் சென்ற உமிடா இடங்களை சுற்றி பார்த்தபடி இருந்தார். நீளமான தலைமுடியை கொண்ட … Read more

சென்னை மாநகராட்சி தேர்தல்: 200 வார்டுகளுக்கு 3 திருநங்கைகள் உள்பட 3,456 பேர் வேட்புமனு தாக்கல்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி,  12,838 உள்ளாட்சி பதவிகளுக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு 3,456 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் 3 திருநங்கைகளும் உள்ளனர். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி … Read more

பள்ளத்தூர் பேரூராட்சி 8-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளர் தெய்வானை என்பவர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். இவரை எதிர்த்து யாருமே மனுதாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய இடைக்கால பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமனம்

ஆஸ்திரேலிய: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய இடைக்கால பயிற்சியாளராக ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜஸ்டின் லாங்கர் விலகியதை தொடர்ந்து ஆண்ட்ரூ மெக்டொனால்டு நியமிக்கப்பட்டார்.

தெய்வ சங்கல்பம் என்ற பெயரில் புதிய திட்டம்

பெங்களூரு-”பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்கும் வகையில் கர்நாடகாவில் கோவில்களை மேம்படுத்துவதற்காக, ‘தெய்வ சங்கல்பம்’ என்ற பெயரில் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும். முதல் கட்டமாக 25 கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றை மேம்படுத்த ‘மாஸ்டர் பிளான்’ வகுக்கப்பட்டுள்ளது,” என ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே தெரிவித்தார்.ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சசிகலா ஜொல்லே, பெங்களூரு விகாஸ் சவுதாவில் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.கூட்டத்துக்கு பின் அவர் கூறியதாவது:கர்நாடகாவில் அதிக பக்தர்கள் தரிசனத்துக்கு செல்லும் … Read more

ரூ.1 கோடி இலக்கு.. SIP-ல் எவ்வளவு முதலீடு.. எத்தனை ஆண்டுகள் செய்யணும்..!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது. திட்டம் தொடர்பான ஆவணங்களையும், தகவல்களையும் கவனமாக படியுங்கள் என்று செய்தித்தாள்கள், டிவிக்கள் என அனைத்து பார்த்திருப்போம். கேட்டிருப்போம். ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரிஸ்க் என்பது இருந்தாலும், மற்ற வங்கி, பங்கு சந்தை முதலீடுகளை காட்டிலும் லாபகரமான திட்டமாகவும் பார்க்கப்படுகின்றது ஆக நீண்டகால நோக்கில் முதலீடு செய்யும் போது மிக லாபகரமான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இது பங்கு சந்தை திட்டங்களை காட்டிலும் மிக லாபகரமான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. முகேஷ் அம்பானியை … Read more

புதுச்சேரி: பள்ளிகளில் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டன! | புகைப்படத் தொகுப்பு

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து பாடம் படிக்க ஆர்வமுடன் வந்த மாணவிகள் பள்ளிகள் … Read more