அனைத்து சட்ட நடவடிக்கைகளுக்கு அ.தி.மு.க. ஆதரவு- மு.க.ஸ்டாலினுக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- தங்களின் 3-2-2022 நாளிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றேன். அதில், மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வழிவகை செய்யும் சட்ட முன்வடிவினை மறுபரிசீலனை செய்யும் பொருட்டு, கவர்னர் தமிழ்நாடு அரசிற்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கூட்ட அரங்கில் நடைபெற இருக்கும் சட்டமன்ற அனைத்துக் கட்சித் … Read more

ஃபாக்ஸ்கான் ஆலை விவகாரம்!: சாட்டை துரைமுருகன் தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் நீதிபதி ஆணை..!!

சென்னை: சாட்டை துரைமுருகன் தொடர்ந்த வழக்கில் காவல்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் ஆணையிட்டுள்ளார். ஃபாக்ஸ்கான் ஆலை விவகாரத்தில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட வழக்கினை ரத்து செய்யக் கோரி சாட்டை துரைமுருகன் வழக்கு தொடர்ந்திருந்தார். திருவள்ளுவர் தாலுகா காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு பிப்ரவரி 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் கவலைக்கிடம்| Dinamalar

மும்பை: பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நிலை மோசமடைந்துள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த, ‛பாலிவுட்’ பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்(92). கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்க கடந்த 8 ம் தேதி கோவிட் தொற்று உறுதியானது. தெற்கு மும்பையில் உள்ள ‛பிரீச் கேண்டி’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ‛வென்டிலேட்டர்’ மூலம் சுவாசித்து வருகிறார். அவரது உடல்நிலையில் … Read more

யார் இந்த ராகுல் பாட்டியா.. !#indigo #rahulbhatia

இண்டிகோ ஒரு தனியார் விமான நிறுவனம் ஆகும். விமான சந்தையில் மிகப்பெரிய பங்கினை கொண்டுள்ள ஒரு நிறுவனமாகும். வலுவான செயல்பாட்டின் காரணமாக கடந்த ஆண்டில் நஷ்டத்தில் இருந்த இந்த நிறுவனம், தற்போது லாபத்திற்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் தான் இந்த நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்த ராகுல் பாட்டியா, தற்போது அதன் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றுள்ளார். பேடிஎம் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.. ரூ.779 கோடி நஷ்டம்.. அப்படின்னா பங்கு விலை என்னாவது? புதிய எம்டி? இத்தொழிற்துறையில் நிலவி வந்த … Read more

தென்காசி: முதுமக்கள் தாழிகளை உடைத்து தங்கப் புதையல் தேடும் கும்பல்? – நடவடிக்கை எடுக்கப்படுமா?!

தென்காசி மாவட்டத்தில் ஜம்புநதி கரையில் கடையம் கிராமம் உள்ளது. வரலாற்றுடன் தொடர்புடைய ஜம்புநதி மற்றும் ராமநதி பாயும் பகுதியில் இருக்கும் இந்தக் கிராமம் பழைமை வாய்ந்தது. இங்கு குப்பைகளை சேமிக்கவும், இயற்கை உரம் தயாரிக்கவும் மூன்று ராட்சதக் குழிகள் தோண்டப்பட்டன. உடைந்து கிடக்கும் முதுமக்கள் தாழி குழிகள் தோண்டியபோது மண்ணுக்குள் புதைந்து கிடந்த பானைகள் உடைபட்டுள்ளன. அங்கு பணியில் இருந்தவர்களுக்கு அவை முதுமக்கள் தாழி என்பது தெரியாததால் சிலவற்றை உடைத்துள்ளனர். இது குறித்த தகவல் பரவியதும் பொதுமக்கள் … Read more

100 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்! தாய்- தந்தையின் நெஞ்சை உருக்கும் வார்த்தைகள்

மொராக்கோவில் 100 அடி கிணற்றுக்குள் விழுந்த 5 வயது சிறுவனை காப்பாற்ற மீட்பு குழுவினர் நான்கு நாட்களாக போராடும் நிலையில் சிறுவனின் தந்தை சிறிது நேரம் கூட கண் அசராமல் மகனை நினைத்து தவித்து வருகிறார். மொராக்கோவின் Chefchaouenல் உள்ள ஹிக்ரான் கிராமத்தை சேர்ந்த Rayan என்ற 5 வயது சிறுவன் கடந்த 1ஆம் திகதி மாலையில் 100 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். இதையடுத்து 4 நாட்களாக சிறுவனை மீட்க மீட்பு குழுவினர் … Read more

நீட் விலக்கிற்கு அதிமுக ஆதரவு! முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கடிதம்…

சென்னை: நீட் விலக்கு பெறுவதற்காக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு தரும்  என துணை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பிய அனுப்பியது தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி அதிமுக உள்பட 13 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணிப்பதாக பாஜக  ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், இன்று … Read more

அரசியல் சட்ட கடமையை கவர்னர் செய்யவில்லை- அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை சட்டசபை அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வினை ரத்து செய்திட வேண்டும் என்பதில் நாம் அனைவருமே ஒருமித்த கருத்தோடு இருக்கிறோம். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அதையொட்டித்தான் ஒற்றுமையாக பல்வேறு நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுத்து கொண்டு வருகிறோம். நுழைவுத்தேர்வு தேவையில்லை என்று முடிவு செய்த மாநிலம்தான் நம்முடைய தமிழ்நாடு. 2006-ல் … Read more

'பாகிஸ்தான் சிறையில் 83 இந்திய வீரர்கள் உள்ளனர்': மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: பாகிஸ்தான் சிறையில் 83 இந்திய வீரர்கள் உள்ளதாகவும், இத்தகவலை பாகிஸ்தான் மறுப்பதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. மக்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் பதிலளித்தார்.

மத்திய அமைச்சர் பிரதான் பாராட்டு| Dinamalar

புதுடில்லி: குடியரசு தின அணிவகுப்பில் சிறந்த வாகனத்துக்கான விருதை மத்திய கல்வி அமைச்சகம் பெற்றுள்ளது. இதுகுறித்து மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த 26ம் தேதி டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் மாநிலங்கள் பங்கேற்றன. அணிவகுப்பில் பங்கேற்ற வாகனங்களில் சிறந்த வாகனத்துக்கான விருதை கல்வித் துறை பெற்றுள்ளது. வேத காலம் முதல் ‘டிஜிட்டல்’ காலம் வரை கல்வித்துறை வளர்ச்சியை சித்தரித்து … Read more