தினசரி ரூ.150 போதும்.. ரூ.20 லட்சம் கேரண்டி.. அஞ்சலகத்தின் இந்த திட்டத்தை பாருங்க..!

இந்தியாவினை பொறுத்த வரையில் முதலீட்டாளர்களை கவரும் வண்ணம் பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது அஞ்சலகத்தின் பொது வருங்கால வைப்பு நிதி திட்டமும் ஒன்று. ஏனெனில் பாதுகாப்பான, கணிசமான வருவாய் கொடுக்கும் ஒரு திட்டமாகவும் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக முதலீட்டுக்கு எந்த பங்கமும் இல்லை. அஞ்சலகத்தில் பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், அவர்களுக்கு மிக பாதுகாப்பான திட்டமாக பார்க்கப்படுவது அஞ்சலகத்தின் வருங்கால வைப்பு நிதி திட்டம் தான். ரூ.1 கோடி இலக்கு.. SIP-ல் எவ்வளவு முதலீடு.. … Read more

வரலாறு காணாத சரிவை சந்தித்த Facebook; பணக்காரர்கள் பட்டியலில் சரிந்த மார்க் சக்கர்பெர்க்!

டிக்டாக் மற்றும் யூடியூப் போன்றவற்றின் வளர்ச்சியால் ஃபேஸ்புக்கின் வருமானம் குறைந்துள்ளதை தொடர்ந்து, மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் குறைந்துள்ளதாக அமெரிக்காவின் வர்த்தகப் பத்திரிகையான போர்ப்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் பில்லியனர்களான கெளதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானியை விட, பேஸ்புக் சிஇஓ மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு கீழே இறங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. Mark Zuckerberg | மார்க் சக்கர்பெர்க் Also Read: Meta: ஃபேஸ்புக் நிறுவனப் பெயரை மாற்றிய மார்க் சக்கர்பெர்க்… என்ன காரணம்? … Read more

இரவு நேரத்தில் தைரியமானவர்கள் கூட பயணிக்க அஞ்சும் ஒரு காடு: அச்சத்தையூட்டும் புகைப்படங்கள்

ஜேர்மனியில் உள்ள காடு ஒன்றில் காணப்படும் காட்சிகள் புகைப்படக் கலைஞர்களின் கமெராக்களின் பசியை ஆற்றும் விதத்தில் அமைந்திருந்தாலும், இரவு நேரங்களில் அங்கு செல்ல அஞ்சுகிறார்களாம் அவர்கள். அதற்கு காரணம் அங்குள்ள மரங்களில் தொங்கவிடப்பட்டுள்ள பொம்மைகள். அச்சத்தையூட்டும் வகையில் அந்த காட்டிலுள்ள மரங்களில் விதவிதமான பொம்மைகள் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளன. பயங்கர முக பாவத்துடன் சில பொம்மைகள், கழுத்தில் கயிறு கட்டி தொங்கவிடப்பட்டுள்ள சில பொம்மைகள், அழும் பொம்மைகள், கோமாளி வேடத்தில் சில பொம்மைகள் என ஒவ்வொரு பொம்மையும் ஒவ்வொரு … Read more

அரசு விரைவு பேருந்துகள் உணவு இடைவேளைக்கு எந்தெந்த இடங்களில் நிறுத்த வேண்டும்! பட்டியல் வெளியீடு

சென்னை: அரசு  விரைவு பேருந்துகள், வழியில் பயணிகள் சிற்றுண்டி மற்றும் உணவுகள் அருந்த எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் என்ற பட்டியலை அரசு போக்குவரத்துக்கு துறை வெளியிட்டுள்ளது. தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களுக்கும் விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள், உணவு இடைவேளையின்போது, தரமற்ற சாலையோர உணவகங்களில் நிறுத்தி விடுவதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து  ஆய்வு செய்த போக்குவரத்துறை அதிகாரிகள், அரசு பேருந்துகள் உணவு இடைவேளைக்காக நிறுத்தும் இடங்களை ரத்து செய்தனர். இந்த … Read more

சட்டசபை சிறப்பு கூட்டம் விரைவில் கூடுகிறது- மசோதாவை மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப ஏற்பாடு

சென்னை: தமிழகத்தில் 2017-ம் ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வுகள் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். நீட் தேர்வு முறையால் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டதால் நீட் தேர்வு முறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது நீட் தேர்வுக்கு விலக்கு கோரி ஜனாதிபதியிடம் முறையிடப்பட்டது. ஆனால் ஜனாதிபதி ஒப்புதல் வழங்கவில்லை. இதற்கிடையே நீட் தேர்வு பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தில் பின் … Read more

ஐசிசி யு-19 உலக கோப்பை பைனல்: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு

ஆன்டிகுவா: ஐசிசி யு-19 உலக கோப்பை பைனலில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆன்டிகுவாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலில் களமிறங்க உள்ளது.

முதல் வாரத்தில் ராஜ்யசபாவில் பணிகள் சுமூகம்: அவை தலைவர் பாராட்டு| Dinamalar

புதுடில்லி: பட்ஜெட் கூட்டத்தொடரில் ராஜ்யசபாவில் முதல்வாரத்தில் முதல் 3 நாட்கள் எந்தவித அமளியும் ஒத்தி வைப்பும் இல்லாமல் பணிகள் 100 சதவீதம் நடந்துள்ளது. இதற்கு பாராட்டு தெரிவித்துள்ள அவை தலைவர் வெங்கையா நாயுடு, வரும் நாட்களிலும் இதே போன்ற சூழ்நிலை தொடர வேண்டும் என தெரிவித்துள்ளார். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.,31 அன்று ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. தொடர்ந்து 1 ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து ராஜ்யசபாவில், … Read more

டாடா மோட்டார்ஸ் கொடுத்த ஆஃபர்.. கார் பிரியர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. இது ஷேர் விலையில்?

இந்தியாவின் முன்னணி வணிக குழுமங்களில் ஒன்றான டாடா குழுமமத்தினை சேர்ந்த, முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்று டாடா மோட்டார்ஸ். இந்த நிறுவனம் ஜனவரி மாதத்தில் மிகப்பெரிய அளவில் வாகன விற்பனையை செய்துள்ளது. இது வரவிருக்கும் மாதங்களிலும் வாகன விற்பனையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை கையாண்டு வருகின்றது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். முதல் கட்டமாக மற்ற வாகன நிறுவனங்கள் விலையை அதிகரித்துக் கொண்டுள்ள நிலையில் வாகனங்களின் விலையில் சலுகையினை அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ். டாடாவுக்கு ஏற்பட்ட பலத்த நஷ்டம்.. … Read more

உ.பி: `ரூ.1.5 கோடி சொத்து… சொந்தமாக கார் இல்லை' – பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார் யோகி!

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் வரும் 10-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. அதனால், அங்கு தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், நேற்று உத்தரப்பிரதேச முதல்வர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவர் தனது பிரமாணப் பத்திரத்தில், 6 வங்கிக் கணக்குகளில் ரூ.1,54,94,054 ரொக்கமும், ரூ.12 ஆயிரம் மதிப்பிலான செல்போனும், ரூ.1 லட்சம் மதிப்புடைய கைத்துப்பாக்கியும், ரூ.80,000 ஆயிரம் மதிப்பிலான ரிவால்வரும், ரூ.49,000 … Read more

வீட்டுக்குள் மர்மநபர் அரைகுறை ஆடையுடன் இருந்தார்! சசிகலா புஷ்பாவின் 2வது கணவர் பரபரப்பு புகார்

சசிகலா புஷ்பா வீட்டு படுக்கை அறையில் அடையாளம் தெரியாத நபர் அரைகுறை ஆடையுடன் இருந்தார் என இரண்டாவது கணவர் கொடுத்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுகவில் முன்னர் எம்.பியாக இருந்தவர் சசிகலா புஷ்பா. பின்னர் பாஜகவில் இணைந்த அவருக்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. சசிகலா புஷ்பா வீட்டில் அரைகுறை ஆடையுடன் படுக்கை அறையில் மர்மநபர் இருந்தது குறித்து அவரின் 2வது கணவர் ராமசாமி காவல் நிலையத்தில் சமீபத்தில் புகாரளித்தார். இதையடுத்து விசாரணை … Read more