மொராக்கோ சிறுவன் Rayan சடலம் மீட்கப்பட்ட நிமிடங்களில் நடந்தது என்ன? கசிந்த சில தகவல்கள்..

சிறுவன் Rayan சடலமாக மீட்கப்பட்ட நிமிடங்களில் நடந்த சில விடயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மொராக்கோவில் 104 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் கிட்டத்தட்ட 4 நாட்களாக சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழந்த சமபவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட அந்த சில நிமிடங்களில் நடந்த விடங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அசோசியேட் பிரஸ் தகவல்களின்படி, சிறுவன் Rayan மீட்கப்பட்டபோது, தங்க நிற துணியால் போர்த்தப்பட்டு வெளியே கொண்டு வரப்பட்டுள்ளார். … Read more

தரமற்ற உணவு பொருட்களா? உடனே திருப்பி அனுப்ப ரேசன் கடை ஊழியர்களுக்கு உத்தரவு…

சென்னை: ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவு பொருட்கள் தரமற்ற நிலையில், அதை உடனே திருப்பி அனுப்பலாம் என ரேசன் கடை ஊழியர்களுக்கு தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்படும் உணவுபொருட்கள் தரமற்று உள்ளதாக ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே தமிழகஅரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பிலும் தரமற்ற பொருட்கள் இருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ரேஷன் கடைகளுக்கு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து வரும் உணவு பொருட்கள் … Read more

மைதானத்திற்குள் புகை பிடித்த கிரிக்கெட் வீரர் – சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம்

டாக்கா: வங்காளதேசத்தில் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கொமிலா விக்டோரியன்ஸ் மற்றும் மினிஸ்டர் குரூப் டாக்கா இடையேயான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.  அப்போது களத்தில் இருந்த சில வீரர்களில் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முகமது ஷாஜாத் புகை பிடித்துள்ளார். இதைக்கண்ட மூத்த பேட்ஸ்மேன் தமிம் இக்பால் அவரை டிரஸ்ஸிங் அறைக்குள்  செல்லுமாறு கூறியுள்ளார்.  இது குறித்த புகைப்படங்கள் சமூக வளைதங்களில் வைரலாகியது. இதையடுத்து ஷாஜாத்தை பயிற்சியாளர் மிசானூர் ரஹ்மான் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகின. … Read more

பரங்கிப்பேட்டை பேரூராட்சியில் சுயேட்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்த 113 வேட்பு மனுக்களும், ஏற்றுக் கொள்ளப்பட்டது.| Dinamalar

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட, அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்த 113 வேட்பு மனுக்களும், ஏற்றுக் கொள்ளப்பட்டது.பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு வரும் 19ம் தேதி நடக்க உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட, ஆளுங்கட்சியான தி.மு.க., 16 வார்டுகள், அ.தி.மு.க., 17 வார்டுகள், பா.ம.க., 7 வார்டுகள், பா.ஜ., 11 வார்டுகள், எஸ்.டி.பி.ஐ., கட்சி 6 வார்டுகள், அ.ம.மு.க., 3 வார்டுகள், மா.கம்யூ., 2 வார்டுகளிலும், வி.சி., கட்சி … Read more

பிரதமர் மோடியை வரவேற்காமல் புறக்கணிப்பு: தெலங்கானா முதல் மந்திரிக்கு பாஜக கண்டனம்

ஐதராபாத், பிரதமர் மோடி இன்று தெலுங்கானா மாநிலம் வருகை தந்தார். ஐதராபாத் விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை வரவேற்க  தெலங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ்  வரவில்லை.  கவர்னர்  தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலங்கானா அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் உள்ளிட்டோர் பிரதமரை  விமான நிலையத்தில் வரவேற்றனர்.  பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கு சென்று சந்திரசேகர் ராவ் வரவேற்காதது அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.   எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் கடும் … Read more

சிறுவன் Rayan உயிரிழப்பு.., கடும் துயரத்தில் மொராக்கோ..

மொராக்கோவில் கிட்டத்தட்ட 5 நாட்களாக 104 அடியில் ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கியிருந்த ஐந்து வயது சிறுவன் Rayanசடலமாக மட்கப்பட்டதால் நாடே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மொராக்கோவின் Chefchaouen மாநிலத்தில் உள்ள ஹிக்ரான் கிராமத்தை சேர்ந்த Rayan என்ற 5 வயது சிறுவன் கடந்த 1-ஆம் திகதி (செவ்வாய்கிழமை) மாலையில் 100 அடி (32 மீற்றர்) ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். அதனைத் தொடர்ந்து, கடந்த நான்கு நாட்களுக்கும் மேலாக இரவும் பகலும் சிறுவனை மீட்கும்பணி நடந்தது. … Read more

நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் 40 புதிய மருத்துவ கல்லூரிகள்! மத்திய அமைச்சர் தகவல்

டெல்லி: நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் 40 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்  என நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த  மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இன்றைய மக்களை அமர்வின்போது, சுகாதார கட்டமைப்பு மேம்பாடு குறித்து உறுப்பினர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் பதில் அளித்தார். அப்போது, சுகாதார கட்டமைப்பு மேம்பாடு உயர்த்தப்பட்டு வருவதாகவும்,  நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்காக  மருத்துவக்கல்லூரிகள் … Read more

ஜூனியர் உலக கோப்பையை 5வது முறை கைப்பற்றிய இந்திய அணிக்கு ரொக்கப் பரிசு

19 வயதுக்குட்பட்டோருக்கான  உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.   இது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், ரூ.40 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது சிறிய டோக்கன் முறையிலான பாராட்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய ஜூனியன் அணி ஐந்தாவது முறை சாம்பியன் பட்டம் வென்றவுடன் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா, வீரர்கள் மற்றும் துணைப்பணியாளர்களுக்கு ரொக்க வெகுமதிகளை அறிவித்தார்.  இது … Read more

இங்கிலாந்து அணியை வீழ்த்தி 5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி

ஆன்டிகுவா: யு-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில்  வீழ்த்தி இந்திய அணி 5 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

விஸ்வரூபம் எடுக்கும் பர்தா விவகாரம் ; காவி துண்டு அணிந்து வரும் மாணவர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களுரு-கர்நாடக கல்வி மையங்களில் முஸ்லிம் மாணவியர், ‘பர்தா’ அணிந்து செல்ல அனுமதிக்கக் கோரி அம்மாநிலத்தின் பல பகுதிகளில் காங்., போராட்டம் நடத்தியது. இதற்கு பதிலடியாக பல கல்லுாரிகளில் ஹிந்து மாணவ – மாணவியர் கழுத்தில் காவித் துண்டுடன் வகுப்புக்கு வந்ததால் பரபரப்பு நிலவுகிறது. விதிமுறைகர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள உடுப்பி அரசு மகளிர் கல்லுாரியில், கடந்த மாதம் ஆறு முஸ்லிம் மாணவியர் பர்தா … Read more