பிப்ரவரி 14 முதல் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நேரடி விசாரணை
புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மீண்டும் நேரடி விசாரணை தொடங்க உள்ளது. ஓமிக்ரான் மாறுபாடு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை உயரத் தொடங்கிய பின்னர் உச்ச நீதிமன்றம் வழக்குகளை ஆன்லைன் மூலமாகவே விசாரித்து வருகிறது. கொரோனா நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதால், உச்ச நீதிமன்றத்தில் நேரடி விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) கடந்த சனிக்கிழமை இந்தியத் தலைமை நீதிபதி என்வி ரமணாவைக் கேட்டுக் கொண்டது. … Read more