விடைபெற்றார் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்; மும்பையில் அரசு மரியாதையுடன் உடல் தகனம்| Dinamalar

மும்பை, பிப். 7-‘இசைக்குயில், இந்தியாவின் நைட்டிங்கேல்’ என, வர்ணிக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், 92, உடல் நலக்குறைவால் மும்பையில் நேற்று காலமானார். மும்பையில் அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவையொட்டி இரண்டு நாள் துக்கம் அனுஷ்டிக்கவும், நாடு முழுதும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க விடவும் மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. லதா மங்கேஷ்கர் உடலுக்கு, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். ‘இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர் ஹிந்தி, மராத்தி, … Read more

மத்திய அரசு அலுவலகங்களில் 100 சதவிகித பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும்

புதுடெல்லி, கொரோனா 3வது அலை காரணமாக மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவிகிதம் பேர் மட்டும் அலுவலகங்களுக்கு வந்து பணியாற்றினால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போது கொரோனா தொற்று குறைய தொடங்கி உள்ளதால் மீண்டும் அனைத்து பணியாளர்களும் அலுவலகங்களுக்கு வந்து  பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த முறை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த தகவலை மத்திய மந்திரி டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

இதயம் நொறுங்கிவிட்டது.. லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இசைஞானியின் இரங்கல்

இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இசைஞானி இளையராஜா இரங்கல் தெரிவித்தார். ‘பாரத ரத்னா’ லதா மங்கேஸ்கர் சமீபத்தில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கு பிறகு அவர் தொற்றிலிருந்து மீண்டார். ஆனால், அவரது உடலுறுப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தால் மீண்டும் கவலைக்கிடமான நிலையில் சனிக்கிழமையன்று மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு பல்வேறு … Read more

காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி : ராகுல் காந்தி அறிவிப்பு

டில்லி பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி யின் பெயரை அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார். மொத்தம் 177 தொகுதிகளைக்கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு ஒரேகட்டமாக பிப்ரவரி 20-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தேர்தலில் சரண்ஜித் சன்னியை முதல்வர் வேட்பாளராகக்  காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.  இதை அவர் . லூதியானாவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளர் யார் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

சென்னை: தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 வார்டுகளின் கவுன்சிலர் பதவிகளுக்கு, வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.  வெற்றி பெறும் கவுன்சிலர்கள் இணைந்து, மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர்; நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் துணை தலைவர்களை தேர்வு செய்கின்றனர். இத்தேர்தலுக்கான மனுத்தாக்கல் ஜனவரி 28ந்தேதி துவங்கி 4ம் தேதி முடிவடைந்தது. மனுக்களை திரும்ப பெற இன்று மாலை 5:00 மணி வரை … Read more

போலீசாரை கொல்ல நடிகர் திலீப் திட்டம்?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொச்சி-போலீசாரை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கியுள்ள பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு எதிராக, புதிதாக இரண்டு ‘ஆடியோ’க்களை, திரைப்பட இயக்குனர் பாலசந்திரகுமார் வெளியிட்டுள்ளார். பிரபல மலையாள நடிகர் திலீப் மீது, ஏற்கனவே நடிகையை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பான வழக்கு உள்ளது. இந்நிலையில் அந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளை கொல்வதற்கு திட்டமிட்டதாக, திலீப் உள்ளிட்டோர் மீது குற்ற சதி வழக்கும் நிலுவையில் உள்ளது. … Read more

ஆந்திராவில் சாலை விபத்து: கார் மீது லாரி மோதியதில் 8 பேர் பலி

ஐதராபாத், ஆந்திர மாநிலத்தின் அனந்தபுரம் மாவட்டம் உருவகொண்டா அருகே வேகமாக வந்த இன்னோவா கார் மீது லாரி மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அதில் காரில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலுயே உயிரிழந்தனர்.  ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் உருவகொண்டா போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான் என்னடா பாவம் பண்ணேன்! வித்தியாசமான முறையில் ரன் அவுட்டான ரிஷப் பண்ட! சோகமாக வெளியேறிய காட்சி

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட வித்தியாசமான முறையில் அவுட்டானார். இப்படி நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை, குறிப்பாக ரிஷப் பண்டக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால், சோகமடைந்த அவர் முகத்தில் கடுமையான வருத்தத்துடன் மைதானத்தைவிட்டு வெளியேறினார். இவை அனைத்தும் இந்திய இன்னிங்ஸின் 18-வது ஓவரின் மூன்றாவது பந்தில் நடந்தது. கடந்த சில போட்டிகளில் 4-வது இடத்தில் அவர் களமிறங்கினார். சிலர் அந்த இடம் அவருக்கு … Read more

பாடகி லதா மங்கேஷ்கர் மறைவு : நாளை மகாராஷ்டிராவில்  பொது விடுமுறை அறிவிப்பு

மும்பை பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மரணத்தை ஒட்டி நாளை மகாராஷ்டிர மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இன்றும் ரசிக்கும் படியான பல நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள பிரபல பாடிகியான லதா மங்கேஷ்கர் இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்டார். இவர் கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். லதா மங்கேஷ்கரின் உடல்நிலை ஓரளவு தேறிய நிலையில், … Read more

ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதி வேகமாக 5000 ரன்கள் – சாதனை படைத்தார் கோலி

அகமதாபாத்: அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டன் கோலி 4 பந்தில் 8 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதி வேகமாக 5 ஆயிரம் ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை கோலி நேற்று படைத்தார். ஒருநாள் போட்டிகளில் தனது 249வது இன்னிங்ஸை கோலி விளையாடினார். சொந்த மண்ணில் அவருக்கு இது 96வது  இன்னிங்ஸ். இதில் 5000 ரன்களை … Read more