நீட் தேர்வு விவகாரத்தில் தி.மு.க. நாடகம் ஆடுகிறது – அண்ணாமலை கடும் தாக்கு

வடவள்ளி: பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று கோவை மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். கோவை வடவள்ளியை அடுத்த இடையர்பாளையம் பிரிவில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அவர் பேசியதாவது:- தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பா.ஜனதா கட்சிக்கு மிக, மிக முக்கியமானது. ஏனென்றால் நாம் இந்த முறை தனித்து களம் இறங்கியுள்ளோம். இதில் நம்முடைய முழு வலிமையையும் மற்றவர்களுக்கு காட்ட வேண்டும். தனித்து போட்டியிடுவதன் … Read more

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை கண்டித்து பிப்.11-ல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை கண்டித்து பிப்.11-ல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். ராமேஸ்வரம் ரயில் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

லதா மங்கேஷ்கருக்கு இரங்கல்; பார்லி.,யில் மவுன அஞ்சலி| Dinamalar

புதுடில்லி: மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு பார்லியின் இரு அவையிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, எம்.பி.,க்கள் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஒரு மணி நேரத்துக்கு அவை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்தியாவின் இசைக்குயில் என்று போற்றப்பட்ட பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தனது 92வது வயதில் நேற்று (பிப்.,6) காலமானார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில், லதா மங்கேஷ்கர் … Read more

வட்டி விகிதத்தை உயர்த்தும் திட்டத்தில் RBI..!

இந்திய ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தை பாரத ரத்னா விருது பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மகாராஷ்டிராவில் பிப்ரவரி 7ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாணய கொள்கை கூட்டத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் இந்த நாணய கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி தனது பணபுழக்க அளவீட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டு உள்ளது. இதன் வாயிலாக இன்று மும்பை பங்குச்சந்தையும் … Read more

மதுரை: “வாடிப்பட்டி பேரூராட்சி வேட்பாளரை கடத்திட்டாங்க'' – ஆர்.பி.உதயகுமார் தலைமையில் போராட்டம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த 9-வது வார்டு பெண் வேட்பாளரை திமுகவினர் கடத்தி விட்டதாக அ.தி.மு.கவினர் புகார் எழுப்பி போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவினர் போராட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியிலுள்ள 18 வார்டுகளில் தி.மு.க., அ.தி.மு.க போட்டியிடுகின்றன. இதில் 9-வது வார்டில் தி.மு.க சார்பில் போட்டியிடும் முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணியை எதிர்த்து அதிமுக சார்பாக இந்திராணி போட்டியிடுகிறார். இந்த வார்டில் இருவர் மட்டும் வேட்பு … Read more

கொரோனா தொற்று காலத்தில் இப்படி செய்தாரா லதா மங்கேஷ்கர்? வெளியான சுவாரசியமான தகவல்

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் நேற்றைய தினம் தனது 92வது வயதில் காலமானார். இச்செய்தி திரையுலகினரை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.  இந்தியாவின் நைட்டிங்கேல், மெலடி குயின் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் லதா மங்கேஷ்கர். கடந்த 80 ஆண்டுகளாக இந்திய மொழிகளில் இவர் சிறப்பாக பல பாடல்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த சில தினங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த லதா மங்கேஷ்கர் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதையடுத்து சமூகவலைத்தளங்களில் பிரபலங்கள் … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசாரம் விவரம்: இன்று சேலம் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து காணொளி காட்சி பிரசாரம்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். நேற்று கோவை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த நிலையில், இன்று சேலம் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். சேலம் மாவட்டத்தில் உள்ள தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை காணொலி மூலம் பிரசாரம் மேற்கொள்கிறார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சூடுபிடித்துள்ளது. அதிமுக, திமுக, பாஜக, … Read more

கொரோனாவுக்கு இடம் கொடுக்காமல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுங்கள்- மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

சென்னை: கொரோனா 2-வது அலையில் டெல்டா வகை வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதேநேரம் அதன் இன்னொரு வகை உருமாற்றமான ஒமைக்ரான் 3-வது அலையாக பரவிக் கொண்டிருக்கிறது. இதன் பரவுதல் வேகம் அதிகமாக இருந்தாலும் பாதிப்புகள் குறைவு என்பது நிம்மதியான விசயம். இந்த நிலையில் இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரமும் சூடு பிடித்து வருகிறது. வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதற்காக கட்சி தொண்டர்கள் திரண்டு வீதி வீதியாக பிரசாரம் செய்து வருகிறார்கள். கொரோனா கட்டுப்பாடு காரணமாக … Read more

மதுராந்தகம் அருகே சிலாவட்டம் என்ற இடத்தில் 2 வேன்கள் கவிழ்ந்து 25-க்கும் மேற்பட்டோர் காயம்

மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே சிலாவட்டம் என்ற இடத்தில் 2 வேன்கள் கவிழ்ந்து 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சென்னையில் இருந்து திருச்சி சென்றபோது 2 வேன்கள் கவிழ்ந்ததில் 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்னை – திருச்சி காலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் கீழே குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 83,876 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 83,876 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,22,72,014 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 1,99,054 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,06,60,202 ஆனது. தற்போது 11,08,938 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவிட் காரணமாக 895 … Read more