“டி.வி-யை ஆன் செய்தால் ஸ்டாலின் வந்தாரு… போனாரு… ரிப்பீட்டு!'' – ஜெயக்குமார் தாக்கு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அ.தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் குப்பையைத்தான் கொடுத்தனர். தேர்தல் உள்ளாட்சியில் மகளிருக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு திட்டத்தை மோசடி மூலம் தி.மு.க தனது திட்டம் எனக் கூறிவருகிறது. தொலைகாட்சியை ஆன் செய்தாலே ஆணழகன் ஸ்டாலின் … Read more

இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதா என்பதை எப்படி அறிவது? அறிகுறி என்ன?

 உயர் இரத்த சர்க்கரை அல்லது ஹைப்பர் கிளைசீமியா என்பது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவு ஆபத்தான நிலைக்கு அதிகரிக்கும் ஒரு நிலை. இது பொதுவாக உடலில் இன்சுலின் குறைவாக இருக்கும்போது அல்லது உடலால் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாதபோது நிகழ்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு டெசிலிட்டருக்கு 180 முதல் 200 மில்லிகிராம்களுக்கு மேல் செல்கிறது (எம்ஜி/டிஎல்). இப்படி இது அதிகரிக்கும் போது உயிருக்கே உலை வைத்து விடுகின்றது. எனவே இவற்றின் அறிகுறிகள் என்னென்ன என்பதை தெரிந்து … Read more

05/02/2022-7.30 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு..! – முழு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. தினசரி பாதிப்பு 8 ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளத. அதிக பட்சமாக சென்னையில் 1223 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7.30 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழ்நாட்டில் இன்று மட்டும் 1,26,701 மாதிரிகள் பரிசோதனை செய்யபட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 6,24,01,480 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று புதிதாக மேலும்  … Read more

பொருளாதாரத்தில் யோகி ஆதித்யநாத் அரசு உ.பி.யை 2-வது இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது: ராஜ்நாத் கோவிந்த்

உத்தர பிரதேசத்தில் வருகிற 10-ந்தேதி முதல் பல கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. முன்னணி தலைவர்கள் வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். பா.ஜனதா தலைவர்கள் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். இன்று பா.ஜனதா மூத்த தலைவரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, யோகி ஆதித்யநாத் மாநிலத்தின் பொருளாதாரத்தை 31 லட்சம் கோடி ரூபாய்க்கு எடுத்துச் சென்றுள்ளது. இது இந்தியாவின் 2-வது இடமாகும். இதையும் படியுங்கள்… பஞ்சாப் தேர்தல்- … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை தவிர்த்து மீதமுள்ள 20 மாநகராட்சிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

டில்லியில் பள்ளிகள் திறக்க அனுமதி| Dinamalar

புது டில்லி: கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், டில்லியில், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, ஒன்பது முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நாளை மறுநாள் முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், உடற்பயிற்சி கூடங்களை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கார்களில் பயணிப்போர், முக கவசம் அணியத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புது டில்லி: கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், டில்லியில், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. … Read more

இருமடங்கு லாபத்தில் பேங்க் ஆப் பரோடா.. ரூ.2197 கோடி ரூபாய் நிகரலாபம்..!

பேங்க் ஆப் பரோடா இன்று அதன் மூன்றாவது காலாண்டு முடிவினைக் வெளியிட்டுள்ளது. இதன் நிகரலாபம் 107% அதிகரித்து, 2197 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த காலாண்டில் 2088 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கடந்த செப்டம்பர் காலாண்டினை கட்டிலும் 5.2% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வட்டி வருவாய் இந்த வங்கியின் நிகர வட்டி வருவாய் விகிதம் 14.4% அதிகரித்தும், கடந்த காலாண்டினை காட்டிலும் 13% அதிகரித்தும், 8552 கோடி ரூபாயாக உள்ளது. குளோபல் நிகர வட்டி … Read more

ஹிஜாப் சர்ச்சை: `சரஸ்வதி எந்த பேதமும் பார்க்கவில்லை' – ராகுல் காந்தி ட்வீட்!

கடந்த சில வாரங்களாகக் கர்நாடக மாநிலத்தில் புகைந்து கொண்டிருக்கும் ஹிஜாப் விவகாரம், தற்போது இந்தியா முழுவதும் பேசு பொருளாகியிருக்கிறது. உடுப்பி மாவட்டம், குண்டாப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திடீரென ஒரு மாணவ வட்டம் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தினர். அதையடுத்து கல்லூரி நிர்வாகமும் உடனே, “முஸ்லிம் மாணவிகள் கல்லூரி வளாகத்துக்குள் ஹிஜாப் அணிந்துகொண்டு வரக்கூடாது!” என்று உத்தரவு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் ஹிஜாப் அணிந்துகொண்டு கல்லூரிக்கு … Read more

3ம் உலகப்போர் பதற்றம்! அரச குடும்பத்துக்கான ரகசிய பாதுகாப்பு சுரங்கங்கள் தயார் நிலையில்

மூன்றாம் உலக போர் அல்லது ஏதேனும் பயங்கரவாத நிகழ்வுகள் நடந்தால் அவற்றில் இருந்து இங்கிலாந்தின் அரச குடும்பத்தை பாதுகாப்பதற்காக ரகசிய சுரங்க பாதைகளை கொண்ட (panic room) எனப்படும் பாதுகாப்பு அறைகள் தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது. ரஷ்யா உக்ரைன் என இருநாடுகளுக்கு இடையே பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் பதற்றம் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமேயானால் அவற்றில் இருந்து அரச குடும்பத்தை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு அறைகள் (panic room) தயாராக வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளை … Read more

தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் 8ந்ததி கூடுகிறது! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் 8ந்ததி கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அன்றை யதினம் காலை 10 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பிய நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இன்று முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பும் வகையில் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. … Read more