மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீடீர் தீ விபத்து..!

மும்பை, மும்பையின் காஞ்சூர்மார்க்கில் உள்ள என்.ஜி ராயல் பார்க் பகுதியில் 11 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. முன்னதாக 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் இன்று மதியம் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு … Read more

தமிழகத்திற்கு நல்ல சான்ஸ்.. ஹெச்பி-யின் அதிரடி திட்டம்..!

இந்தியாவின் கணினி சந்தையில் முக்கிய இடம் வகிக்கும் அமெரிக்காவினை சேர்ந்த முன்னணி கணினி நிறுவனமான ஹெச்.பி (HP Inc), 2021ம் ஆண்டில் 14.8 மில்லியன் யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மொத்த கணினி சந்தையில் 31.5% பங்கு வகித்துள்ளது. இதற்கிடையில் ஹெச்.பி-யின் ஏற்றுமதியானது முந்தைய ஆண்டினை காட்டிலும் 58.7% அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து வணிக ரீதியாகவும், நுகர்வோர் சம்பந்தப்பட்ட அனைத்து சாதனங்களிலும் நல்ல வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. ஹெச்பி-யின் பெரும்பாலான ஹார்டுவேர் பொருட்கள் … Read more

12 ரஷ்ய ஐ.நா தூதர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றம்!

ஐநாவுக்கான ரஷ்யாவின் தூதரகப் பணியை சேர்ந்த 12 பேர் மார்ச் 7-ஆம் திகதிக்குள் அமெரிக்காவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக உலக அமைப்பிற்கான ரஷ்யாவின் தூதர் தெரிவித்தார். ஐ.நாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒலிவியா டால்டன் கூறுகையில், வெளியேற உத்தரவிடப்பட்டவர்கள் “நமது தேசிய பாதுகாப்பிற்கு பாதகமான உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் மூலம் அமெரிக்காவில் தங்களுடைய சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தனர். நாங்கள் ஐநா தலைமையக ஒப்பந்தத்தின்படி இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறோம். இந்த நடவடிக்கை பல மாதங்களாக வளர்ச்சியில் உள்ளது” … Read more

தனுஷின் ‘மாறன்’ டிரெய்லர் வெளியானது…

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியானது. மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். சத்யஜோதி நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் மார்ச் 11 ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது. தமிழில் தனுஷ் நடிப்பில் இதற்கு முன் வெளியான ஜெகமே தந்திரம் படமும் ஓ.டி.டி.யில் வெளியான நிலையில் இந்த திரைப்படமும் ஓ.டி.டி.யில் வெளியாக இருப்பது தனுஷ் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை தந்துள்ளது. மாறன் … Read more

அப்போது குலக்கல்வி… இப்போது நீட் தேர்வு: சுயசரிதை வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள தன்வரலாற்று நூலான “உங்களில் ஒருவன் பாகம் – 1” நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. நூலை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டார். விழாவின் நிறைவாக முதல்வர் ஸ்டாலின் ஏற்புரையாற்றினார். அவர் பேசியதாவது:- எப்போதும், என்றென்றும், எந்தச் சூழலிலும், எந்தப் பொறுப்பில் இருந்தாலும் – உங்களில் ஒருவன்தான் நான் என்பதை எந்த நாளும் இந்த ஸ்டாலின் மறக்க மாட்டான் என்பதன் அடையாளமாகத்தான் எனது … Read more

தி.மு.க.,வின் கனவு பலிக்காது அ.தி.மு.க., செயலர் ஆவேசம்| Dinamalar

புதுச்சேரி, : தமிழக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்த தி.மு.க., அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து, புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.பழைய பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜெ., பேரவை செயலாளர் பாஸ்கர், இணைச் செயலாளர் அன்பானந்தம் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கி பேசியதாவது:தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தி.மு.க., அறிவித்த வாக்குறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் … Read more

உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் உயர்மட்ட ஆலோசனை

புதுடெல்லி, கடந்த 5 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.  பதிலுக்கு உக்ரைன் வீரர்களும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  இதற்காக ஆபரஷேன் கங்கா என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மத்திய அரசு கடந்த சனிக்கிழமை முதல் சிறப்பு விமானங்களை இயக்கி இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.    மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பதற்காக மத்திய அரசு 4 மந்திரிகளை உக்ரைனின் … Read more

பல்டி அடித்த சீன நிறுவனம்.. ரஷ்யாவுக்கு வெளிப்படையாக ஆதரவு..?!

ரஷ்யா படைகள் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்துள்ள காரணத்தால், உக்ரைன் ஆதரவு நாடுகள் ரஷ்யா மீது தடை விதித்து வருவது மட்டும் அல்லாமல், ரஷ்யாவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களும் வெளியேறி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ரஷ்யா மீது தடை விதிக்காத முக்கிய நாடுகளில் சீனாவும் ஒன்றாக உள்ளது. ரஷ்யாவில் இருந்து பல வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறி வரும் நிலையில் சீன நிறுவனங்கள் இதைப் புதிய வர்த்தக வாய்ப்பாகப் பார்க்கிறது. மார்ச் மாதத்தில் 13 நாட்கள் விடுமுறையா? … Read more

ரஷ்யா, உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை முடிவு., 2-ஆம் சுற்று திட்டம்: வெளியான சமீபத்திய தகவல்கள்

திங்கட்கிழமை மாலை பெலாரஷ்ய எல்லையில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தையின் போது உக்ரைன் அனைத்து ரஷ்ய படைகளையும் தனது எல்லையில் இருந்து பின்வாங்குமாறு கோரியுள்ளது. தற்போது இரு நாடுகளும் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளன. 1, “சுமார் ஐந்து மணிநேரம் நீடித்த உக்ரைன் தரப்புடனான பேச்சு வார்த்தைகள் முடிவடைந்துள்ளன. நிகழ்ச்சி நிரலில் உள்ள அனைத்து விடயங்களையும் நாங்கள் விரிவாக விவாதித்தோம், மேலும் பொதுவான நிலைகளை நாங்கள் கணிக்கக்கூடிய சில பொதுவான புள்ளிகளைக் கண்டறிந்தோம்” என்று … Read more

ஐரோப்பிய யூனியனில் இணையும் உக்ரைன்

உக்ரைன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைத்துக் கொள்ள கோரிய விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 5 நாட்களாக நீடித்து வருகிறது. மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளையும் பொருட்டபடுத்தாமல், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. இதனிடையே, இந்தப் போரை நிறுத்துவது தொடர்பாக பெலாரஸில் இரு நாட்டு பிரதிநிதிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, ரஷ்ய படைகள் உடனடியாக … Read more