உக்ரைனில் தவிக்கும் 1,200 மகாராஷ்டிரா மாணவர்கள்; 300 பேர் மட்டுமே தொடர்பில் இருப்பதாக அரசு தகவல்!
ரஷ்யா போர் தொடுத்துள்ள உக்ரைன் நாட்டில் இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். மகாராஷ்டிராவிலிருந்து மட்டும் 1,200 மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். அவர்களில் 300 மாணவர்களுடன் மட்டும் தொடர்பை ஏற்படுத்த முடிந்ததாக மகாராஷ்டிரா அமைச்சர் விஜய் வடேதிவார் தெரிவித்துள்ளார். எஞ்சிய மாணவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் சிக்கியிருக்கும் மாணவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். உக்ரைனில் மருத்துவம் படிக்கச் செலவு குறைவு என்பதால் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் … Read more