‘டிங் டாங்’ : டைட்டில், பர்ஸ்ட் லுக் பிரபுதேவா வெளியிட்டார்!

பல்வேறு படங்களில் நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர் ராபர்ட். அவர் ஒரு நடிகராகச் சில படங்களில் நடித்துள்ளார் இப்போது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.அவர் முற்றிலும் வித்தியாசமான நகைச்சுவை வேடத்தில் நடிக்கும் படம் ‘டிங் டாங்’. இப்படத்தை நடன இயக்குநரும் அவரது சகோதரருமான ஜே.எம். இயக்குகிறார். வி ஆல் புரடக்சன், ஆர்.ஆர்.பி. நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். விஜய் வல்சன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை ராம்நாத் கவனிக்கிறார். நடனம்- வினோத் ,சண்டைக் காட்சிகள் வீரா, தயாரிப்பு ராபர்ட் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – இன்று வாக்கு எண்ணிக்கை

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 15,158 வாக்குச்சாவடிகளும், நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 31,150 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டன. இந்தத் தேர்தலுக்காக 1 லட்சத்து 60 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 5,908,810 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.08 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,908,810 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 426,223,542 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 353,001,410 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 81,663 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடற்படை அணிவகுப்பை பார்வையிட்டார் ஜனாதிபதி| Dinamalar

விசாகப்பட்டினம் : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், விசாகப்பட்டினம் அருகே வங்காள விரிகுடாவில் நடந்த கடற்படை அணிவகுப்பை பார்வையிட்டார். நாட்டின், 75வது சுதந்திர தின ஆண்டு விழாவை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கடற்படையின் 75 ஆண்டு சேவையை குறிக்கும் வகையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே வங்காள விரிகுடா கடற்பகுதியில், கடற்படை அணிவகுப்பு நடந்தது.இதை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘ஐ.என்.எஸ்., சுமித்ரா’ போர் கப்பலில் சென்று பார்வையிட்டார். 50 போர் விமானங்கள்நான்கு வரிசைகளில் வந்த, 44 போர் கப்பல்களின் … Read more

அதிகரிக்கும் பதற்றம்… ரஷ்யா மீது பாயும் நடவடிக்கை! ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 கிழக்கு உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு பகுதிகளை சுதந்திர நாடாக அங்கீகரித்த பின்னர், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது. கிழக்கு உக்ரைனில் இருந்து பிரிந்து சென்ற இரண்டு பகுதிகளை சுதந்திர நாடாக அங்கீகரிக்கும் புடினின் முடிவை, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen மற்றும் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் Charles Michel கடுமையான வார்த்தைகளில் கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உக்ரைனின் Donetsk மற்றும் … Read more

செல்போன் மூலம் தாம் வாக்களிப்பதைப் படம் பிடித்த  பாஜக மேயர் மீது  வழக்கு

கான்பூர் தாம் வாக்களிக்கும் போது செல்ஃபி எடுத்த கான்பூர் பாஜக மேயர் பிரமீளா பாண்டே மீது வழக்கு பதியப்பட்டுள்ளது கான்பூர் நகர மேயர் பிரமீளா பாண்டே அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகும், இவரை மக்கள் ‘ரிவால்வர் தீதி (அக்கா)’ என்று அழைத்து வருகின்றனர். இதற்கு காரணம், இவர் மேயர் ஆவதற்கு முன்பு உறுப்பினராக இருந்த நேரத்தில், அவர் தனது உரிமம் பெற்ற ரிவால்வருடன் ஜீப்பில் வலம் வருவார். ஆகவே அவரை  ‘ரிவால்வர் தீதி’ என்று அழைப்பார்கள். இவர், … Read more

உலக சாம்பியனை தோற்கடித்த இளம் கிராண்ட் மாஸ்டர் – பிரக்ஞானந்தாவுக்கு சச்சின் பாராட்டு

புதுடெல்லி: ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றனர். எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின்போது வெற்றியை வசமாக்கினார். தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த பிரக்ஞானந்தா, மொத்தம் 8 புள்ளிகளுடன் 12ஆவது இடத்தில் உள்ளார். இந்நிலையில், உலக … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திமுக பிரமுகரை அரைநிர்வாணமாக்கி இழுத்துச் சென்று தாக்கிய வழக்கில் ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் மார்ச் 7 வரை சிறையில் அடைக்க நீதிபதி முரளிகிருஷ்ணனா உத்தரவிட்டுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடைபெறும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயக்குமாரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என அவர் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். … Read more

152 லஞ்ச அதிகாரிகளுக்கு ஒடிசாவில் கட்டாய ஓய்வு| Dinamalar

புவனேஸ்வர் : ஒடிசாவில் ஊழல் செய்த 152 அரசு அதிகாரி களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இங்கு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளராக இருந்தவர் திரிநாத் மிஸ்ரா.வருமானத்திற்கு அதிகமாக 9 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கட்டாக் குர்தா ஜாஜ்பூர் நபரங்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திரிநாத் மிஸ்ராவுக்கு சொந்தமான சொத்துக்களை லஞ்ச ஒழிப்புத் துறை அடையாளம் கண்டுள்ளது.இதையடுத்து திரிநாத் மிஸ்ராவுக்கு கட்டாய ஓய்வு அளித்து ஒடிசா அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதே போல … Read more

அனில் அம்பானி-யின் மூத்த மருமகள்.. யார் இந்த கிரிஷா ஷா..!

இந்தியாவின் பிரபலமான தொழிலதிபராக விளங்கும் அனில் அம்பானியின் பல தோல்விகள் மற்றும் சோகத்திற்கும் மத்தியில், அவருடைய மூத்த மகனான அன்மோல் அம்பானி-க்குத் திருமணம் நடக்க உள்ளது. பணக்கார வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் அன்மோல் அம்பானி தற்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் கிரிஷா ஷாவு உடனான திருமணம் அன்மோல் அம்பானி வாழ்க்கையில் முக்கிய நிகழ்வாக இருக்கிறது. இமயமலை சாமியார் ஒரு முன்னாள் நிதியமைச்சக அதிகாரி.. என்எஸ்ஈ சித்ரா வழக்கில் புதிய திருப்பம்..! அன்மோல் அம்பானி திருமணம் … Read more