பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 63.44% வாக்குகள் பதிவு

ஒரே கட்டமாக நடைபெறும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 63.44% வாக்குகள் பதிவாகியுள்ளன. மூன்றாம் கட்டமாக நடைபெறும் உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 57.44% வாக்குகள் பதிவாகியுள்ளது.

அஞ்சலக திட்டங்களை SBI-ன் ஆன்லைனில் எப்படி தொடங்கிக் கொள்வது.. என்னென்ன தேவை..!

அஞ்சலக திட்டங்கள் என்றாலே அதில் வருமானம் ஓரளவுக்கு கிடைத்தாலும், முதலீட்டுக்கு பங்கமில்லை. சந்தை அபாயமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக நிரந்த வருமானம் கொடுக்கும் திட்டங்களாக பார்க்கப்படுகின்றன. அஞ்சலக திட்டங்களிலும் சிறந்த திட்டமாக பொது வருங்கால வைப்பு திட்டமும், பெண் குழந்தைகளுக்காக சுகன்யா சம்ரிதி திட்டமும் பார்க்கப்படுகிறது. இதில் பொது வருங்கால வைப்பு திட்டத்திற்கு வட்டி விகிதமாக 7.1%மும், சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு 7.63%மும் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ரொம்ப ஈஸி இந்த திட்டங்களை முன்னதாக அஞ்சலகங்களில் மட்டுமே தொடங்கிக் … Read more

தேர்தல்: ஆம்புலன்ஸில் அழைத்துவரப்பட்டு வாக்களித்த மூதாட்டி இன்று மரணம்! – நாமக்கல்லில் சோகம்

உடம்பு முடியாமல் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்த மூதாட்டி ஒருவரை, அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸில் அழைத்து வந்து, நேற்று வாக்களிக்க வைத்தனர். இந்த நிலையில், அந்த மூதாட்டி இன்று இயற்கை எய்தியிருப்பது, அவரது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நாமக்கல் நகராட்சில் உள்ள 18-வது வார்டுக்கு உட்பட்ட குழந்தான் தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் மனைவி, லட்சுமி. 75 வயதான அந்த மூதாட்டிக்கு, உடல்நலம் பாதிக்கப்பட, வீட்டிலேயே படுத்த படுக்கையாக இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், நேற்று … Read more

கொரோனாவுக்கு இலக்கான பிரித்தானியா மகாராணிக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் வாழ்த்து!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானியா மகாராணிக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது வாழ்த்து செய்தியை அனுப்பியுள்ளார். 95 வயதான பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இன்று கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. லேசான சளி அறிகுறிகளுடன் தொற்று உறுதியாகியிருப்பதாகவும், மிக அவரசமான பணிகளில் மட்டும் மகாராணி கவனம் செலுத்துவார் என அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொற்றால் பாதிக்கப்பட்டள்ள மகாராணி விரைவில் குணமடைய வேண்டும் என அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பல வாழ்த்தி வருகின்றனர். … Read more

‘வலிமை’ ஆல் ஷோ ஹவுஸ் புல்…. முன்பதிவு துவங்கிய இடமெல்லாம் தெறிக்க விட்ட அஜித் ரசிகர்கள்

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை திரைப்படம் வரும் 24 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் சிறப்புக் காட்சிகள் ஒரு நாள் முன்னாதாக பிப். 23 அன்று வெளியாக இருக்கிறது. சென்னையில் பிப். 23 முதல் மார்ச் 3 வரையில் வலிமை படத்தின் முன்பதிவு துவங்கியுள்ளது. இரண்டரை ஆண்டுகள் கழித்து அஜித் திரைப்படம் திரைக்கு வருவதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 700 திரையரங்குகளில் வெளியாகும் என்று … Read more

ருத்ரதாண்டவம் ஆடிய சூர்யகுமார் யாதவ்- வெஸ்ட் இண்டீசுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

கொல்கத்தா: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றிய இந்திய வீரர்கள் அதே உற்சாகத்துடன் ஆடினர். துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் களமிறங்கினர். ருதுராஜ் 4 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் … Read more

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 185 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

கொல்கத்தா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 185 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா. கொல்கத்தாவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்க உள்ளது.

தேர்தலில் பாஜக பெரும் தோல்வி அடையும் – வாக்களித்த பின் அகிலேஷ் யாதவ் பேட்டி

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் இரண்டு கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன. இன்று 3-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் தேர்தலில் பாஜக பெரும் தோல்வி அடையும் என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். ஜஸ்வந்த் நகரில் உள்ள வாக்குப் பதிவு மையத்தில் வாக்களித்த பின்னர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,  உத்தரப்பிரதேசத்தில் … Read more

டோஜ்காயினை பேமெண்டாக ஏற்றுக் கொண்ட டெஸ்லா.. குஷியில் கிரிப்டோ முதலீட்டாளர்கள்..!

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க், அதன் சூப்பர் சார்ஜிங் ஸ்டேஷனில் கட்டணமாக விரைவில் ஏற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இது குறித்து டெஸ்லா அதன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அறிவித்துள்ளது. டெஸ்லாவின் சாண்டா மோனிகாவில் உள்ள சூப்பர் சார்ஜிங் நிலையத்தில் விரைவில், டோஜ்காயின் முலம் கட்டணம் செலுத்தலாம். 10 நிமிடங்களில் ஃபுல் இந்த சூப்பர் சார்ஜிங் நிலையத்தில் விரைவில் டிரைவ் இன் தியேட்டர்கள், உணவகம் கொண்டு வர உள்ளதாகவும் டெஸ்லாவின் சிஇஒ … Read more