ரூ.6 லட்சம், ஆடம்பர ஐபோன்; 500 கி.மீ பயணம்; வீட்டைவிட்டு சென்ற 15 வயது சிறுவன் மீட்கப்பட்டது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம் நாண்டெட் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவனும், அதே கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனும் திடீரென காணாமல் போயிருக்கின்றனர். இது தொடர்பாக 15 வயது சிறுவனின் தந்தை தன் மகன் கடத்தப்பட்டு விட்டதாக போலீஸில் புகார் செய்திருந்தார். போலீஸார் வழக்கு பதிந்து இரண்டு பேரையும் தேடிவந்தனர். இரண்டு பேரில் 17 வயது சிறுவனிடம் மொபைல் போன் இருந்தது. அதோடு 15 வயது சிறுவன் காணாமல் … Read more

மணமகன் உட்பட 9 பேர் பலியான விபத்து! முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் ராஜஸ்தானில் மணமகன் உட்பட 9 பேர் பலியான விபத்துக்கு ஓட்டுநர் தூங்கியதே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ராஜஸ்தானின் பர்வாடாவில் இருந்து உஜ்ஜயினிக்கு மணப்பெண்ணை அழைத்துவர மணமகன் உள்பட 9 பேர் நேற்று இரவு காரில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, கோட்டா நயபுரா தானா பகுதி வழியாக கார் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சம்பல் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் நீரில் மூழ்கி 9 பேரும் பலியாகியுள்ளனர், இதில் மணமகன் … Read more

ஹிஜாப் விவகாரம் : பாலிவுட் நடிகை சைரா வாசிம் கண்டனம்

மும்பை: கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கப்பட்டதற்கு, பிரபல இந்தி நடிகையும், தங்கல் படத்தில் நடித்தவருமான சைரா வாசிம் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடார்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது கடமை என்று கூறி உள்ளார். தாங்கள் நேசிக்கும் கடவுளுக்காக பணிவுடன் ஹிஜாப் அணிவதாக குறிப்பிட்டுள்ள சைரா, குறிப்பிட்ட கொள்கையைப் பரப்புவதாக, பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில் ஹிஜாப் அணிய அனுமதி மறுப்பது மோசமான நிகழ்வு என கூறியுள்ளார்.

பள்ளியை இடித்து தரைமட்டமாக்கிய மர்ம நபர்கள்

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே உள்ள மெய்யூரில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி கட்டிடத்தை மர்ம நபர்கள் சிலர் இரவோடு இரவாக இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். கட்டிடத்தில் இருந்த இரும்பு உள்ளிட்ட பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

நகர்ப்புற தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானது: கமல்ஹாசன்

சென்னை: தேர்தல் அத்துமீறல்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மாற்றுக்கட்சி வேட்பாளர்களை வாக்காளர்கள் என நினைத்து பணம் கொடுக்க முயன்றது அவல நகைச்சுவை என அவர் தெரிவித்துள்ளார். நகர்ப்புற தேர்தலை ரத்து செய்து மறுவாக்குப்பதிவு நடத்துவதே நியாயமானதாக இருக்க முடியும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

பழைய வாகனங்களுக்கு பதில் மின்சார வாகனங்கள்: டில்லி அரசு முடிவு| Dinamalar

புதுடில்லி: கடுமையான காற்று மாசுபாட்டை எதிர்த்து போராடும் வகையில், தலைநகர் டில்லியில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் பழைய வாகனங்களுக்கு பதில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை வாங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டில்லி அரசின் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பயணம் செய்வதற்காக 12 மின்சார வாகனங்களை மாநில பொதுநிர்வாகத்துறை வாங்கி உள்ளது. இது தொடர்பாக அந்த துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், தங்களது ஆயுட்காலத்தை முடிந்த வாகனங்களை கண்டறிந்து, பயன்பாட்டில் இருந்து நீக்குவதற்கான … Read more

பழைய வாகனங்களை எலெக்ட்ரிக் வாகனங்களாக மாற்ற டெல்லி அரசு முடிவு

புதுடெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) உத்தரவின்படி, டெல்லியில் 10 ஆண்டுகள் மற்றும் 15 ஆண்டுகள் பழமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காற்று மாசுபாட்டிற்கு எதிராக போராடும் வகையில்  டெல்லி அரசு,  அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் உள்ள  பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை ரத்து செய்துவிட்டு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கத் தொடங்கியுள்ளது. டெல்லி அரசின் மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக 12 எலெக்ட்ரிக் … Read more

டிசிஎஸ், ரிலையன்ஸ் கொடுத்த மெகா வாய்ப்பு.. ஒரே வாரத்தில் ரூ.85,000 கோடிக்கு மேல் லாபம்..!

கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது சற்று ஏற்றத்தினைக் கண்ட நிலையில் 10ல் 5 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பானது,85,712.56 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதில் டிசிஎஸ் டாப் கெயினராகவும், வழக்கம்போல சந்தை மதிப்பில் முதலிடத்தில் எப்போதும் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இரண்டாவது கெயினராகவும் உள்ளது. வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..! இதற்கிடையில் பிஎஸ்இ சென்செக்ஸ் 491.90 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது. அரசியல் பதற்றம், அன்னிய முதலீடுகள், சர்வதேச அளவிலான … Read more

பீர் பார் லைசென்ஸ் ரத்து… துறை மாற்ற நடவடிக்கை; ஆர்யனைக் கைதுசெய்த அதிகாரி சமீருக்கு சிக்கல்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக் கான் மகன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கப்பலில் கைது செய்யப்பட்டார். ஒரு மாத சிறைக்கு பிறகு ஆர்யன் கான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஆர்யன் கான் கைது விவகாரத்தில் முன்னின்று செயல்பட்டவர் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே. ஆர்யன் கான் கைது சம்பவத்திற்கு பிறகு சமீர் வான்கடேசுக்கு தொடர்ச்சியாக பல்வேறு சிக்கல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் … Read more

சுற்றுலாப் பயணிகளின் தலை மேல் விழுந்த ஹெலிகாப்டர்: வெளியான திகில் வீடியோ காட்சிகள்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி கடற்கரையில் பொதுமக்கள் சூழ்ந்திருந்த பகுதிக்குள் திடீரென ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சனிக்கிழமை மதியம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மியாமி கடற்கரையில் கூடி பொழுதை கழித்துக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது வானில் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குளித்து கொண்டிருந்த பகுதிக்குள் திடீரென விழுந்து விபத்துக்குள்ளாக்கியது. Near-miss helicopter crash on Miami beach https://t.co/r2vAQAfw1J pic.twitter.com/0iOlxuWpeQ — … Read more