பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 34.10% வாக்குகள் பதிவு

ஒரே கட்டமாக நடைபெறும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 34.10% வாக்குகள் பதிவாகியுள்ளன. மூன்றாம் கட்டமாக நடைபெறும் உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மதியம்1 மணி நிலவரப்படி 35.88% வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஆற்றில் கார் கவிழ்ந்து கோர விபத்து.. மணமகன் உட்பட 9 பேர் பலியான சோகம்!

கோட்டா, ராஜஸ்தானின் கோட்டா பகுதியில் உள்ள சாம்பல் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம் சௌத் கா பர்வாடாவிலிருந்து  காரில் உஜ்ஜயினியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மணமகன் உட்பட திருமண கோஷ்டியினர் சென்று கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் நயாபுரா கல்வெட்டில் இருந்து  கீழே கவிழ்ந்தது. இந்த விபத்தில் மணமகன் உட்பட காரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டா நகர … Read more

சில்லறை முதலீட்டாளர்களுக்கு செம சான்ஸ்.. எல்ஐசி ஐபிஓ-வில் அதிரடி திட்டம்..!

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நாட்டில் மிகபெரிய பொது பங்கு வெளியீடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தைக்கு வரும் முன்பே இதன் மூலம் சிறு முதலீட்டாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. குறிப்பாக பொதுப் பங்கு வெளியீடு என்றாலே சிறு முதலீட்டாளர்களுக்கு மிக வாய்ப்பு என்பார்கள். கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. வரும் வாரத்தில் எப்படியிருக்கும்.. என்ன செய்யலாம்..! எல்ஐசி ஐபிஓ இந்த நிலையில் எல்ஐசி இன்னும் … Read more

மும்பையை டிக் அடித்த சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டி; டார்கெட் 2036, இந்திய ஒலிம்பிக்ஸ் கனவின் முதல்படி!

2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் 140 வது அமர்வை நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டின் மே – ஜூன் மாதங்களில் மும்பையில் இந்த அமர்வு நடைபெறும் என்றும் சர்வதேச ஒலிம்பிக்ஸ் கமிட்டியின் உறுப்பினர்கள் அத்தனை பேரும் இதில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய விளையாட்டு வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளுள் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. ஒலிம்பிக்ஸை நடத்த வேண்டும் என்கிற இந்திய தேசத்தின் கனவை நிறைவேற்றுவதற்கான தொடக்கப்புள்ளியாக இது இருக்கும் கூறப்படுகிறது. சர்வதேச … Read more

உலக முக்கிய பணக்காரர்களின் ஒரு நிமிட வருமானம் எவ்வளவு தெரியுமா? எலன் மஸ்க் முதல் அம்பானி வரை

உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும், உலக பணக்காரர்களின் ஆண்டு வருமானம் பற்றியும் அல்லது ஒருநாள் வருமானம் பற்றியும் அறிந்து கொள்ள எப்போவுமே ஆர்வம் உண்டு. இந்த பணக்கார நிறுவனங்கள் பலகோடி மனிதர்களுக்கு உலக அளவில் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத நிலையில், அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு கூட தங்கள் நிறுவனங்களின் ஆண்டு வருவாய் எவ்வளவு, அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் ஆண்டு வருமானம் எவ்வளவு என்று தெரிவது இல்லை என்பது நிதர்ச்சனமான உண்மை. அந்த வகையில் இந்த … Read more

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகம், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீர்காழி: தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து சிதறியதில் வெளிமாநில வாலிபர்கள் 2 பேர் பலி

குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கிராமத்தில் அலிஉசேன் என்பவருக்கு சொந்தமான பிஸ்மி பிஷ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் மீனிலிருந்து எண்ணெய் மற்றும் பவுடர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் வெளிமாநிலத்தவர் உள்பட அப்பகுதியை சேர்ந்தவர்களும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் பணியாளர்கள் வந்ததால் எண்ணெய் மற்றும் பவுடர் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது. மதியம் … Read more

தமிழகத்திலேயே குறைவாக சென்னை மாநகராட்சியில் வாக்குகள் பதிவான நிலையில் வார்டுவாரியான நிலவரம் வெளியீடு

சென்னை: தமிழகத்திலேயே குறைவாக சென்னை மாநகராட்சியில் வாக்குகள் பதிவான நிலையில் வார்டுவாரியான நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் 43.65% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மேலும் 19 ஆயிரம் பேருக்கு கோவிட்| Dinamalar

புதுடில்லி: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 19, 968 பேருக்கு கோவிட் உறுதியாகி உள்ளது. 48,867 பேர் குணமடைந்துள்ளனர். 673 பேர் உயிரிழந்தனர். இதுவரை கோவிட்டில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,20,86,383 ஆகவும், இறந்தவர்களின் எண்ணிக்கை 5,11,903 ஆகவும் அதிகரித்துள்ளது. தற்போது, 2,24,187 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது தினமும் கோவிட் உறுதியாகும் விகிதம் 1.68 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் இதுவரை 175 கோடியே ,37, … Read more

பஞ்சாப் தேர்தல் ருசிகரம், உடல் ஒன்று ஓட்டு இரண்டு!

சண்டிகர், காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிற பஞ்சாப் மாநிலத்தில் 117 இடங்களைக் கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அகாலிதளமும், பகுஜன் சமாஜ் கட்சியுடன் கரம் கோர்த்து களத்தில் உள்ளன. 93 பெண்கள், 2 திருநங்கைகள் உள்பட 1,304 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2.14 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்காக 24 … Read more