`500 புத்தகங்கள் வாங்கணும்' – இயக்குநர் வசந்தபாலன் #ChennaiBookFair
“ஒரு 500 புக் இருக்கு… 5 மட்டும் எப்படி சொல்ல முடியும்” என ஆரம்பிக்கும் போதே உற்சாகமாக ஆரம்பிக்கிறார் இயக்குநர் வசந்தபாலன். வெயில், அங்காடித் தெரு, காவியத்தலைவன், ஜெயில் உள்ளிட்ட படங்களின் இயக்குநர். “அரிதான புத்தகங்கள் தான் என்னுடைய முதல் சாய்ஸ் ஆக இருக்கும். வழக்கமா புத்தகக் கடைகளில் கிடைக்காத புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரும். அப்படியான அரிதான புத்தகங்களைத் தேடி தேடி வாங்குவேன். காயிதே மில்லத் கல்லூரியில் நடக்கும் ஆரம்பக்கால புத்தக கண்காட்சிகளில் இருந்தே … Read more