உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பேரழிவை ஏற்படுத்தும்: ஐ.நா. எச்சரிக்கை

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் Antonio Guterres எச்சரித்துள்ளார். ஜேர்மனியின் முனிச்சில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டில் உலகத் தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். இந்த மாநாட்டில் ரஷ்யா-உக்ரைன் பிரச்னை விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாக இருக்கிறது. இந்நிலையில், உக்ரைன்-ரஷ்யா இடையேயான பிரச்னை போராக மாறினால், அது பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் Antonio Guterres எச்சரித்துள்ளார். உக்ரைனைச் சுற்றி ரஷ்ய படைகள் குவிந்துள்ளதால், அதிகரித்த பதட்டங்கள் மற்றும் ஐரோப்பாவில் … Read more

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது T20 போட்டியில் இந்திய அணி வெற்றி

கொல்கத்தா: மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகித்த நிலையில், 2வது டி20 போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு … Read more

2வது போட்டியில் திரில் வெற்றி… வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

கொல்கத்தா: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி, ரிஷப் பண்ட் இருவரும் தலா 52 ரன்கள் சேர்த்தனர். ரோகித் சர்மா 19 ரன்கள், வெங்கடேஷ் அய்யர் 33 ரன்கள் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் … Read more

நாகையில் இருந்து விசைப்படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகை: நாகையில் இருந்து விசைப்படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சாவை கடத்த முயன்ற நாகையை சேர்ந்த 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

7 நிமிடம் மட்டும் உலக பணக்காரன் ஆனது எப்படி.. யூடியூபரின் குசும்புத்தனத்தை பாருங்க.. !

யூடியூப் (youtube)தளத்தில் பணம் சம்பாதிப்பது மிக எளிதான விஷயமா? என்றால் நிச்சயம் இல்லை. எனினும் அதற்கு யூடியூபர்கள் கையாளும் விதம் தான் முக்கியமான ஒன்றாக இருந்து வருகின்றது. ஆக யூடிபில் பணம் சம்பாதிப்பது கஷ்டமான விஷயம் அல்ல, ஆனால் எளிதான விஷயமும் இல்லை என்கிறார் பிரபல யூடியூபர் ஒருவர். உங்கள் யூடியூப் மூலம் வருமானம் கிடைக்க வேண்டுமெனில் அதற்கென சில விதிமுறைகள் உண்டு. ஒருசிலர் என்னதான் தரமான வீடியோக்களை பதிவிட்டாலும் மிக குறைவான பார்வையாளர்களை மட்டுமே கவர்கின்றது. … Read more

கூடங்குளம் அணுக்கழிவு சேமிப்பு விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

கூடங்குளத்தில் அணுக்கழிவுகளைச் சேமிக்கும் திட்டத்தைக் கைவிடவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “2 அணுமின் உலைகள் இயங்கிக்கொண்டும், 2 உலைகள் கட்டுமானத்திலும், 2 உலைகள் கட்டுவதற்கான திட்டத்திலும் இருக்கின்றன. இந்த நிலையில், மாநில அரசோடு ஆலோசிக்காமல் அணுமின் நிலைய வளாகத்துக்குள்ளேயே அணுக்கழிவுகளை நிரந்தரமாகச் சேகரிக்கும் திட்டம் கொண்டுவருவதாக இந்திய அணுமின் கழகம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் மக்களிடையே பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் அணுக்கழிவுகளை சேமித்துவைப்பதால் … Read more

பைக் வாங்க சில்லறையுடன் சென்ற இளைஞரால் பரபரப்பு: வியப்பில் ஷோரூம் நிர்வாகிகள்!

அசாம் மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் ஒருவர் தான் 7,8 மாதங்களாக சேர்த்த நாணயங்களை கொண்டு தான் விரும்பிய ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். அசாம் மாநிலத்தின் பர்பட்டா மாவட்டத்தில் ஹவுலி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு நீண்ட நாளாக ஸ்கூட்டர் ஒன்றை வாங்கவேண்டும் என்ற ஆசையில் சுமார் 7,8 மாதங்களாக தனக்கு வரும் வருமானத்தில் ஒரு சிறிய தொகையை சில்லறையாக சேமித்துள்ளார். ஸ்கூட்டர் வாங்குவதற்கான போதிய பணம் சேர்ந்ததும் அவர் … Read more

தமிழகத்தில் இன்று 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 17/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,42,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 81,145 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,37,28,093 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 1,146 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,42,929 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,970 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 4,229 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 33,84,278 பேர் குணம் அடைந்து வீடு … Read more

கோலி, ரிஷப் பண்ட் அசத்தல்: வெஸ்ட் இண்டீசுக்கு 187 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

கொல்கத்தா: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 19 ரன்களிலும், இஷான் கிஷன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மூன்றாவது வீரராக களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். பார்மை இழந்திருப்பதாக எழுந்த விமர்சனங்களுக்கு பேட் மூலம் பதிலளித்தார் … Read more

2-வது டி20 போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 187 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

கொல்கத்தா: 2-வது டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 187 ரன்களை வெற்றி இலக்காக  இந்திய அணி நிர்ணயித்தது. கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகப்பட்சமாக விராட் கோலி 52 ரன்களும், ரிஷப் பந்த் 52 ரன்களும், வெட்கடேஷ் 33 ரன்களையும் குவித்தனர்.