‘ஹிஜாப்’ முஸ்லிம் பெண்களை பின்னோக்கி இழுக்கிறது! கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்

திருவனந்தபுரம்: கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையாகி உள்ள நிலையில், ஹிஜாப் குறித்து குரானில் ஏதும் சொல்லப்படவில்லை, ஒரு பிரிவினரின் பிற்போக்கானமனநிலையின் விளைவு, முஸ்லிம் பெண்களை பின்னோக்கி இழுக்கிறது என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் விமர்சித்துள்ளார். பள்ளிகளில் அனைவரும் சமம் என்பதை உணர்த்திடவே சீருடைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை சரியாக கடைபிடிக்காத காரணத்தால், தற்போது மத ரீதியிலான பிரச்சினைகள் எழுந்துள்ளன.  கர்நாடக மாநிலத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் ஹிஜாப், … Read more

என்னை கொல்ல தி.மு.க.வினர் சதி- சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

திண்டிவனம்: திண்டிவனம் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காந்தி சிலை அருகே இன்று நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- கடந்த 2006-ம் ஆண்டு என் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈடுபட்டதாக கூறப்படுபவர், தான் இருந்த கட்சியில் இருந்து மாறி தற்போது தி.மு.க.வில் இணைந்து தனது மனைவிக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றுள்ளார். எனக்கு தரப்பட்ட போலீஸ் … Read more

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சி திமுக வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சி 9 வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அனுசுயா பரப்புரையின் போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். மேலும் இன்று காலை ஈரோடு அம்மாபேட்டை திமுக வேட்பாளர் சித்தி ரெட்டி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மேலும் 67 ஆயிரம் பேர் கோவிட்டிலிருந்து குணம்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 67 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,757 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,27,54,315 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 67,538 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,19,10,984 ஆனது. தற்போது 3,32,918 பேர் சிகிச்சையில் … Read more

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் இன்று பொங்கல் வழிபாடு…!

திருவனந்தபுரம், திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பொங்கல் விழாவில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு ஒரே இடத்தில் பொங்கல் வழிபாடு நடத்துவார்கள். இது சர்வதேச அளவில் புகழ் பெற்றதுடன் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. அதன்படி ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலின் வருடாந்திர பொங்கல் விழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் … Read more

சும்மா கிடக்கும் ரூ.21500 கோடி பணம்.. எல்ஐசி-க்கு இது ஜாக்பாட் தானா..?

எல்ஐசி (LIC) நிருவனத்தில் செப்டம்பர் 2021 வரையில் 21,539 கோடி ரூபாய் தொகையானது கேட்பாரற்று கிடப்பதாக தெரிய வந்துள்ளது. இது எல்ஐசி நிறுவனம் பங்கு சந்தைக்கு ஐபிஓவுக்கு தாக்கல் செய்துள்ள வரைவு அறிக்கையில் வெளியாகியுள்ளது. யாரும் உரிமை கோராத இந்த பெரும் நிதிக்கு வட்டியும் கிடைத்து வருகின்றது என்பது இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம். எல்ஐசி ஐபிஓ எப்போது..? பங்கு விலை என்ன..? மோடி அரசுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் தெரியுமா..? விரைவில் ஒப்புதல் மத்திய அரசு … Read more

`தங்கள் வீட்டில் பாதுகாப்பு இல்லாதவர்கள்தான் ஹிஜாப் அணியவேண்டும்!' – பாஜக எம்.பி பிரக்யா சிங்

கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக் கல்லூரிகளுக்கு வரக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினரும் இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளைக் கூறி வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகூர் இந்த விவகாரத்தில் சர்ச்சையாக கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “வீட்டில் பாதுகாப்பு இல்லாத பெண்கள்தான் ஹிஜாப் அணியவேண்டும். பள்ளி, கல்லூரியில் அணியவேண்டிய அவசியம் இல்லை. மாணவிகள் … Read more

2022 ஐபிஎல் மெகா ஏலம்! பல மடங்கு உயர்ந்த இலங்கை வீரரின் சம்பளம்… நம்பர் 1 அவர் தான்

2022 ஐபிஎல் மெகா ஏலம் மூலம் அதிக சம்பள உயர்வு பெற்றுள்ள வீரர்களின் விபரம் தெரியவந்துள்ளது. ஐபிஎல் ஏலத்தில் பத்து அணிகளும் பணத்தைத் வாரி இறைத்து தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கியுள்ளது. மெகா ஏலத்தில் பெரும் ஒப்பந்தங்களைப் பெற்றதால், சில வீரர்களின் சம்பளம் பல மடங்கு உயர்ந்தது. ஐபிஎல் 2022 ஏலத்தில் பெரும் சம்பள உயர்வு பெற்ற டாப் 3 வீரர்கள் வனிந்து ஹசரங்கா இலங்கை வீரர் ஹசரங்கா ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் … Read more

மோடி அரசுக்கு எதிராக வியூகம் அமைக்கும் சந்திரசேகரராவ்: உத்தவ்தாக்கரே, மம்தா பானர்ஜியை சந்திக்கிறார்…

ஐதராபாத்: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்  வியூகம் அமைத்து வருகிறார். 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக அரசை ஓரம் கட்டும் முயற்சியாக,  எதிர்க்கட்சி தலைவர்களை முதலவர்  சந்திரசேகரராவ் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகா் ராவ் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பாஜக அரசு ஒருதலைப்பட்சமாக … Read more

சென்னையில் முதல்முறையாக ஓட்டு போடுவதற்கு தயாராகும் 5 லட்சம் இளைஞர்கள்

சென்னை: சென்னை மாநகராட்சி யில் உள்ள 200 வார்டுகளுக்கு வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சென்னை மாநகராட்சி யில் 61 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இவர்களில் 5 லட்சம் இளைஞர்கள் முதல்முறையாக ஓட்டு போடுவதற்கு தயாராக உள்ளனர். ஏற்கனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடத்தப்படுவதால் முதல்முறை வாக்காளர்கள் ஓட்டுப்போட ஆர்வமாக உள்ளனர். இந்த … Read more