மக்களின் பொருளாதாரம் தடைபடாமல் இருக்க கூடுதல் தளர்வுகள் வழங்கலாம்! மாநிலஅரசுகளுக்கு மத்தியஅரசு கடிதம்…
டெல்லி: மக்களின் பொருளாதாரம் தடைபடாமல் இருக்க கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து ஆராய மாநிலஅரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதனால், கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள், நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலும் 90சதவிகிதம் அளவிலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், கூடுதல் தளர்வுகளை அறிவிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். … Read more