நெட் தேர்வு முடிவு 2 நாளில் வெளியீடு

புதுடெல்லி: கடந்த 2020, 2021ம் ஆண்டு ஜூனில் நடக்க இருந்த யுஜிசி நெட் தேர்வுகள் கொரோனா காரணமாக நடக்கவில்லை. இந்த தேர்வுகள் ஒன்றாக  கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி முதல் 2022 ஜனவரி 5ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டது. நாடு முழுவதும் 12 லட்சம் பேர் தேர்வு எழுதினர். கடந்த மாதமே தேர்வு முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை  வெளியிடப்படவில்லை. இந்நிலையில், தேசிய தேர்வு முகமை இன்னும் ஒன்று அல்லது … Read more

குழந்தைகளுக்கு ஹெல்மெட் வருகிறது புதிய உத்தரவு| Dinamalar

புதுடில்லி:’இருசக்கர வாகனங்களில், 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அழைத்து செல்கையில், கட்டாயமாக, ‘ஹெல்மெட்’ அணிவிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய சட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.இது குறித்து, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிவிக்கை:இருசக்கர வாகனங்களில் அழைத்து செல்லப்படும் 4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, இருசக்கர வாகனங்களில் அழைத்து செல்லப்படும் 4 வயதுக்கு உட்பட்ட … Read more

ஆன்லைன் மூலம் எப்படி TD & RD கணக்கினை முன் கூட்டியே முடித்துக் கொள்வது?

அஞ்சலகத்தில் வழங்கப்படும் பிரபலமான திட்டங்களில் ஒன்று டைம் டெபாசிட் மற்றும் மற்றொன்று தொடர் வைப்பு நிதி திட்டமாகும். இது சாமானியர்களுக்கு ஏற்ற முதலீட்டு திட்டங்களாக பார்க்கப்படுகின்றது. ஏனெனில் இந்த திட்டங்களில் நம்மால் முடிந்த சிறு தொகைகளை கூட சேமிக்க முடியும். வட்டி விகிதம் உண்டு. பங்கு சந்தை அபாயம் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக வங்கிகளை விட வட்டி விகிதமும் அதிகம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாகும். இதே டைம் டெபாசிட் என எடுத்துக் கொண்டாலும் … Read more

`பயிற்சிக்குப் பிறகு ஒரு ரஷ்ய வீரர் கூட உக்ரைன் எல்லையில் இருக்கமாட்டார்!' – பெலாரஸ் அமைச்சர் பேட்டி

உக்ரைன் – ரஷ்யா விவகாரம் உலக நாடுகளால் உற்று கவனிக்கப்பட்டு வருகிறது. இதுவரையிலும் இந்த விவகாரத்தில் ரஷ்யா தரப்பிலிருந்து தீர்க்கமான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. மேலும் பல நாடுகளும் உக்ரைனில் வசித்து வரும் தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து விரைவில் வெளியேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன. நேற்றுகூட ரஷ்யா, உக்ரைன் எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 1.3 லட்சத்துக்கும் அதிகமான வீரர்களில் சில பகுதியினரை தங்கள் முகாம்களுக்கே திருப்பியனுப்பியதாக கூறியது. ஆனால், அமெரிக்காவோ, ரஷ்யாவின் இந்த நடவடிக்கை குறித்து முழுமையான உறுதியான … Read more

14 மாதங்கள் தனிமை: 78 முறை பரிசோதனை: கொரோனாவுடன் வாழும் அதிசய மனிதர்

துருக்கியை சேர்ந்த முசாபர் காய்சான்(56) என்ற நபர் சுமார் 14 மாதங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உலகிலேயே அதிக நாள்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்ற யாரும் விரும்பத்தகாத சாதனையை படைத்துள்ளார். முசாபர் காய்சான்(56) தனது Leukemia நோயால் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் பொது முதல் முறையாக 2020ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முசாபர் காய்சான்(56) முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் போது அவர் உயிர் பிழைக்க மாட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்னர். ஆனால் … Read more

மார்ச் 7ல் பொறியியல் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு

சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொறியியல் கல்லூரி உள்பட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கொரோனா குறைந்த வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்ததை அடுத்து மார்ச் 7ஆம் தேதி முதல் பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மற்றும் … Read more

அந்த வாக்குறுதியையும் விரைவில் நிறைவேற்றுவோம்- முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: பழந்தமிழகத்தில் தொண்டை மண்டலத்தின் நுழைவு வாயிலாக இருந்த மாவட்டம் இது! பல்லவர்கள் தொடங்கி ஆங்கிலேயர்கள் வரை போர் செய்த பூமி இது! பிரிட்டிஷார் முதலில் வந்து இறங்கியது பழவேற்காடு உள்ளிட்ட இந்தப் பகுதியில்தான்! பழவேற்காட்டுக்கு … Read more

சென்னை உயர் நீதிமன்றத்தின் 6 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

டெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்தின் 6 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. நிதுமோலு மாலா, சுந்தர் மோகன், கபாலி குமரேஷ் பாபு, சௌந்தர், அப்துல் கனி அப்துல் ஹமீத், ஜான் சத்யன் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..!

2021ல் வருமான வரித்துறை இந்தியாவில் வர்த்தகம் செய்து வரும் பல்வேறு சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்தில் சோதனை செய்தது. இந்தச் சோதனையில் சியோமி, ஓப்போ உட்படப் பல நிறுவனங்கள் செய்த 6500 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது மட்டும் அல்லாமல் அபராதமும் விதிக்கப்பட்டது. சந்திரசேகரன் கைக்கு வரும் 3 புதிய நிறுவனங்கள்.. அரசு ஓகே சொல்லுமா.. காத்திருக்கும் டாடா..! இந்நிலையில் தற்போது வருமான வரித்துறை சீனாவின் முன்னணி டெலிகாம் மற்றும் … Read more

போயஸ் கார்டன் விவகாரம்: ரூ.68 கோடி டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற தமிழக அரசு மனுத் தாக்கல்!

கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டை நினைவில்லமாக மாற்ற நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது எனக்கூறி அவசரச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசு முடிவு செய்தது. போயஸ் கார்டன் வீடு #VikatanExclusive எனவே, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி, வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா … Read more