LIC பங்கு விற்பனை கன்பார்ம் ஆகிடுச்சு.. அடுத்தது IDBI வங்கியா.. மோடி அரசின் அடுத்த திட்டம் என்ன?

எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனையானது இறுதி கட்டத்தினை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக ஐடிபிஐ வங்கியின் (IDBI bank) பங்குகளை விற்பனை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த கலந்துரையாடல் விர்சுவல் மூலமாக அடுத்த வாரம் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விர்சுவல் கூட்டத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிகிறது. எல்ஐசி IPO.. பங்கு விலை ரூ.1700 – 3500-க்குள் இருக்கலாம்.. ரெடியாகிகோங்க..! யாரிடம் எவ்வளவு பங்கு? ஐடிபிஐ … Read more

பஞ்சாப்: `தேர்தல் நடத்தை விதிகள்… ரூ.449.55 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!’ -தேர்தல் ஆணையம்

பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 20-ம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் தேதியை வெளியிட்ட நாளிலிருந்தே, அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடத்தில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருள் அளிக்கக்கூடாது, வாக்குச்சாவடி அமைந்திருக்கும் இடங்களைச்சுற்றி 100 மீட்டர் தொலைவிற்குள் பிரசாரம் நடத்த தடை, வாக்கு பதிவு நடைபெறும் இரண்டு நாள்களுக்கு முன்பு வரை மட்டுமே அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி போன்ற தேர்தல் நடத்தை விதிகள் பஞ்சாப்பில் அமலில் … Read more

ஐபிஎல் ஏலத்தில் அடித்த அதிக தொகைக்கு ஏலம் – வெஸ்ட் இன்டீஸ் வீரர் செய்த சிறப்பான சம்பவம்

ஐபிஎல் ஏலத்தில்   அதிக தொகைக்கு வாங்கப்பட்ட நிலையில் வெஸ்ட் இன்டீஸ் வீரர் சக வீரர்களுக்கு விருந்தளித்துள்ளார்.  நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்காக லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 10 அணிகளுக்கான வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்தது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் போட்டிப் போட்டு எடுத்தன.  அந்தவகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.10.75 கோடிக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரரான நிக்கோலஸ் பூரனை ஏலத்தில் எடுத்தது.ஐபிஎல் … Read more

ஹிஜாப் விவகாரத்தில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கருத்து

சென்னை: ஹிஜாப் விவகாரத்தில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில அரசு, கல்வி நிலையங்களில் மாணாக்கர்களிடையே சாதி, மத வேறுபாடுகளை தவிர்க்க மதஅடையாள சின்னங்களுடன் கல்வி நிலையங்களுக்கு வர தடை விதித்துள்ளது. இதன்படி, கர்நாக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் குந்தாபுராவில் இருக்கும் பியூ கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது .கல்லூரியின் இந்த தடைக்கு எதிராக நம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதை அடுத்து இந்து மாணவர்களும் முஸ்லிம் மாணவிகளுக்கு … Read more

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்:இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவு

சென்னை: தமிழகத்தில்  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் கடைசி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.  தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரசார நிகழ்ச்சிகளும், வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 5,866,885 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58.66 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,866,885 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 417,885,540 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 338,396,416 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 84,604 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சீனா-வை காப்பி அடிக்கும் முகேஷ் அம்பானி.. ரோபோசோ உடன் ரிலையன்ஸ் கூட்டணி..!

இந்தியாவில் டிஜிட்டல் மற்றும் ஈகாமர்ஸ் வர்த்தகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் அனைத்து ஷாட் வீடியோ செயலிகளும் ரீடைல் நிறுவனத்திடம் இணைந்து சோஷியல் காமர்ஸ் வர்த்தகத்தைத் துவங்கி வருகிறது. ஆம், சீனாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் சோஷியல் காமர்ஸ் வர்த்தகத்தை இந்தியாவில் கொண்டு வர முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்பட அனைத்து ஆன்லைன் விற்பனை நிறுவனங்களும் முயற்சி செய்து வருகிறது. சந்திரசேகரன் கைக்கு வரும் 3 புதிய நிறுவனங்கள்.. அரசு ஓகே சொல்லுமா.. காத்திருக்கும் … Read more

அனைத்தும் நாடகம்., உக்ரைன் எல்லையில் தொடர்ந்து படைகளை குவிக்கும் ரஷ்யா! நேட்டோ குற்றச்சாட்டு

உக்ரைனைச் சுற்றி ரஷ்யா தொடர்ந்து அதன் இராணுவ படைகளை குவித்துவருவதாக நேட்டோ அமைப்பு எச்சரித்துள்ளது. உக்ரைன் எல்லைகளில் இருந்து படைகளை மீண்டும் அதன் நிரந்தர தளத்திற்கு திருப்பி அனுப்பி வருவதாகவும், உக்ரைன் உடனான இராஜதந்திர பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் ரஷ்யா செவ்வாய்க்கிழமை முதல் கூறிவருகிறது. கிரிமியாவிலிருந்து டாங்கிகள், பீரங்கிகளை மற்றும் போர் ஆயுதங்களையும் ரயில் மூலம் வெளியேற்றப்படுவதாக வீடியோ மற்றும் புகைப்படங்களும் ரஷ்யா தரப்பிலிருந்து வெளியிடப்பட்டது. ஆனால், இவை அனைத்துக்கும் நேர்மாறாக உக்ரைனைச் சுற்றி ஒரு பாரிய … Read more

16 வழக்கறிஞர்களை பம்பாய், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக உயர்நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

புதுடெல்லி: 16 வழக்கறிஞர்களை பம்பாய், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக எஸ்சி கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 10 வழக்கறிஞர்களையும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 6 வழக்கறிஞர்களையும் நியமிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 2022 பிப்ரவரி 16-ம் தேதி நடைபெற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டத்தில், மும்பை உயர்நீதிமன்றத்தில் பின்வரும் வழக்கறிஞர்களை நீதிபதிகளாக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கிஷோர் … Read more