ஆளுநர் ரவியின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ரத்து

சென்னை: ஆளுநர் ரவியின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. 3 நாள் பயணமாக நாளை ஆளுநர் ரவி டெல்லி செல்லவிருந்தார். இந்த பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய மசோதாவை ஆளுனர் திருப்பி அனுப்பி இருந்த நிலையில் அவருக்கு எதிரான கண்டனக் குரல்கள் அதிகரித்து வந்தது. இதனையடுத்து டெல்லி செல்ல இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மேலும் 6,120 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 9,916 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய தொற்று பாதிப்பு 6,120 ஆக குறைந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,120 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 1,23,537 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அரசு மருத்துவமனையில் 10 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேரும் … Read more

இந்திய அணியின் அபார பந்து வீச்சால் 176 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ் அணி

அகமதாபாத்: முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இண்டீஸ் அணி. அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இண்டீஸ் அணி 43.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் சஹல் 4, சுந்தர் 3, பிரசித் 2, சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர்.

விண்டீசை வீழ்த்தியது இந்தியா: ரோகித், சகால் அசத்தல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆமதாபாத்: விண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் யுவேந்திர சகால், வாஷிங்டன் சுந்தர், கேப்டன் ரோகித் சர்மா கைகொடுக்க இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் முதல் போட்டி நடந்தது. இது, இந்திய அணி பங்கேற்ற 1000வது ஒருநாள் போட்டி. இந்திய அணியில் … Read more

கிரிப்டோகரன்சிகளுக்கு எதிரான கணிப்புகள்.. பெரியளவில் மாற்றமின்றி காணப்படும் டிஜிட்டல் கரன்சிகள்..!

இந்தியாவில் ரிசர்வ் வங்கி மூலமாக அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சியானது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பட்ஜெட் 2022ல் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் கிரிப்டோகரன்சிகளுக்கு வரி விகிதம் 30% விதிகப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸூக்கு பலத்த இழப்பு.. 9 நிறுவனங்களுக்கு ஒரே வாரத்தில் ரூ.3 லட்சம் கோடி நஷ்டம்..! எனினும் பொருளாதார ஆய்வாளர்கள் கிரிப்டோகரன்சிகள் குறித்து எதிரான கருத்தினையே கூறி வருகின்றனர். குறிப்பாக இந்திய பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, கிரிப்டோகரன்சி சந்தையானது வீழ்ச்சி காணலாம். … Read more

ஆண்மைக்குறைவை ஏற்படுத்துமா உடற்பயிற்சி? காமத்துக்கு மரியாதை – S2 E6

`உடற்பயிற்சி செஞ்சா ஆண்மை குறைஞ்சுடும்; குழந்தை பொறக்காது’ என்கிற அச்சம் இன்றைக்கும் சிலரிடம் இருக்கிறது. அது எந்த அளவுக்கு உண்மை? சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ் விளக்குகிறார். பாலியல் மருத்துவர் காமராஜ் “இந்த அச்சம் ஜிம்முக்கு செல்லும் பலரிடமும் இருக்கிறது. என்னிடமும் நிறைய பேர் இதுபற்றிக் கேட்டிருக்கிறார்கள். `உடற்பயிற்சி செஞ்சா ஆண்மைக் குறைஞ்சுடுமா டாக்டர்’ என்பார்கள் ஆண்கள். பெண்கள், ‘தொடர்ந்து உடற்பயிற்சி செஞ்சா கருத்தரிக்க முடியாதுன்னு சொல்றாங்களே டாக்டர்’ என்பார்கள். உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு கொண்ட … Read more

எங்கள் இதயத்தில் வாழ்வீர்கள்! லதா மங்கேஷ்வர் மறைவுக்கு இலங்கை ஜாம்பவான் ஜெயசூர்யா இரங்கல்

பாடகி லதா மங்கேஷ்வர் மறைவுக்கு இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். தனது 13-வது வயது முதல் ஏறக்குறைய 80 ஆண்டுகாலம் இந்திய இசைக் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருந்த குரல் இன்று தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டது. ஆம், பாரத ரத்னா, தாதா சாகேப் பால்கே, பத்ம பூஷண், பத்ம விபூஷண் என்ற பல்வேறு விருதுகளைப் பெற்ற பழம்பெரும் பாடகி, இந்திய சினிமாவின் ‘நைட்டிங்கேல்’ லதா மங்கேஷ்கர் இன்று மறைந்து விட்டார். Sad … Read more

தமிழகத்தில் இன்று 6,120 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 06/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 6,120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,10,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,33,537 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,25,25,017 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 6,120 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 34,10,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 26 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 37,759 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 23,144 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 32,51,295 பேர் குணம் அடைந்து வீடு … Read more

கிழக்கிந்திய கம்பெனியை அனுப்பிவிட்டு வடக்கிந்திய கம்பெனி ஆளவா குடியரசு பெற்றோம்? – கமல்ஹாசன்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று தொடங்கினார். தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  ஈடுபட்டார். சென்னையில் மட்டும் 182 வார்டுகளில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தனித்து போட்டியிட உள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச்லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.  சென்னையின் 123-வது வார்டில் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் மாலாவை ஆதரித்து கமலஹாசன் வீடு வீடாக … Read more

1000-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி

அகமதாபாத்: 1000-வது ஒருநாள் போட்டியில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து முதலில் களமிறங்கிய இண்டீஸ் அணி 43.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்களில் சுருண்டது. இந்திய அணியில் சஹல் 4, சுந்தர் 3, பிரசித் 2, சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 28 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு … Read more