உக்ரைனில் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளம்.. ரஷ்யா போர் தொடுக்க இதுவும் காரணம்..!

ரஷ்ய அதிபர் புதின் பல ஆண்டுகள் திட்டமிட்டு உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் நிலையில், 2வது நாளாக ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்ரைன் நாட்டுக்குள் முன்னேறி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ரஷ்ய படைகளை எதிர்க்க போதுமான வீரர்கள் இல்லாத காரணத்தால் உக்ரைன் மக்களுக்குச் சுமார் 10000 ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் உக்ரைன் அரசு 18 -60 வயது உடைய ஆண்கள் அந்நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற புதிய … Read more

`அவரது பணமல்ல அறிவுதான்…'- எலான் மஸ்க்கின் காதலி; யார் இந்த நடாஷா பெஸட்?

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலானின் சொத்து மதிப்பு 233 பில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும். அடிக்கடி தலைப்பு செய்திகளில் அடிபடும் இவரின் பெயர் இப்போது உச்சரிக்கப்படுவதற்கு காரணம் இவரின் புதிய கேர்ள் ப்ரண்ட், ஆஸ்திரேலிய நடிகை நடாஷா பெஸட். எலான் செப்டம்பர் 2021-ல் பாடகி கீரிம்ஸ் உடனான உறவில் இருந்து விலகினார். இருவருக்கும் X AE A-Xii என்கிற ஒரு வயது மகன் உள்ளார். 50 வயதான எலான் இதுவரை பல முறை திருமணம் செய்தும் பிறகு … Read more

உக்ரைன் மீது 2ஆம் நாள் போரை அதிரடியாக தொடங்கியது ரஷ்யா! பயங்கர சத்தத்துடன் நடக்கும் தாக்குதல்கள்

ரஷ்யாவுடனான இரண்டாவது நாள் போர் உக்ரைனில் தொடங்கிய நிலையில் முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். மேலும் ரஷ்யாவைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனிடையில் லிதுவேனியா நாட்டில் உக்ரைன் போருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். செல்போன் விளக்குகளை ஒளிர செய்து உக்ரைனுக்கான ஆதரவை தெரிவித்தனர். கிவ் நகரின் மீது தாக்குதல் நடத்தி வந்த ரஷ்ய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், … Read more

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு மார்ச் 10ந்தேதி வரை சிறை!

கொழும்பு: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரையும் மார்ச் 10ந்தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மற்றும் காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தர  22 மீனவர்களையும் 2 விசைப்படகுகளையும்  இலங்கை கடற்படையினன் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மடக்கி கைது செய்து இலங்கைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். மயிலிட்டி துறைமுகத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழக மீனவர்கள் 22 பேருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு ஊர்காவற்துறை … Read more

கிடுகிடுவென ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை

சென்னை: சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. ஒருநாள் விலை ஏறுவதும், மறுநாள் விலை குறைவதுமாக இருந்தது. இந்த சூழ்நிலையில், நேற்று ரஷியா- உக்ரைன் போர் எதிரொலியால் ஆபரணத் தங்கத்தின் விலை மூன்று முறை உயர்ந்தது. மூன்றாவது முறையாக ஆபரணத் தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.232 உயர்ந்து ரூ.4,951க்கும் சவரனுக்கு ரூ.1,856 உயர்ந்து ரூ.39,608க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.150 குறைந்து, ஒரு … Read more

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது புதிய தடைகளை அறிவித்தது ஐரோப்பிய ஒன்றியம்..!!

ஐரோப்பா: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது புதிய தடைகளை  ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. நிதி, எரிசக்தி, போக்குவரத்து, சிறப்பு சலுகை விசாக்கள் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய ஆணையம் தெரிவித்திருக்கிறது. ரஷ்யாவில் இருந்து கேஸ் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்படவில்லை என்று ஆணைய தலைவர் உர்சுலா வான்டெர் அறிவித்துள்ளார்.

சாமானிய மக்களை பதம் பார்க்கப்போகும் விலை வாசி.. உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தால் பெரும் இன்னல்கள்!

உக்ரைன் இடையேயான போர் பதற்றத்தின் மத்தியில், உக்ரைனின் தலைமையகத்தில் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பிரச்சனை இன்னும் பூதாகரமாக மாறலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நேட்டோ அமைப்பு, ஐ நா கூட்டமைப்பு என பல தரப்பில் இருந்து, பேச்சு வார்த்தை நடத்தினாலும், அதற்கு ரஷ்யா செவி மடுத்ததாகவும் தெரியவில்லை. ரூ.15 டூ ரூ.533.. 3 வருடத்தில் மல்டிபேக்கர்.. பல லட்சம் லாபம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா? ஏனெனில் தொடர்ந்து உக்ரைனில் … Read more

Doctor Vikatan: சமைக்காத அவல் சாப்பிட்டால் எடை குறையுமா?

அவல் சாப்பிடுவது வெயிட்லாஸுக்கு உதவுமா? இன்று ராகி அவல், கம்பு அவல் என விதம்விதமான அவல் கிடைக்கிறது. அதைச் சமைக்காமல் சாப்பிடுவது பலன் தருமா? – ஷீதல் (விகடன் இணையத்திலிருந்து) ஸ்ரீமதி வெங்கட்ராமன் பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த, கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன். “அவல் சாப்பிடுவது எடைக்குறைப்புக்கு நிச்சயம் உதவாது. ஏனென்றால் 100 கிராம் சாதாரண அவலில் 77 சதவிகிதம் முதல் 85 சதவிகிதம் வரை கார்போஹைட்ரேட் மட்டும்தான் உள்ளது. சிவப்பு … Read more

மகர ராசியில் சனி, செவ்வாய்!இந்த 4 ராசிக்காரங்க அதிக பிரச்சனைகளை சந்திக்கப்போகிறார்களாம்.. இன்றைய ராசிப்பலன்

ஜோதிடத்தின் படி, வலிமைமிக்க மற்றும் கிரகங்களின் தளபதியான செவ்வாய் 2022 பிப்ரவரி 26 ஆம் திகதி மகர ராசிக்கு செல்லப் போகிறார். செவ்வாய் 2022 பிப்ரவரி 26 அன்று மாலை 3.45 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசியில் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் கும்ப ராசிக்குள் நுழைவார். ஏற்கனவே மகர ராசியில் நுழையும் செவ்வாய் மக்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களது ராசிப்பலனை … Read more

கர்நாடகாவில் அடுத்த சர்ச்சை : சீக்கியர்கள் தலைப்பாகை அகற்ற வலியுறுத்தல்

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரத்தை அடுத்து  சீக்கியர்களின் தலைப்பாகை குறித்த அடுத்த சர்ச்சை தொடங்கி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது என இந்துத்துவ மாணவர்கள் வலியுறுத்தினர்.   இதையொட்டி கர்நாடக அரசு மத ரீதியான உடைகளை அணிந்து கல்வி நிலையங்களுக்கு மாணாக்கர்கள் வரத் தடை விதித்தது.   இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உச்சநீதிமன்றம் இது குறித்து முடிவுக்கு வரும் வரை மதரீதியான உடைகளை மாணவர்கள் கல்வி நிலையத்துக்கு அணிந்து … Read more