ஜியோவின் 2 புதிய ஹாட் திட்டங்கள்.. 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் ஏராளமான சலுகைகள்!

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக இருந்து வரும் ஜியோ, அவ்வப்போது சில புதிய திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை குதூகலப்படுத்தும். அந்த வகையில் ஜியோ நிறுவனம் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது வாடிக்கையாளார்களை நீண்டகாலத்திற்கு தக்க வைத்துக் கொள்ள உதவும். அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கையையும் அதிகரிக்க உதவும். அதோடு ஜியோ பயனர்களுக்கும் அடிக்கடி ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது. 2 டாப் திட்டங்கள் இந்த புதிய திட்டங்கள் டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டார் பிரீமிய வசதிகளுடன் … Read more

வைப்பு தொகைக்கு 1,000% வட்டி… வீட்டுக்கு ரேஷன்; ஆசை காட்டி மும்பையில் ரூ.100 கோடி மோசடி!

அதிக வட்டி கொடுப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருந்தாலும், மக்கள் வட்டிக்கு ஆசைப்பட்டு போலி கம்பெனிகளிடம் பணம் கட்டி ஏமாறுவது மட்டும் குறையவே இல்லை. மும்பையில் அது போன்ற ஒரு மோசடியில் 25 ஆயிரம் பேர் தங்களது பணத்தை பறிகொடுத்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடிக்கொண்டிருக்கின்றனர். மும்பை போரிவலியைச் சேர்ந்தவர் கிஷோர் காக்டே. இவர் காக் எகனாமிக் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட் என்ற கம்பெனியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார். … Read more

உக்ரைனில் இருந்து தூதர்களை வெளியேற்றியது ரஷ்யா! அதிகரிக்கும் பதற்றம்

 உக்ரைனில் உள்ள அனைத்து தூதரக ஊழியர்களையும் ரஷ்யா வெளியேற்றத் தொடங்கியுள்ளது. உக்ரைன் தலைநகர் கிய்வில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் பிரதிநிதியை மேற்கோள் காட்டி TASS செய்தி நிறுவனம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. உக்ரைனின் Odessa நகரில் உள்ள தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் ஆகியவை ரஷ்யக் கொடிகள் அகற்றப்பட்ட நிலையில் காணப்பட்டன. காலை தூதரகத்தை விட்டு பல கார்கள் வெளியேறியதாக என Odessa நகரில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு அருகில் பணியில் இருந்த உக்ரேனிய தேசிய காவலர் ஒருவர் … Read more

கோவையில் அனைத்து இடங்களிலும் ம நீ ம டெபாசிட் இழப்பு

கோவை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கோவை மாநகராட்சி தேர்தலில் தாம் போட்டியிட்ட அனைத்து வார்டுகளிலும் டெபாசிட் இழந்துள்ளனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பிடித்தார்.  இங்கு திமுக தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணம் மக்கள் நீதி மய்யத்துக்குக் கிடைத்த வாக்குகளே என அப்போது கூறப்பட்டது.   திமுகவுக்குக் கிடைக்க வேண்டிய நடுநிலை வாக்குகளை ம நீ ம பெற்றதாகக் கருத்து இருந்தது. தற்போது … Read more

பெண்களுக்கு 50 சதவீத வார்டு ஒதுக்கீட்டிற்கு எதிரான மனு தள்ளுபடி- உயர்நீதிமன்றம்

சென்னை மாநகராட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத வார்டு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.  அதன்படி சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கு 50 சதவீத வார்டுகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவில் மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டபோது 50 சதவீதத்திற்கும் அதிகமாக பெண்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை எதிர்த்தும், வார்டு மறுவரையரை செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரியும் முத்துராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். … Read more

தேர்தல் வெற்றி: வார்டு கவுன்சிலர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து

சென்னை: சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். காஞ்சிபுரம், வேலூர், கரூர், கோவை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களின் திமுக கவுன்சிலர்கள் வாழ்த்து பெற்றனர்

பிரக்ஞானந்தா முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்: பிரதமர்| Dinamalar

புதுடில்லி: ‘ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ்’ ஆன்லைன் ரேபிட் செஸ் தொடரின் முதல்கட்ட போட்டிகள் தற்போது நடக்கிறது. உலக சாம்பியன், நார்வேயின் கார்ல்சன், ரஷ்யாவின் இயான் நெபோம்னியாட்சி, இந்தியாவின் பிரக்ஞானந்தா உட்பட 16 பேர் பங்கேற்கின்றனர். ‘டாப்-8’ இடம் பெறுபவர்கள் காலிறுதிக்கு முன்னேறுவர். 8வது சுற்றில் 16 வயது பிரக்ஞானந்தா, ஐந்து முறை உலக சாம்பியன், உலகின் ‘நம்பர்-1’ வீரர் கார்ல்சனை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார். இந்நிலையில், பிரக்ஞானந்தாவை பாராட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை: இளம் மேதை … Read more

ஐ லவ் யூ என கூறினால் பாலியல் தொல்லை அல்ல – கோர்ட்டு தீர்ப்பு

மும்பை மும்பையில் 22 வயது வாலிபர் ஒருவர் 17 வயது சிறுமியிடம் பின் தொடர்ந்து சென்று ‘ஐ லவ் யூ’ என்று தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் இளைஞர் மீது சிறுமியும் அவரது தாயாரும் போலீஸ்  நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  போலீசார்  போக்சோ சட்டத்தின் கீழ் இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு மும்பை சிறப்பு கோர்ட் நீதிபதி கல்பனா பாட்டீல் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிஒரு சந்தர்ப்பத்தில்  ஒருவரிடம் … Read more

யார் இந்த சஞ்சீவ் சன்யால்.. மோடியின் பொருளாதார ஆலோசனை குழுவில் முக்கிய பொறுப்பு!

பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் முழு நேர உறுப்பினராக சஞ்சீவ் சன்யால் நியமிக்கப்பட்டுள்ளார். யார் இந்த சஞ்சீவ் சன்யால்? இவரின் அனுபவம் என்ன? கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம். தற்போது மத்திய நிதியமைச்சகத்தின், முதன்மை பொருளாதார ஆலோசகராகப் பணியாற்றி வரும் சஞ்சீவ், நடப்பு ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிற்கு முன்னதாக தாக்கல் செய்யப்பட்ட, பொருளாதார ஆய்வறிக்கை தயாரிப்பில் இவரின் பங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. டெஸ்லா-வுக்கு மோடி அரசு கொடுக்கும் … Read more

சிவகங்கை: நகராட்சித் தலைவர் ரிமோட் பாம் வைத்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விடுதலை!

15 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தையே அதிரவைத்த சிவகங்கை நகராட்சித் தலைவர் முருகன் கொலை வழக்கில், இன்று குற்றவாளிகளை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கொலை தி.மு.க உட்கட்சி பிரச்னையால் 2007-ல் நடந்த நகராட்சித் தேர்தலில், கட்சித்தலைமை முருகன் என்பவருக்கு சிவகங்கையில் போட்டியிட வாய்ப்பு கொடுக்காத நிலையில், சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின்னர், பெரும்பாலான தி.மு.க உறுப்பினர்களின் ஆதரவில் முருகன் நகராட்சித் தலைவரானார். இதனால் சிவகங்கை நகர தி.மு.க-வுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், 2007-ம் ஆண்டு ஜூன் … Read more