உத்திரப்பிரதேச 4-ஆம் கட்ட சட்டப்பேரவை தேர்தல்: 5 மணி நிலவரப்படி 57.45% வாக்குகள் பதிவு

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் 4-ஆம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் மாலை 5 நிலவரப்படி 57.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.

முஸ்லிம் பெண்களுக்கு சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் எதுவும் செய்யவில்லை- பிரதமர் மோடி

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, முதல் மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துவிட்டன. இந்நிலையில், இன்று நான்காம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில் அவர், “வாக்கு வங்கி அரசியலால் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் முஸ்லீம் சகோதரிகளின் வாழ்வில் இருந்த மிகப்பெரிய சவாலை தங்கள் வாக்குகளுக்காக … Read more

இன்ட்ரஸ்ட் ஒன்லி ஹோம் லோன்.. வீடு கட்டுவோருக்கு நல்ல விஷயம் தான்..!

நீங்கள் வீடு கட்ட அல்லது வாங்க திட்டமிட்டிருந்தால் இது நிச்சயம் நல்ல வாய்ப்பு எனலாம். ஏற்கனவே வட்டி விகிதம் வரலாறு காணாத அளவு குறைந்துள்ள நிலையில், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் பற்பல சலுகைகளை வழங்கி வருகின்றன. ஆக குறைந்த வட்டியில் பல சலுகைகளுடன் வீடு வாங்கும் யோகம் நல்ல வாய்ப்பு தானே. இவற்றோடு சமீபத்தில் ஸ்டாண்டர்டு சார்ட்டர்ட் வங்கியானது வட்டி மட்டுமே செலுத்தும் ஒரு திட்டத்தினை அறிவித்தது. இது வேறு கட்டணங்களோ செலவுகளோ கட்டணங்களாக எதுவும் கிடையாது. … Read more

“பாஜக தான் தமிழகத்தின் 3-வது மிகப்பெரிய கட்சி!" – ராகுல் கருத்துக்கு அமித் மல்வியா பதில்

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “பா.ஜ.க-வால் தமிழகத்தை ஒருபோதும் ஆட்சி செய்ய முடியாது” என்றார். இவரின் பேச்சு இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழக பா.ஜ.க மாநகராட்சியில் 15 வார்டுகள், நகராட்சியில் 56 வார்டுகள் மற்றும் பேரூராட்சியில் 230 வார்டுகள் என மொத்தம் 301 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. ராகுல் காந்தி – நாடாளுமன்றம் தமிழக … Read more

இளம்பெண் கொலை! பெற்ற மகனை ஆதாரத்துடன் போலீசில் மாட்டிவிட்ட தந்தை

இந்தியாவில் இளம்பெண்ணை கொன்ற வழக்கில தனது மகனுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டி அவரது தந்தையே போலீசில் மாட்டிவிட்ட சம்பவம் நடந்துள்ளது. மும்பையின் மிஸ்குய்ட்டா பகுதியை சேர்ந்தவர் கேரல்(வயது 29), கடந்த மாதம் 24ம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வரவில்லை. எங்கு தேடியும் கேரல் கிடைக்காததால் அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர், இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கேரலை தேடி வந்ததில், கடந்த 3ம் திகதி பல்கார் நகரில் உள்ள … Read more

திமுகவில் அதிமுக சங்கமாகி விடும்! அமைச்சர் பெரியசாமி

சென்னை: காலப்போக்கில் திமுகவில் அதிமுக சங்கமாகி விடும் என்று அமைச்சர் பெரியசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்த அதிமக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. 21 மாநகராட்சிகளையும் இழந்துள்ளதுடன் 90 சதவிகிம் தோல்வியை சந்தித்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, காலப்போக்கில் அதிமுக, திமுகவில் சங்கமாகி விடும் என்று கூறினார். … Read more

வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்- மு.க.ஸ்டாலின்

சென்னை: தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. மகத்தான என்பதை விட வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்காக உழைத்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தி.மு.கழக முன்னணியினர், கழக உடன்பிறப்புகள், தோழமைக் கட்சிகளைச் சார்ந்த தோழர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது அயராத உழைப்பாலும் பணியாலும்தான் இந்தச் … Read more

நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு 3 மாத கால நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு 3 மாத கால நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெற்றோர் ஓட்டளித்தால் பிள்ளைகளுக்கு 10 மதிப்பெண் பரிசு| Dinamalar

லக்னோ: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பெற்றோர்கள் ஓட்டளித்தால், அவர்களின் பிள்ளைகளுக்கு 10 மதிப்பெண்கள் அளிக்கப்படும் என லக்னோவில் உள்ள கல்லூரி அறிவித்துள்ளது. உ.பி.,யில் சட்டசபை பொதுத்தேர்தல் நடக்கிறது. இன்று (பிப்.,23) நான்காம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த நிலையில் ஓட்டுப்பதிவை ஊக்குவிக்கும் வகையில், லக்னோவில் உள்ள கிறிஸ்ட் சர்ச் கல்லூரி ஒரு ஆச்சரியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த தேர்தலில் பெற்றோர்கள் ஓட்டளித்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு 10 மதிப்பெண் வழங்கப்படும் என அக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. … Read more