பல நாட்களுக்கு பிறகு காளையின் ஆதிக்கம்.. முதலீட்டாளார்கள் பெரும் நிம்மதி..!

இந்திய பங்கு சந்தையானது நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உள்ளிட்ட குறியீடுகள் சற்று ஏற்றத்தில் காணப்படுகின்றன. கடந்த சில அமர்வுகளாகவே தொடர்ந்து பலத்த சரிவினைக் கண்டு வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்திருப்பது ஷார்ட் கவரிங் ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நாளை எஃப் & ஓ எக்ஸ்பெய்ரி என்பதால் இந்த ஏற்றம் முடிவிலும் இருக்குமா? என்பதும் சந்தேகமாகத் தான் பார்க்கப்படுகின்றது. உக்ரைன்- ரஷ்யா பதற்றம் உக்ரைன் எல்லையில் … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவானது கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அன்று சென்னை ராயபுரம் பகுதியில், திமுக பிரமுகர் ஒருவர் கள்ள ஓட்டு செலுத்த வந்ததாக கூறி, அ.தி.மு.கவினர் பலர் அந்த திமுக நபரை அரைநிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அங்கு இருந்தார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் ஒரு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது இதையடுத்து, சென்னை தண்டையார்பேட்டை காவல்துறையினர் ஜெயக்குமார் உட்பட … Read more

விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களின் வெற்றி எப்படி சாத்தியமானது?

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது விஜய் மக்கள் இயக்கத்தின் வெற்றி. புதுக்கோட்டை நகராட்சி 4ஆவது வார்டில் போட்டியிட்ட பர்வேஸ், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை நகராட்சி 3ஆவது வார்டில் போட்டியிட்ட மோகன் ராஜ், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் போட்டியிட்ட வேல்முருகன், திருச்சி மாவட்டத்திம் பூவாலூர் பேரூராட்சி 15 ஆவது வார்டில் போட்டியிட்ட V.மேனகா, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி 21ஆவது வார்டு சுயேச்சை வேட்பாளர் சைதானி முகமது … Read more

அநேகமாக 2 நகராட்சிகளில் தலைவர் பதவியை கைப்பற்ற அதிமுகவுக்கு வாய்ப்பு

சென்னை அதிமுக அநேகமாக 2 மாநகராட்சிகளில் தலைவர் பதவியை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.  அதிமுக மிகவும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.  இதனால் திமுக பல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்களைக் கைப்பற்றி உள்ளது.  தற்போதைய நிலையில் அதிமுக மற்ற கட்சிகளின் ஆதரவு இருந்தால் இரு நகராட்சிகளைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியும் ஒன்றாகும்.  இங்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 24 … Read more

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் அத்துமீறி வாக்குச்சாவடிகளுக்குள் நுழைந்து கள்ள ஓட்டு போட்டதாக அ.தி.மு.க. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ராயபுரம் பகுதியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் தாக்கினர்.   இதற்கிடையே, தி.மு.க. பிரமுகரை  தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர். … Read more

நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் இன்று தீர்ப்பளிக்கிறது உயர்நீதிமன்றம்

சென்னை : நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளில் இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்த வழக்கு, வாக்குரிமை மறுக்கப்பட்டதாக சங்க உறுப்பினர்கள் இருவர் தொடர்ந்த வழக்குகளில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

வியாபாரிகளுக்கு ஆலோசனை கூட்டம்| Dinamalar

பெங்களூரு:கர்நாடக மாநில முறுக்கு வியாபாரிகள், சிறு தொழில் செய்பவர்களுக்கான பயிற்சி, ஆலோசனைகள், தொழில் கடன் வழங்குவது குறித்த கூட்டம் பெங்களூரு தமிழ் சங்கத்தில், இன்று முதல் வரும் 25 வரை மூன்று நாட்கள் நடக்கிறது.தினமும், காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை நடக்கும் கூட்டத்தில், மத்திய அரசு அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.மேலும் விபரங்களுக்கு சங்க தலைவர் தமிழரசன் 91595 55110, 98800 29401 என்ற மொபைல் எண்ணில் … Read more

அசத்தலான அஞ்சலக திட்டம்.. PPFல் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?

பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் அஞ்சலகத்தின் சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்த திட்டத்தினை அஞ்சலகத்தில் எங்கு வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். வங்கியிலும் தொடங்கிக் கொள்ளலாம். இது ஒரு 15 ஆண்டுகால திட்டமாகும். இந்தியர்களான யார் வேண்டுமானாலும் தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் 7.1% ஆகும். இது சந்தை நிலவரத்திற்கு ஏற்ப அரசால் மாற்றம் செய்யப்படுகின்றது. ரஷ்யா கைப்பற்றிய 2 உக்ரைன் பகுதிகள் மீது ‘நிதியியல் தடை’.. அமெரிக்கா அதிரடி..! முதலீடு? இந்த திட்டத்தில் … Read more

ஒரு ஓட்டுக்கூட பெற விடாமல் அதிமுக-வை தோற்கடித்த சுயேச்சை! -வென்றதும் அதே கட்சியில் இணைந்த சுவாரஸ்யம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி 7வது வார்டு பதவிக்கு திமுக சார்பில் பரூக், அதிமுக சார்பில் முகமது இப்ராம்ஷா, சுயேச்சையாக பிரதிவிராஜா மற்றும் இன்னும் சில சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் இறங்கினர். இதில், சுயேச்சையாகக் களமிறங்கிய பிரிதிவிராஜா 175 வாக்குகள் பெற்று வெற்றியை வசப்படுத்தினார். 149 வாக்குகள் வாங்கிய திமுக பரூக் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இப்ராம்ஷாவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்தே அவருக்குப் பதிவான … Read more

சுவிட்சர்லாந்து செல்ல வேண்டுமா? தற்போதையை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை தெரிந்துகொள்ளுங்கள்

சுவிட்சர்லாந்திற்கு வருபவர்கள் கடுமையான நுழைவு விதிகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. உலக சுகாதார அமைப்பு (WHO) வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, சுவிட்சர்லாந்தில் மொத்தம் 2,653,056 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 12,553 பேர் இறந்துள்ளனர். இத்தகைய புள்ளிவிவரங்கள் இருந்தபோதிலும், சுவிட்சர்லாந்தில் உள்ள அதிகாரிகள் பிப்ரவரி 17 அன்று வைரஸ் மேலும் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட பெரும்பாலான கோவிட்-19 கட்டுப்பாடுகளை நீக்கினர். பிப்ரவரி 17 முதல் பயண விதிகள் தளர்த்தப்படும் என்று சுவிஸ் ஃபெடரல் கவுன்சில் வெளியிட்ட … Read more