நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – இரவு 10 மணி வரை பிரசார செய்ய மாநில தேர்தல் ஆணையம் அனுமதி

சென்னை,  வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி ஆளும் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.  இந்தநிலையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சியினர் பிரசாரத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.  காலை 6 மணி முதல் இரவு 10 … Read more

திமிரி பேரூராட்சியில் திமுக வேட்பாளர்களாக களம் காணும் தம்பதி

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. திமுக 12 வார்டுகள், விசிக ஒரு வார்டு, அதிமுக 5 வார்டுகள்,  பாஜ ஒரு வார்டு, நாம் தமிழர் கட்சி ஒரு வார்டு, சுயேச்சை வேட்பாளர்கள் பல்வேறு வார்டுகளில் 24 பேர் என மொத்தம் 44 பேர் போட்டியிடுகின்றனர். இதில், 11வது வார்டில்  நகர செயலாளர் ஜி.இளஞ்செழியன் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அதேபோல், அவரது மனைவி இளஞ்செழியன் 2வது வார்டில் திமுக … Read more

ஆயுஷ்மான் டிஜிட்டல் திட்டம் ஆரோக்கிய சேதுவுடன் இணைப்பு| Dinamalar

புதுடில்லி:ஆரோக்கிய சேது செயலியுடன், ஆயுஷ்மான் பாரத், ‘டிஜிட்டல்’ திட்டத்தை ஒருங்கிணைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும், ஆயுஷ்மான் பாரத், ‘டிஜிட்டல்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு துவங்கி வைத்தார். இத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் மருத்துவ அடையாள எண் தரப்படும்.இதன் வாயிலாக, மக்கள் தங்கள் மருத்துவ ஆவணங்கள், டாக்டர்களின் மருந்து சீட்டு, பரிசோதனை சான்றுகள் உள்ளிட்ட அனைத்தையும் டிஜிட்டல் வடிவில் சேகரித்து வைக்க முடியும்.இந்நிலையில், … Read more

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 22.54 லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழப்பு..!

புதுடெல்லி, கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை இந்தியாவில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் சுமார் 22.54 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலை மக்களவையில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-  புற்றுநோய் என்பது பல்வேறு காரணிகளால் ஏற்படும் ஒரு நோயாகும். குறிப்பாக உயர்ந்து வரும் மக்கள் தொகை, உட்கார்ந்த வாழ்க்கை முறை, புகையிலை பொருட்கள் பயன்படுத்துதல், மது … Read more

மத்திய அரசின் ட்ரோன் இறக்குமதி தடை..இந்த 4 பங்குகளுக்கு கைகொடுக்கலாம்..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறு விமானங்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 2021லேயே ட்ரோன் தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதே சமயம் ட்ரோன் தயாரிப்பு தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் தயாரிப்புக்கு பல ஊக்கவிப்பு சலுகைகளையும் அறிவித்தது. கிரிப்டோகரன்சி மீது வரி உயர்வு..புதிதாக ஜிஎஸ்டி வரி விதிக்க மோடி அரசு திட்டம்.. யாருக்கு பாதிப்பு..! இறக்குமதி ட்ரோன்களுக்கு தடை மத்திய அரசு வெளி நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் … Read more

26ஆம் தேதி புத்தகப்பை இல்லா தினம் ரத்து! பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 26ந்தேதி  புத்தகப் பைகள் இல்லாத தினம் கடைபிடிக்கப்படும் என நேற்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில், இன்று அந்த அறிவிப்பை ரத்து செய்வதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால், கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பள்ளி, கல்லூரிகளும் முழுமையாக நடைபெற தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அதன்படி,  பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை … Read more

ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரிக்கு விராட்கோலி கையெழுத்திட்ட பேட் – மத்திய மந்திரி ஜெய்சங்கர் வழங்கினார்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குவாட் அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஆஸ்திரேலியாவின் பின்னர் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு  சென்று அதனை பார்வையிட்டார்.  அவருடன் ஆஸ்திரேலிய வெளியுறவு மந்திரி மரிஸ் பெய்னும் சென்றிருந்தார். அப்போது விராட்கோலி கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை  ஜெய்சங்கர் மரிஸ் பெய்னுக்கு பரிசாக வழங்கினார் பின்னர் இது குறித்து தமது ட்விட்டர் பதிவில் நியாயமான … Read more

ஒரு வருஷத்துக்கு பால், போன் ரீசார்ஜ் இலவசம்: பழநியை திணறடிக்கும் சுயேச்சைகள்

பழநி: அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு இணையாக சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் அளிக்கும் வாக்குறுதிகள் மிரள வைப்பதாக உள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநி நகராட்சி மற்றும் பேரூராட்சி  வார்டுகளில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் இடங்களில் தங்களை ஜெயிக்க வைத்தால் ஒரு வருடத்திற்கு வீட்டுக்கு பால் இலவசமாக விநியோகம். செல்போன் ரீசார்ஜ் செய்து தருவேன் என்று வாக்குறுதிகளை வாரி வீசி வாக்கு வேட்டையாடி வருகின்றனர். இதுபோன்ற கவர்ச்சிகரமான … Read more

இலங்கை தமிழர் நலனுக்கு இந்தியா தொடர்ந்து பாடுபடுகிறது| Dinamalar

புதுடில்லி:”இலங்கை தமிழர் நலன் சார்ந்த பிரச்னைகளை தீர்க்குமாறு அந்நாட்டு அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது,” என மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.நேற்று லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது முரளிதரன் பேசியதாவது:இலங்கை தமிழர் நலனுக்கு இந்தியா தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. அங்கு தமிழர் உட்பட அனைத்து சமூக மக்களுக்கும் அமைதி, சமத்துவம், நீதி, கண்ணியமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என, பல கட்டங்களில் இலங்கை அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. இதை, ஐ.நா.,மனித … Read more

மராட்டியத்தில் இன்று சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

மும்பை, மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.  அதன்படி, மராட்டியத்தில் இன்று 5 ஆயிரத்து 455 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 6 ஆயிரத்து 248-ஐ விட குறைவாகும்.  இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 78 லட்சத்து 35 ஆயிரத்து 88 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 14 ஆயிரத்து 635 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் … Read more