கர்நாடக நிலைமை தமிழ்நாட்டுக்கும் வந்துவிட கூடாது : கமல் ஹாசன் எச்சரிக்கை!

சென்னை : மக்கள் நீதி மய்ய தலைவரும் , நடிகருமான கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது. ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது’ என்று பதிவிட்டுள்ளார்.

நுாறுநாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி

புதுச்சேரி : புதுச்சேரியில் நுாறு நாள் வேலைத் திட்டத்தை சரியாக நடைமுறைப் படுத்த வேண்டும் என விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர், நுாறுநாள் வேலை திட்டம் எனப்படும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை கேட்டுப் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 66 ஆயிரத்து 628 பேர் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர்.இவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளர்கள் இருப்பதால், அவர்களுக்கு 100 நாட்களுக்கு வேலை … Read more

பழைய பெட்ரோல், டீசல் காரை எலக்ட்ரிக் காராக மாற்றும் திட்டம்.. அசத்தும் டெல்லி அரசு..!

இந்தியாவில் பெர்டோல், டீசல் வாகனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழ்நிலை பாதிப்பது மட்டும் அல்லாமல் மத்திய அரசுக்கும் அதிகப்படியான நிதிநெருக்கடி உருவாகிறது. இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் 2070க்குள் இந்தியா நெட் ஜீரோ அளவீட்டை அடைய இலக்கு நிர்ணயம் செய்துள்ளார். இந்த நிலையில் தான் இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், உற்பத்தியை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில் தற்போது டெல்லி அரசு மிக முக்கியமான மற்றும் அவசியமான திட்டத்தை … Read more

“நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள்; தயவு செய்து எழுந்திருங்கள்!” – மோடிக்கு ராகுல் பதில்

“நீங்கள் இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது: என பிரதமர் மோடியை ராகுல் காந்தி விமர்சித்து இருக்கிறார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸுக்கு எதிராகப் பிரதமர் மோடி சில கருத்துக்களை முன்வைத்தது அடுத்து ராகுல்காந்தி அவருக்குப் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “எனது தாத்தா தனது வாழ்நாள் முழுவதையும் நாட்டிற்காக அர்ப்பணித்தவர். பிரதமர் மோடி என் தாத்தாவைப் பற்றி சான்றிதழ் கொடுக்க வேண்டிய தேவையில்லை. ராகுல் காந்தி – நாடாளுமன்றம் பிரதமர் … Read more

'உங்களுக்கு அந்த உரிமை கிடையாது' கனேடிய பிரதமர் போட்ட ட்வீட்!

கனடாவில் அரசாங்கத்தின் கோவிட்-19 ஆணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்துவது குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். கனடாவில் தலைநகர் ஒட்டாவாவில், கோவிட்-19 தடுப்பூசி ஆணைக்கு எதிராக கனடாவில் உள்ள டிரக் ஓட்டுனர்களும், தடுப்பூசி எதிர்ப்பாளர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கனேடிய நாடாளுமனர் அவலகத்தைச் சுற்றி வாகனங்களின் ஹாரன்களை நீண்ட நேரத்திற்கு ஒலிரச் செய்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈட்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கனேடிய அரசாங்கம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளது. இதனிடையே, நேற்று, … Read more

ஜிஹாப் பிரச்சினை : கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

பெங்களூரு ஜிஹாப்  பிரச்சினை குறித்து கடும் பதட்டம்  நிலவுவதால் கர்நாடகாவில் பள்ளி,கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. சமீபத்தில் கர்நாடக மாநிலம் உடுப்பு அரசு கல்லூரியில் இஸ்லாம் மாணவிகள் ஜிஹாப், பர்தா,, புர்கா போன்ற உடைகளை அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெர்வித்தனர்.  இதையொட்டி அரசு ஜிஹாப் அணியத் தடை விதித்தால் இஸ்லாமிய மாணவிகள் 6 நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, சிக்மகளூர் பகுதிகளில் ஜிஹாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்குள் … Read more

29 தமிழக மீனவர்கள், 79 படகுகளை விடுவிக்க கோரி பிரதமருக்கு முதல்வர் மீண்டும் கடிதம்

சென்னை: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று நேற்றைய தினம் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே நள்ளிரவில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கே இலங்கை கடற்படையினர் ரோந்து பணிக்காக வந்துள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 11 மீனவர்களை கைது செய்து 3 விசைப் படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்ததாகவும், அவர்களை விசாரணைக்காக காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர்.  இலங்கை … Read more

மன்னார்குடி பிரபல தையல் கடையில் பயங்கர தீ விபத்து

திருவாரூர் : மன்னார்குடி பெரியகடை வீதியில் உள்ள பிரபல குட்வில் தையல் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் தையல் கடையில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள், இயந்திரங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன.

தொடரை வெல்ல இந்தியா ரெடி; இன்று இரண்டாவது சவால்| Dinamalar

ஆமதாபாத்: புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி அசத்துகிறது. இன்று நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்று, தொடரை கைப்பற்ற காத்திருக்கிறது. இந்தியா, விண்டீஸ் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்மோதுகின்றன. முதல்சவாலில் இந்தியா சுலபமாக வென்றது. இன்று இரண்டாவது போட்டி(பகலிரவு), உலகின் பெரியஆமதாபாத் மைதானத்தில்நடக்க உள்ளது. இது இந்தியாவின் 1001 வது போட்டி. வருகிறார் ராகுல்: இந்திய அணியின் ‘பேட்டிங்’ வலுவாக உள்ளது. கடந்த போட்டியில் ரோகித் சர்மா(60), இளம் இஷான் … Read more

வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து: பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேச்சு

புதுடெல்லி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறும் போது,  வாரி அரசியலால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படுள்ளது.  வாரிசு அரசியலால் திறமை புறக்கணிக்கப்படுகிறது. காங்கிரஸ் இல்லையெனில் வாரிசு அரசியல் இருந்திருக்காது. காங்கிரஸ் இல்லையெனில் ஊழல் இருந்திருக்காது, எமர்ஜென்சி இருந்திருக்காது. காங்கிரஸ் கட்சியின் பெயரை பெடரேஷன் ஆப் ஸ்டேட் காங்கிரஸ் என மாற்றிக்கொள்ளுங்கள்.   நம் நாட்டு மக்கள் கொரோனா  பிரச்னையை திறம்பட எதிர்கொண்டுள்ளனர். சில தலைவர்கள் தங்கள் தொகுதியைக் … Read more