தேன் குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் வருடியவர் லதா மங்கேஷ்கர்: தமிழக முதல்வர் இரங்கல்
சென்னை: இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘இந்தியாவின் இசைக் குயில் லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைந்த செய்தியால் மிகுந்த வேதனையடைகிறேன். எண்பதாண்டுகாலம் பரந்து விரிந்ததான அவரது இசை வாழ்வில் தனது தேனையொத்த குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் அவர் வருடிச் சென்றுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இசை ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். திராவிடர் கழக … Read more