உலகக் கோப்பையை வென்ற இளையவர் கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ ரொக்கப்பரிசு

மும்பை உலகக் கோப்பையை வென்ற இந்திய இளையவர் கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ ரொக்கப் பரிசுகளை அறிவித்துள்ளது. மேற்கு இந்திய தீவுகளில் 19 வயதுக்குப்பட்டோருக்கான இளையவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி இறுதிச் சுற்று நேற்று ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.  இந்த போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின,  இதில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு  செய்தது. இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 189 ரன்கள் எடுத்து அனைத்து … Read more

சிறு விவசாயிகள் முன்னேற்றத்தில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது – பிரதமர் மோடி பேச்சு

ஐதராபாத்: ஐதராபாத்தின் பதன்சேருவில் உள்ள சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் 50-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நமது கவனம் என்பது 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள சிறு மற்றும் மிகவும் தேவையான விவசாயிகளின் மீது இருக்கிறது.உணவுப் பாதுகாப்பிலும், ஊட்டச்சத்து பாதுகாப்பிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். பருவநிலை மாற்றத்திலிருந்து நமது விவசாயிகளைப் பாதுகாக்க மீண்டும் அடிப்படைக்கு மற்றும் எதிர்காலத்திற்குப் பயணம் என்ற திட்டத்தில் இந்தியாவின் கவனம் இருக்கிறது. வேளாண்துறையில் … Read more

ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அபார ஆற்றலை வெளிப்படுத்தி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவ கல்லூரிக்கு இணையாக தனியார் கல்லூரிகளில் கட்டணம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி-தனியார் மருத்துவக் கல்லுாரி, பல்கலைக்கழகங்களில் உள்ள, 50 சதவீத ‘சீட்’களுக்கு, அரசு மருத்துவக் கல்லுாரிகளில் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரிகள், பல்கலைக் கழகங்களில் கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, தேசிய மருத்துவ கமிஷன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மற்றும்பல்கலைகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயிக்க, தொடர்ச்சி 4ம் பக்கம்நிபுணர் குழு அமைக்கப்பட்டது. … Read more

U19 Worldcup: ஜெர்சி நம்பர் 12; ஒலிம்பிக் பரம்பரை; 5 விக்கெட் ஹால் எடுத்த ஆட்டநாயகன் ராஜ் பவா யார்?

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக் கொண்டன. இதில் இந்தியா வென்று 5வது முறையாக U19 உலகக் கோப்பையைக் கைப்பற்றி இருக்கிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ராஜ் பவா எனும் வேகப்பந்து வீச்சாளர் 5 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் இந்தியாவின் கையை ஓங்க செய்துள்ளார். இவர்தான் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனும் கூட! இந்த ராஜ் … Read more

'கொஞ்சம் நிதானத்தை கடைப்பிடியுங்கள்' உக்ரைனுக்கு ஜேர்மனி எச்சரிக்கை!

ஆயுத ஏற்றுமதிக்கு தடை விதித்ததற்காக தொடர்ந்து ஜேர்மனியை விமர்சித்துவரும் உக்ரைனுக்கு ஜேர்மன் அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகள் ஆயுதங்களையும், இராணுவ படைகளையும் அனுப்பிவருகின்றன. ஆனால், நட்பு நாடுகளில் ஒன்றான ஜேர்மனி, போர் மண்டலங்களுக்கு ஆயுத ஏற்றுமதியை அனுமதிக்க முடியாது என்று தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. அதற்கு பதிலாக, ஹெல்மெட்கள், மருத்துவ உபகரணங்கள் போன்ற உதவிகளை கொடுப்பதாக தெரிவித்துள்ளது. இருப்பினும், … Read more

விஷ்ணு விஷாலின் ‘எப்.ஐ.ஆர்.’ திரைப்படத்துக்கு இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு!

“நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள எப்.ஐ.ஆர். திரைப்படம் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கிறது” என இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். விஷ்ணு விஷால் நடித்து தயாரிக்க, மனு ஆனந்த இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் எப்.ஐ.ஆர். இப்படத்தை வரும் 11ம் தேதி தமிழ்நாடு முழுதும் திரையரங்கில், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இந்நிலையில், இந்திய தேசிய லீக் கட்சித் தலைவர் தடா ரஹீம், எப்.ஐ.ஆர். படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். … Read more

ஜூனியர் உலகக்கோப்பையை கைப்பற்றி இந்திய கிரிக்கெட் அணி சாதனை

ஆன்டிகுவா: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வந்தது.ஆன்டிகுவாவில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.  இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் மளமளவென ஆட்டமிழந்தனர். இதனால் 61 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தத்தளித்தது. இந்திய வீரர்கள் ராஜ் பவா, ரவி குமாரின் பந்து வீச்சில் தடுமாறிய இங்கிலாந்து அணி … Read more

பிப்-06: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

லதா மங்கேஷ்கர் கவலைக்கிடம் | Dinamalar

மும்பை,-கொரோனா பாதிப்பால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசம் அடைந்துள்ளது. இதனால் ‘வென்டிலேட்டர்’ உதவியுடன் சிகிச்சை தொடர்கிறது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.மும்பையை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், 92, கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை பிரிவில், ‘வென்டிலேட்டர்’ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டதால் ஓரளவு குணமடைந்தார். … Read more