கேரள கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை : 9 ஆர் எஸ் எஸ் தொண்டர்களுக்கு ஆயுள் தண்டனை

தலசேரி கேரள கம்யூனிஸ்ட் நிர்வாகி கொலை வழக்கில் 9 ஆர் எஸ் எஸ் உறுப்பினர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சுண்டா பகுதியை சேர்ந்த ரிஜித் சங்கரன் சிபிஐ(எம்)கட்சியின் நிர்வாகியாக இருந்தார். சிபிஎம் மற்றும் ஆர் எஸ் எஸ் இடையே அரசியல் பதற்றம் நிலவி வந்த நேரத்தில் கடந்த 2005ம் ஆண்டு அக்.3ம் தேதி அன்று ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களால் சுண்டா பகுதியிலுள்ள கோவிலின் அருகில் வைத்து ரிஜித் சங்கரன் கொல்லப்பட்டார். சிபிஎம் நிர்வாகி ரிஜித் … Read more

வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும்  டெல்லி சட்டசபை தேர்தல் அட்டவணை

டெல்லி வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி அன்று டெல்லி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி அன்றி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். மேலும் இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. * வேட்பு மனு … Read more

ISRO: முதன்முறையாக விண்வெளியில் துளிர்த்த உயிர்; காராமணி விதைகளை முளைக்கச் செய்து சாதனை!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) பூமிக்கு வெளியே காராமணி விதைகளை முளைக்க வைத்து சாதனை படைத்துள்ளது. விண்வெளி சுற்றுப்பாதை தாவர ஆய்வுகளுக்கான சிறிய ஆய்வு தொகுதியின் (CROPS) ஒரு பகுதியாக பி.எஸ்.எல்.வி-சி60 ராக்கெட்டில் இவை அனுப்பப்பட்டன. விண்வெளிக்குச் சென்ற 4 நாட்களிலேயே விதைகள் முளைத்துள்ளன. டிசம்பர் 30ம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பி.எஸ்.எல்.வி-சி60 ராக்கெட் இரண்டு ஸ்பேடக்ஸ் செயற்கைகோள்களை சுற்றுவட்டப்பாதைதில் நிலை நிறுத்தியது. Life sprouts in space! VSSC’s CROPS (Compact Research Module … Read more

மோசமான வானிலையால் இலங்கை செல்லும் விமானம் திருவனந்தபுரத்தில் தரையிறக்கம்

திருவனந்தபூரம் மோசமான வானிலை காரணமாக இலங்கை செல்ல வேண்டிய விமானம் திருவனந்தபுரத்தில் தரை இறங்கி உள்ளது/ இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு துருக்கியில் இருந்து புறப்பட்டுச் சென்ற துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் 10 விமான பணியாளர்கள் மற்றும் 289 பயணிகள் பயணம் செய்தனர். அதிகாலை விமானம், கொழும்புவை நெருங்கியபோது அங்கு மோசமான வானிலை நிலவியது. இதனால் அங்கு விமானத்தை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டதால் இந்தியாவின் திருவனந்தபுரத்திற்கு திருப்பிவிடப்பட்டது.  திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறங்க … Read more

`தவறான எண்ணத்துடன் கையைப் பிடித்தார்'- நடிகை ஹனி ரோஸ் புகார்; தொழிலதிபர் மீது வழக்கு

கேரளாவைச் சேர்ந்த நடிகை ஹனி ரோஸ் பல்வேறு தனியார் நிறுவனங்களின் திறப்பு விழாவில் கலந்துகொண்டு வருகிறார். ஒரு திறப்பு விழாவில் கலந்துகொண்டபோது அந்த நிறுவன உரிமையாளரான தொழில் அதிபர் இரட்டை அர்த்தத்தில் பேசி தன்னை அவமானப்படுத்தியதாக ஹனி ரோஸ் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு அந்த நபருக்கு சொந்தமான நிறுவனங்களின் நிகழ்ச்சிகளுக்கு செல்ல மறுத்ததாகவும் நடிகை ஹனி ரோஸ் கூறியிருந்தார். இதுகுறித்து நடிகை ஹனி ரோஸ் ஃபேஸ்புக்கில் வெளிப்படையாகப் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவுக்கு பலர் மோசமான கமென்ட்களை … Read more

திருப்பூர் திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

சென்னை திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”திருப்பூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் பிரதான கால்வாய் சரகம் 86.900 கி.மீ-ல் உள்ள கள்ளிபாளையம் நீர் வெளிப்போக்கி (Outlet) வழியாக திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், உத்தமபாளையம் கிராமத்திலுள்ள வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக்கத்திற்கு நாளை(8.01.2025) முதல் 18.01.2025 வரை 10 நாட்களில் 240 மில்லியன் கன அடிக்கு … Read more

7 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை சென்னை வானிலை மையம் தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம். “பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தெற்கு கேரளா கடலோரப்பகுதிகள் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரளா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. 07-01-2025 மற்றும் 08-01-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், … Read more

“பொருளாதார ரீதியாக விடுதலை பெற்றாலும், இன்றும் பெண்கள் ஒடுக்கப்படுகின்றனர்'' -அருந்ததி ராய்

வயநாடு இலக்கியத் திருவிழா 2024 வயநாடு இலக்கியத் திருவிழா 2024 கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் நடைபெற்றது. இதில் நாடுமுழுவதிலும் இருந்து எழுத்தாளர்கள் கலந்துகொண்டனர். அந்தவகையில் பிரபல ஆங்கில எழுத்தாளர் அருந்ததி ராய் பங்கேற்றுள்ளார். அவரை மலையாள நடிகை பார்வதி திருவோத்து நேர்காணல் செய்திருந்தார். நேர்காணலில் அருந்ததி ராய்யின் ‘சின்னஞ்சிறிய பொருள்களின் கடவுள்’ நூல் தனக்கு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது எனத் தெரிவித்தார் பார்வதி. மேலும் பதின் வயதிலிருந்தே அவரை முன்னுதாரணமாகக் கொண்டு பின்தொடர்வதாகவும் கூறினார். … Read more

ஆளுநருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் : திமுகவினர் மீது வழக்கு பதிவு

சென்னை ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவியை ஜனாதிபதி திரும்ப பெற வலியுறுத்தியும் அதிமுக – பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டித்தும் திமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த ஆர்பாட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, … Read more