“டிகே சிவக்குமார், ஹெப்பல்கரால் என் உயிருக்கு ஆபத்து” – சி.டி.ரவி குற்றச்சாட்டு

பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார், மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பல்கர் ஆகியோரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக பாஜக மேலவை உறுப்பினர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத் தொடரின் நிறைவு நாளான கடந்த 19-ம் தேதி, சட்ட மேலவையில் பேசிய பாஜக உறுப்பினர் சி.டி. ரவி, மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் குறித்து அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் கீழ் அன்றைய … Read more

கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் அனுமதி!

புதுடெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்க துறைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மேற்கோள் காட்டி, பணமோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) 2002-ன் கீழ் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அனுமதி கோரி, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு அமலாக்க துறை கடிதம் எழுதியிருந்தது. அந்தக் … Read more

ஜெய்ப்பூர் சமையல் எரிவாயு டேங்கர் லாரி விபத்து பலி எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி, சமையல் காஸ் வெளியேறியதில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. இதனை ஜெய்ப்பூர் மேற்கு டிசிபி அமித் குமார் இன்று (சனிக்கிழமை) உறுதி செய்துள்ளார். ராஜஸ்​தானின் அஜ்மீரில் இருந்து தலைநகர் ஜெய்ப்​பூருக்கு சமையல் காஸ் டேங்கர் லாரி ஒன்று வெள்ளிக்கிழமை சென்று கொண்​டிருந்​தது. இந்த லாரி​யில் 22 டன் சமையல் காஸ் நிரப்பப்பட்டு இருந்தது. அதிகாலை 5.30 மணி அளவில் ஜெய்ப்பூரின் … Read more

மும்பை தாக்குதல் வழக்கு குற்றவாளி தஹவ்வூர் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா?

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படுபவர் தஹவ்வூர் ராணா. இவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்த ராஜீய ரீதியில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்க அரசும் ஆதரவு தெரிவித்துள்ளது. தஹவ்வூர் ராணா பாகிஸ்தானை பூர்விகமாகக் கொண்ட கனட நாட்டு குடிமகன் ஆவார். தற்போது அமெரிக்க அரசு இவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ராணாவை நாடு கடத்த வேண்டும் என இந்தியா கோரி வரும் நிலையில் … Read more

டிசம்பர் 23 முதல் பள்ளிகளுக்கு விடுமுறை! மொத்தம் 8 நாட்கள்.. எங்கு? ஏன்?

School Winter Holiday: டிசம்பர் 23 முதல் பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறைகள் தொடங்கும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பல நாட்கள் மூடப்பட்டிருக்கும்.

வீட்டுக்கு வந்த பார்சலில் ஆண் சடலம்: ஆந்திர போலீஸார் விசாரணை

வீட்டுக்கு வந்த பார்சலில் ஆண் சடலம் இருந்தது தொடர்பாக ஆந்திர மாநில போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், யண்டகண்டி கிராமத்தை சேர்ந்தவர் துளசி. இவருக்கு அரசு சார்பில் வீட்டு மனை வழங்கப்பட்டது. இதில் அவர் தற்போது வீடு கட்டி வருகிறார். தனது இடத்தில் வீடு கட்டி கொடுக்க ஷத்ரிய சேவா சமிதி என்ற அமைப்புக்கு அவர் விண்ணப்பித்திருந்தார். அவர்கள் ஏற்கனவே வீட்டுக்குத் தேவையான டைல்ஸ்கள் உள்ளிட்ட பொருட்களை போதுமானவரை அனுப்பி இருந்தனர். … Read more

ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்களே அலர்ட்… இதற்கு கடைசி நாள் நீட்டிப்பு – உடனே செய்யுங்க

Ration Card News: ரேஷன் அட்டைத்தாரர்கள் தங்களின் e-KYC செயல்பாட்டை மேற்கொள்ள கடைசி நாள் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம்: நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தகவல்

முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம் என நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி அப்போதைய முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேர் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமானப் படை தளத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டனுக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். … Read more

வீட்டில் மின்சாரம் திருட்டு கண்டுபிடிப்பு: சம்பல் தொகுதி சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கு ரூ.1.91 கோடி அபராதம்

உத்தர பிரதேசத்தின் சம்பல் தொகுதி சமாஜ்வாதி எம்.பி ஜியா உர் ரகுமான் வீட்டில் மின்சாரம் திருட்டு நடந்துள்ளதை கண்டுபிடித்த மின்சாரத்துறை அதிகாரிகள் ரூ.1.91 கோடி அபராதம் விதித்து மின் இணைப்பை துண்டித்தனர். உத்தர பிரதேசத்தின் சம்பல் தொகுதியில் உள்ள ஜமா மசூதியில் கடந்த மாதம் 24-ம் தேதி ஆய்வு நடத்த சென்றபோது வன்முறை ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்தனர். இதில் இத்தொகுதியின் சமாஜ்வாதி கட்சி எம்.பி ஜியா உர் ரகுமான் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. … Read more

ஜெய்ப்பூரில் சமையல் காஸ் வெளியேறியதில் டேங்கர் லாரி வெடித்து 11 பேர் பரிதாப உயிரிழப்பு: நடந்தது என்ன?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் டேங்கர் லாரி விபத்துக்குள்ளாகி, சமையல் காஸ் வெளியேறியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த பயங்கர விபத்தில், அருகே நின்றிருந்த சுற்றுலா பேருந்து பயணிகள் உட்பட 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 35 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். 14 பேரை காணாததால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. ராஜஸ்​தானின் அஜ்மீரில் இருந்து தலைநகர் ஜெய்ப்​பூருக்கு … Read more